Canegie Mellon Univeristy
Narayanai Padya Nam Alwar
Front matter
க
HAI
T
ஸ்ரீமதே ராமாநுஜாய நம :
ஆழவரா எம்பெருமானார் ஜீயா திருவடிகளே சரணம்
நாராயண எனைப்
பாடிய
நம் ஆழ்வார்கள்
ஸ்ரீலக்ஷ்மீநாராயண ராமாநுஜ தாஸன
ஆழவார்கள் அமுத நிலையம்
37 சௌத கூவம ரோட
கோமளேசுவரனபேடடை, செனனை
அடக்க விலை ரூ
5
1974
பதிப்புரிமை
ஸ்ரீ :
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
நாராயணனைப் பாடிய
நம் ஆழ்வார்கள்
ஸ்ரீலக்ஷ்மீநாராயண ராமாநுஜ தாஸன்
ஆழ்வார்கள் அமுத நிலையம்
37, சௌத் கூவம ரோட்
கோமளேசுவரன்பேட்டை, சென்னை
அடக்க விலை ரூ. -
5
1974
பதிப்புரிமை
முதல் பதிப்பு: ஏப்ரல், 1984
பதிப்புரிமை:
ஸ்ரீலக்ஷ்மீநாராயண ராமாநுஜ தாஸன
5
நூலின் விலை ரூ.
தபாற் செலவு 0-50
மற்ற விவரங்கட்கு :
ஆழ்வார்கள் அமுத நிலையம்
37, சௌத கூவம் ரோட்
கோமளேசுவரன்பேட்டை, சென்னை-2.
அச்சிட்டோர் :
ஸ்ரீ கோமதி அச்சகம்,
7, சின்னப்ப ராவுத்தர் தெரு,
திருவல்லிக்கேணி, சென்னை-600 005
ஸ்ரீமதே ராமாநுஜாய நம அடியேன விண்ணப்பம் (பதிப்புரை) ஆட்சியில் இறைவன படைப்பாகிய இவவுலகம் இறைவன இயங்குகின்றது இறைவன இவவுலகப் பொருளகள யாவற்றிலும் மா நுட கோடிகளின மனத தகததேயும அந்தாயாமியா யிருந்து ஆட்சி புரிந்து அனபுரு வாகி யிருப்பதாலேயே நாராயணன எனப்படுகின்றான பரமபதத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி சமேதனாய விளங்கும் வைகுநத நாதனும, பாறகடலுள ஆதிசேஷன மீது பள்ளி கொண்டிருக்கும் ஸ்ரீய:பதியும், தென்னிலங்கை திசை நோககித திருநயனம புரியும திருவரங்கபபெரு மானும, மற்றும நாடெங்கும பலவேறு முறைகளில் திருககோலங் கொண்டு எழுந்தருளியுள்ள பெருமானகளும ஸ்ரீ மந் நாராயணனுடைய அமசஙகளேயாகும உலகிலுள்ள கோடிக்கணக்கான ஜீவகோடி களின உஜஜீவனார் ததமாக இததகைய நிலைகளிலிருந்து அருளாட்சி புரி கினறான பரந்த பூமிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும் அதிபதியா யிருககும அரசன தன ஆடசி செவ்வனே நடை பெறுவதற்குப் பலரைத் தன் பிரதிநிதிகளாகக கொணடு செங்கோல செலுத்துவது போல, பகவான தன பாகிய இவவுலகையும் ஜீவகோடிகளையும் ஆட்சி புரிவதற காக அறிவாளிகளையும, ஆறறல மிககவாகளையும் தன பிரதி நிதிகளாக நியமிதது இருப்பதோடு அவாகளுககுத தேவை பகவான படைப
யான எல்லாப் பொருள்களையும் வசதிகளையும் உதவி,
பூமண்டலத்தை நல்லாட்சி புரிந்து வருகிறான்.
குடி மக்கள் தவறு செயதால் அரசன் தண்டிப்பது போல
அரசப்பிரதிநிதிகள் ஆதிக்கவெறி கொண்டு நல்லாட்சி
புரியாமல் நானே அரசனென்று அகங்காரமும், எல்லாப்
பொருள்களும் என்னுடையதே யென்று மமகாரமும்
கொண்டு கொடுங்கோல் புரிவார்களேயாகில், சர்வவல்
லமை வாய்ந்த இறைவன் அதைக் கண்டு வாளா இருப்
பானா? தன பிரதிநிதிகளாகிய நிலம், நீர், தீ, காற்று,
ஆகாசம், ஆகிய தன் ஆயுதங்களைக் கொண்டு தண்டிக்கிறான
என்பது இன்றுள்ள நிலைமையில் பிரத்யக்ஷ உண்மையாகும்.
எனவே,
“உண்ணும் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையு மெல்
கண்ணன் எம்பெருமானென்று கணகள் நீர்மல்கி" [லாம்
என்று நம்மாழ்வார் திருவாய்மலர்ந்தருளியபடி இவ்வுலகப்
பொருள்களெல்லாம் ஸ்ரீமந் நாராயணனுக்கே உரிய
தென்றும், தன்னை பகவானுடைய தொண்டனென்றும்
எண்ணிப் பணியாற்றினால், நாடும் மக்களும் நலம் பெறு
வார்களென்பதில் ஐயமில்லை
ஸ்ரீமந் நாராயணன திருவருளால் அவதரித்த ஆழ்வார்
கள் பாடி யருளிய நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் பாதை
தவறி நடககும் இவ்வுலக மாந்தரைத் திருத்திப் பணி
கொள்ளும் வகையை அருளிச செய்துள்ளார்கள். ஆழ்வார்
களுக்குப் பின தோனறிய நம ஆசார்ய புருஷர்களும்
அதையே பலபடியாக உபதேசித்து மக்கள் உய்யும் வகை
யைக் காட்டியுள்ளார்கள.
சம்சார சாகரமென்னும் துன்ப அலைகளிலிருந்து மக்கள்
கரை ஏறுவதற்குரிய வழி ஸ்ரீமந் நாராயணனைச் சரண
டைவதே என்பதை யுணர்ந்த ஆழ்வார்கள் அருளிச் செய்த
தாலாயிர திவ்ய பிரபந்தத்திலிருந்து பாவங்களைப் போக்கிப்
5
பாவணமாக்கும் நாராயணனைக் குறித்துப் பாடியுள்ள 116
திவ்விய பாசுரங்கள் கொண்ட இந்நூலை ஆழ்வார்கள்
அமுத நிலையத்தின் எட்டாவது வெளியீடாக வெளியிடு
கின்றோம்.
வெங்கலியின் கொடுமையிலிருந்து நீங்கி இன்புற்று
வாழ்வதற்கு ஹரி நாம சங்கீர்த்தனமே அரிய சாதனமெனக்
கொண்டு இந்நூலினைப் படித்துப் பயன் பெறும் பகவதன்
பர்கள், எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டி ஏனையோரி
டையேயும் இந்நூலினைப் பரப்பி மாமாயன் மாதவன்
வைகுந்தன் அருளுக்குப் பாத் திரர்க ளாவார்களென
பிரார்த்திக்கின்றோம்.
அடியேன்-தாஸா நுதாஸன்
ஸ்ரீலக்ஷ்மீநாராயண ராமாநுஜ தாஸன்
7 யாகும். இதனால் உலகம் இறைவனன்றி இயங்காது என்பது அறியப்பட்டது. அந்த இறைவன் வேதங்களாலே உணர்த்தப் படுகிறான்; இறைவன் மட்டுமல்ல, ஜீவனும் உணர்த்தப் படுகிறான்; பிரக்ருதியும் (அறிவிலாப் பொருளாகிய அசித்தும்) உணர்த் தப்படுகிறது. வேதங்களில் சொல்லப்படுகிறதெய்வங்களெல் லாம் உண்மையானவர்களே. புண்ணியவசத்தால் நம்மைக் காட்டிலும் உயர்ந்த நிலையில், அதாவது ஜீவாத்மாக்களுக்கு அவர்கள் விரும்பிய நன்மைகளை ஆக்கித் தருவதற்காக எம்பெருமானால் படைக்கப்பட்டவர்களே. ஆட்சி புரிகிற அரசன் பல பேர்களைக் கொண்டு தன் குடிமக்களைக் காப்பது போலவே எம்பெருமானும் இப்படிச் செய்கிறான். இந்த நிலை ஒருநாள் தோன்றி மற்றொரு நாள் அழிந்து போகக் கூடியதல்ல; நித்யமானதே. மாமரம் அழிந்தாலும் அந்த இனம் அழியாமல் வழிவழியாக வருவது போல, இந்த லீலா விபூதியும் (விளையாட்டுலகமும்) அழித்து அழித்து ஆக்கப்படுகிறது. நாம் அறிய வேண்டிய-அறிகிற அந்த அர்த்தங்களெல் லாம் வடமொழி வேதநூல் கொண்டும் தமிழ்மறைகளாகிற ஆழ்வார்களின் பிரபந்தங்கள் கொண்டும் அறுதியிடப்படு கின்றன. வேதம் ஆக்கப்பட்டதல்ல - அதனால் ஒரு காலத்தில் உண்டானதல்ல; நித்யமானது; தோற்றமும் மறைவும் இல்லாதது. இதுதான் நம் பாரத தேசத்தில் தொன்று தொட்டு வழிவழி வருகின்ற ஸ்ம்ருதி, இதி ஹாஸ புராணங் களின் வாயிலாக அறியப்படுகிறது; இவை தாம் வேதத்தின் பொருளைத் தெளிவாகக் காட்டக்கடவன. இதுவரை நாம் அறிந்தது சித் அசித் ஈசுவரனோடு கூடியது உலகம் என்பதும், இவ்வர்த்தத்தைத் தென்மொழி வடமொழி வேதங்களால் அறிகிறோம் என்பதும், வேதம் .
2 யாகும். இதனால் உலகம் இறைவனன்றி இயங்காது என்பது அறியப்பட்டது. அந்த இறைவன் வேதங்களாலே உணர்த்தப் படுகிறான், இறைவன் மட்டுமல்ல, ஜீவனும் உணர்த்தப் படுகிறான்; பிரக்ருதியும் (அறிவிலாப் பொருளாகிய அசித்தும்) உணர்த் தப்படுகிறது. வேதங்களில் சொல்லப்படுகிறதெய்வங்களெல் லாம் உண்மையானவர்களே. புண்ணியவசத்தால் நம்மைக் காட்டிலும் உயர்ந்த நிலையில், அதாவது ஜீவாத்மாக்களுக்கு அவர்கள் விரும்பிய நன்மைகளை ஆக்கித் தருவதற்காக எம்பெருமானால் படைக்கப்பட்டவர்களே. ஆட்சி புரிகிற அரசன் பல பேர்களைக் கொண்டு தன் குடிமக்களைக் காப்பது போலவே எம்பெருமானும் இப்படிச் செய்கிறான். இந்த நிலை ஒருநாள் தோன்றி மற்றொரு நாள் அழிந்து போகக் கூடியதல்ல; நித்யமானதே. மாமரம் அழிந்தாலும் அந்த இனம் அழியாமல் வழிவழியாக வருவதுபோல, இந்த லீலா விபூதியும் (விளையாட்டுலகமும்) அழித்து அழித்து ஆக்கப்படுகிறது. நாம் அறிய வேண்டிய - அறிகிற அந்த அர்த்தங்களெல் லாம் வடமொழி வேதநூல் கொண்டும் தமிழ்மறைகளாகிற ஆழ்வார்களின் பிரபந்தங்கள் கொண்டும் அறுதியிடப்படு கின்றன. வேதம் ஆக்கப்பட்டதல்ல - அதனால் ஒரு காலத்தில் உண்டானதல்ல; நித்யமானது; தோற்றமும் மறைவும் இல்லாதது. இது தான் நம் பாரத தேசத்தில் தொன்று தொட்டு வழிவழி வருகின்ற ஸ்ம்ருதி, இதிஹாஸ புராணங் களின் வாயிலாக அறியப்படுகிறது, இவை தாம் வேதத்தின் பொருளைத் தெளிவாகக் காட்டக்கடவன. இதுவரை நாம் அறிந்தது சித் அசித் ஈசுவரனோடு கூடியது உலகம் என்பதும், இவ்வர்த்தத்தைத் தென்மொழி வடமொழி வேதங்களால் அறிகிறோம் என்பதும், வேதம் 9 உண்மை நிலை இதுவாயிருக்க இதனை உணராது உலகில் பலவாறாகத் திரித்துக் கூறி அனர்த்தப்பட்டுப் போகிற நிலையைக் கண்டு ஆழ்வார், 'ஓஓ உலகின தியல்வே, ஈன்றோளிருக்க மணை ரோட்டிப், படைத்திடந் துண்டுமிழ்ந் தளந்து, தேர்ந்துலகளிக்கும் முதற்பெருங் கடவுள் நிற்பப், புடைப்பலதானறி தெய்வம் பேணுதல், தனது புல்லறிவாண்மை பொருந்தக் காட்டிக் கொல்வன முதலா வல்லன முயலும், இனைய செய்கை யின்பு துன்பளித் தொன்மா மாயப் பிறவியள் நீங்காப், பன்மா மாயத் தழுந்துமா நளிர்ந்தே” என்று உண்மைப் பரம் பொருளான ஸ்ரீமந் நாராயணனை விட்டு இளந் தெய்வங்களைப் பரம் பொருளென மருண்டு வணங்கி இன்ப துன்பங்களுக்கு இருப்பிடமான பிறவிப் பெருங் கடலில் அழுந்துவதே! ஈதென்ன உலகியற்கை என்று இரங்குகின்றார். இதையே வள்ளுவரும், "பொருளல்லவற்றைப் பொருளென்றுணரும் மருளானாம் மாணாப் பிறப்பு" என்று கூறியுள்ளார். அதனால் உண்மைப் பொருளை உணர்ந்தவர்களான, எம்பெருமானாலே தங்களுடைய அஜ்ஞான மழிந்து இறைவ னிடம் காதலன்பு பெருகும்படியான ஜ்ஞானத்தைப் பெற்ற வர்களான ஆழ்வார்கள் ஒருமிடறாக (ஒரே கருத்தாக) ஸ்ரீமந் நாராயணனையே காரண வஸ்துவாக காரணம் துத்யேய?' என்றபடி பாடியருளினார்கள். அவ்வுண்மையை இந்நூலின் பதிப்பாசிரியரான ஸ்ரீ லக்ஷ்மீநாராயண ராமாநுஜ தாஸர் இந்நூலில் தெற்றென விளங்கும்படி ஸ்ரீமந் நாராயணனின் பரத்வத்தையும், 9 ** உண்மை நிலை இதுவா பிருக்க இதனை உணராது உலகில் பலவாறாகத் திரித்துக் -- P அனர்த்தப்பட்டுப் போகிற நிலையைக் கண்டு ஆழ்வார், 'ஓஓ உலகின தியல்வே, ஈன்றோரிருக்க மணை நீராட்டிப், படைத்திடந் துண்டுமிழ்ந் தளந்து, தேர்ந்துலகளிக்கும் முதற் பெருங் கடவுள் நிற்பப், புடைப்பல் தானறி தெய்வம் பேணுதல், தனது புல்லறிவாண்மை பொருந்தக் காட்டிக் கொல்வன முதலா வல்லன முயலும், இனைய செய்கை யின்பு துன்பளித் தொன்மா மாயப் பிறவியள் நீங்காப், பன்மா மாயத் தழுந்துமா நளிர்ந்தே” என்று உண்லமப் பரம்பொருளான ஸ்ரீமந் நாராயணனை விட்டு இளந் தெய்வங்களைப் பரம் பொருளென மருண்டு இன்ப துன்பங்களுக்கு இருப்பிடமான பிறவிப் பெருங் கடலில் அழுந்துவதே! ஈதென்ன உலகியற்கை என்று இரங்குகின்றார். இதையே வள்ளுவரும், பொருளல்லவற்றைப் பொருளென்றுணரும் மருளானாம் மாணாப் பிறப்பு" என்று கூறியுள்ளார். அதனால் உண்மைப் பொருளை உணர்ந்தவர்களான, எம்பெருமானாலே தங்களுடைய அஜ்ஞான மழிந்து இறைவ னிடம் காதலன்பு பெருகும்படியான ஜ்ஞானத்தைப் பெற்ற வர்களான ஆழ்வார்கள் ஒருமிடறாக (ஒரே கருத்தாக) ஸ்ரீமந் நாராயணனையே காரண வஸ்துவாக 'காரணம் துத்யேய:' என்றபடி பாடியருளினார்கள். அவ்வுண்மையை இந்நூலின் பதிப்பாசிரியரான பூர் லக்ஷ்மீநாராயண ராமாநுஜ தாஸர் இந்நூலில் தெற்றென விளங்கும்படி ஸ்ரீமந் நாராயணனின் பரத்வத்தையும், வணங்கி
10
சௌசீல்ய சௌலப்ய குணங்களையும் ஆழ்வார்களின்
அருளிச் செயல்களாகிய நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தி
விருந்தும், சுருதி, ஸ்ம்ருதி, உபநிஷதம், இதிஹாஸ புராணங்
களிலிருந்தும், பகவத்கீதை, திருக்குறள் முதலியவற்றிலிருந்
தும் தக்க மேற் கோளகள் பலவற்றுடன் எடுத்துக் காட்டி
புள்ளார்.
மற்றும் இந்நூலில் ஸ்ரீமந் நாராயணனின் பரத்வத்தை
யும் காரணத்வத்தையும் தெற்றென விளக்கும் பொருட்டு
தக்க ஆதாரங்களுடன் மூன்று பெரியார்களின் கட்டுரை
களும் வெளியிடப்பட்டுள்ளன. இந்நூலின் சிறப்பிற்கு இக்
கட்டுரைகள் மேலும் ஏற்றம் தருவதாய் அமைந்துள்ளன.
இந்நூலின் பதிப்பாசிரியர் ஏற்கனவே ஆறு நூல்களைக்
கைம்மாறு கருதாது வெளியிட்டுள்ளார். இருப்பினும்
திருப்தி யடையாமல், இந்நூலையும் வெளியிடுகின்றார். இத
னால் பொதுவாக உண்மைப் பொருளை அறிய விரும்புபவர்
களுக்கும், சிறப்பாக ஸ்ரீமந் நாராயணனைப் பற்றி அறிய
விரும்புபவர்களுக்கும் பேருபகாரம் செய்தவராகிறார்.
இவர்தம் முயற்சி சிறக்க வேண்டுமென்றும், நீண்ட
ஆயுளும் நோயற்ற வாழ்வும் உயர் பண்பும் பெற வேண்டு
மென்றும் எல்லாம் வல்ல எம்பெருமான் திருவடிகளில்
வேண்டிக்கொள்கிறேன்
19, பாஷ்யகார்லு நாயுடு தெரு,
அன்பன்
கொண்டித்தோப்பு, R. எதிராஜ ராமாநுஜதாஸன்
சென்னை-79
7-2-84.
ஸ்ரீமதே ராமாநுஜாய நம
பொருளடக்கம்
1. பரிந்துரை
2. ஆழ்வார்கள் அவதாரப் பெருமை
3. ஆழ்வார்கள் அவதாரம் எதற்காக?
4. ஆழ்வார்கள் நாராயணனைப் பாடியதேன்?
5. அருளிச் செயலின் ஏற்றம்
6. நாராயண நாமத்தின் ஏற்றம்
7. அகிலலோக நாயகன நாராயணனின் ஆட்சி
8. போற்றுதற்குரிய பரமபொருள் நாராயணன்
9 இல்லற வாழ்ககையின் குறிக்கோள் பகவத் பாகவத
ஆராதனையே
10. துவாபரயுகத்தில் முநிவர்களின் பரம்பொருள் நிரூபணம்
11. துவாபர கலியுகங்களில் ஆழ்வார்கள் நிரூபணம்
பெரியாழ்வார் நிலை நாட்டிய நாராயண பரத்வம்
13. கூரத்தாழ்வான் நிலை நாட்டிய நாராயண பரத்வம்
14. கவியரசர்கள் நிலைநாட்டிய நாராயண பரத்வம்
15.
நாராயண பரத்வத்தை உணர்த்தும் கேசவத் திரு
நாமச் சிறப்பு
16. பகவான் கீதையில் காட்டிய நாராயண பரத்வம்
17. மா நுடகோடிகள்
உஜ்ஜீவிக்க பகவான் அருளிய
உபதேசம்
18. ஸ்ரீமந் நாராயணனின் திருநாமங்களின் ஏற்றம்
19. யமதர்மன் தூதுவர்களுக்குச் செய்த உபதேசம்
20. ஆழ்வார்கள் வரலாறு
21. துன்பம் தோய்ந்த உலக வாழ்வு
22. ஆழ்வார்கள் கலங்கிய மாநுட வாழ்வு
12 30 23. மாண்பு மிக்க மா நுடப் பிறவி 24. கிருஹஸ்தன் கடமை 25. சம்சாரி எத்தகையவன்? 26. சம்சாரம் ஒரு விஷனிருக்ஷம் 27. சம்சார பந்தம் தீர பகவந் நாமங்களே தஞ்சம் 28. பகவதாராதனையின் பெருமை 29. பகவதாராதனையின் பலன் ஞாநியின் பெருமை 31. உத்தம பாகவதர்கள் யார்? 32. போற்றற்தரிய பாவதன் சேவை 33. ஏற்றம் மிக்க சத்ருக்ந ஆழ்வாரின் தொண்டு 31. பாகவத ஆராதனையின் பலன் 35. பகவத் பாகவத ஆராதனைகளே விமோசனத்திற்கு வழியாகும் 36. நாட்டின் நெருக்கடிக்குக் காரணமென்ன? 37. அறிஞர் பெருமக்களின் கடமை என்ன? 38. மகாத்மா காந்தியின் மாபெரும் சேவை 39. நாட்டின் எழுச்சிக்கு ஆன்மீக உணர்வே தக்க மருந்து 40. இளம் பருவமே இறைவனை வழிபடுதற்குரிய காலம் 41. பொய்கை யாழ்வார் பாடிய திவ்விய பாசுரங்கள் 42. ஸ்ரீபூதத்தாழ்வார் பாடிய திவ்விய பாசுரங்கள் 43. ஸ்ரீ பேயாழ்வார் பாடிய திவ்விய பாசுரம் 44. ஸ்ரீதிருமழிசை யாழ்வார் பாடிய திவ்விய பாசுரங்கள் 45. ஸ்ரீநம்மாழ்வார் பாடிய திவ்விய பாசுரங்கள் ஸ்ரீ குலசேகர ஆழ்வார் பாடிய திவ்விய பாசுரங்கள் 27. ஸ்ரீ பெரியாழ்வார் பாடிய திவ்விய பாசுரங்கள் 48. ஸ்ரீ திருமங்கையாழ்வார் பாடிய திவ்விய பாசுரங்கள் 49. ஸ்ரீ ஆண்டாள் பாடிய திவ்விய பாசுரங்கள் 50. ஸ்ரீ திருவரங்கத்தமுதனார் பாடிய திவ்விய பாசுரம் 51. நாராயணனே பரம் பொருள் 52. முதற்பெருங் கடவுள் 53. மூவருள் முதல்வன் மஹாவிஷ்ணு
ஸ்ரீமதே ராமாநுஜாய நம
நாராயணனைப் பாடிய நம்
நம் ஆழ்வார்கள்
ஆழ்வார்கள் அவதாரப் பெருமை
ஆழ்வார்கள் அவதாரம் செய்த காலம் தமிழ்நாட்டிற்கு
ஓர் பொற்காலம் ஆகும். சங்க காலத்திற்கு முன்பும்
பின்பும் தமிழகம் அறிவுத் துறையிலும் ஆன்மீகத் துறை
யிலும் பிற்பட்டு ஒளிமங்கிக் கிடந்த சமயத்தில் ஆழ்வார்கள்
அவதரித்துத் தங்கள் அமுத மயமான திவ்விய பாசுரங்
களால் தமிழகத்தின் பெருமையை பாரத நாடு என்னும்
அரங்கத்தில் பெருமை பெற்று விளங்கச் செய்தார்களென்
பதில் ஐயமில்லை.
காலத்திற்கு முன்னரும் பினனரும் சிறந்த
புலவர்கள் பலர் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்
கீழ்க்கணக்கு, மற்றும் பல நூல்களை இயற்றினார்களெனினும்,
அவை யாவும் புலவர் பெருமக்கள் ஒரு சிலரால் மட்டுமே
புரிந்து கொள்ளக்கூடிய இலக்கிய நடையில் இருந்தமையால்
அதனை அறிய விரும்பிய லக்ஷக்கணக்கான சாதாரண
மக்களுக்கு அவற்றால் யாதொரு பயனும் ஏற்படாததே
அறிவுத் துறையில் மக்கள் சமுதாயம் பிற்போக்கு அடைந்
திருந்ததற்குக் காரணமாகும்.
சங்க
4 நான் "பரித்ராணாய சாதூகாம் விநாசாயச துஷ்க்ருதாம் தர்ம சம்ஸ்தாபநார்த்தாய சம்பவாமி யுகேயுகே.'' (சாதுக்களைக் காக்கவும் துஷ்டர்களை யழிக்கவும் தர்மத்தை நிலை நிறுத்தவும் யுகங்கள் தோறும் அவதாரம் செய்கின்றேன்) என்று அர்ஜுனனுக்குத் திரு வாய்மலர்ந்தருளியபடி பகவான தான் மேற்கொண்ட அவதாரங்கள் யாவும் வடநாட்டிலேயே நிகழ்ந்தவையாகும். இதனால் வடநாடு ஏற்றம் பெற்றதாயினும், பகவானுக்கு ஒரு பெருங் குறையே யெனலாம். ஆழ்வார்கள் அவதாரம் எதற்காக! பலவகை வரலாற்றுப் பெருமை வாய்ந்த அவதாரங்கள் பல வற்றிற்குப் பிறகு, பகவான கலியின் கொடுமையிலிருந்து பக்தர்களை ரக்ஷிப்பதற்குத் திருவேங்கட மலையில் எழுந் தருளியிருந்து காக்ஷி தந்து கோடிக்கணக்கான மக்களுக்கு அபயம் தந்து கிருபை செய்து வருவது ப்ரத்யக்ஷமாகும். இவ்வாறு தாயன்பு கொண்ட பகவான் களாலும் உலக மாந்தர் உஜ்ஜீவிக்கும் பொருட்டு தேவர், மநுஷ்யர், திர்யக் (மிநகம்) ரூபமாகப் பல அவதாரங்கள் எடுத்தும் மாநுடகோடிகள் திருந்தவில்லையே யென வருந்தினார். ஆயினும கருணை உள்ளம் கொண்ட பகவான் கொடுமை மிக்க இக் கலியுகத்தில் மா நுடகோடிகள் சம்சார சாகரத்தில் மூழ்கி, 'மரக்கலம் இழந்த மாலுமி' போல் தவிக்காமல் கடைத்தேறும்பொருட்டு அநந்த கருட விஷ்வக் சேநர்களையும் தன் திவ்விய பஞ்சாயுதங்களையும் அன்பிற்குரிய பரிவாரங்களையும் தமிழகத்தில் மானுட உருவமாக ஆழ்வார் களாக அவதரிக்கச் செய்தார். பற்பல அவதாரங்களின் மூலம் இயம்புதற்கரிய எண்ணற்ற அற்புதச் செயல் களைப் புரிந்தும் தன் அகடி தகடநா சாமர்த்தியத்தை அறிந்துணராத மாநுடகோடிகள், ஆழ்வார்கள் அவதாரத் தின் மூலமாவது தன் ஸ்வரூப ரூப குண விபூதிகளின் 15 ஏற்றத்தை உணர்ந்தறியும் பொருட்டு பகவான் ஆழ்வார் களுக்கு மயர்வற மதிநலம் அருளினார். ஆழ்வார்கள் நாராயணனைப் பாடியதேன்? பகவத் கிருபையால் அஞ்ஞானம் நீங்கி மெய்ஞ் ஞானத்தை யடைந்த ஆழ்வார்களின் அவதாரம் மிக்கப் புனிதமும் போற்றுவதற் குரியதுமாகும். அதனாலேயே அவர்கள் ஒப்புயர்வற்ற ஆதியந்தமில்லாத நாராயணனையே பாடுவதற்குரிய பரம்பொருளாக உணர்ந்தறிந்து அன வரதமும் அப்பெருமானுடைய ஆனந்தகுண மயமான திரு விளையாடல்களிலே யே ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்களாய் அவன் கல்யாணகுண விசேஷங்களைப் பற்பலவாறு பாடுவதே தம் பணி யெனக் சரதினார்கள். எனவே பாடிப் பரவி ஏத்துதற்குரிய பரம்பொருள் அவன் ஒருவனே என்பதை உணர்ந்த ஆழ்வார்கள் வேறு எவரையும் பாடுவதற்குரிய பொருளாகக்கருதாமல் நாராயணனையே பாடியருளினார்கள். ஆழ்வார்கள் பாடியருளிய திவ்விய பாசுரங்கள் தமிழ் நாடெங்கும் பக்தி உணர்வையும் ஆன்மீக ஞானத்தையும் பரப்பி, மக்களைப் பக்திப் பெரு வெள்ளத்தில் திளைக்கச் செய்தன ஆழ்வார்கள் காலத்திற்குப் பிறகு சில நூற் றாண்டுகள் மறைந்து போயிருந்த திவ்விய பிரபந்த பாசுரங்கள் ஸ்ரீமந் நாதமுனிகளின் மகத்தான முயற்சி யாலும் பகவத் கிருபையாலும் நம்மாழ்வார் திருவருளால் அடையப் பெற்றுத் திவ்விய பிரபந்தங்களாகத் தொகுக்கப் பெற்றுப் பிரசித்தியடைந்தன. இத்திவ்விய பிரபந்தங்கள் நாதமுநிகள் முதல் மணவாள மாமுநிகள் வரையிலுள்ள பல்வேறு ஆசார்யர்களாலும் ஆசார்யர்களாலும் அவர்களுடைய அவர்களுடைய சிஷ்யர் களாலும் அனுபவிக்கப் பெற்றுச் சிறப்புற்றன. அருளிச்செயலின் ஏற்றம் மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்களுடைய திவ்விய பிரபந்தங்களை "அருளிச் செயல்கள் என்று போற்றிப் புகழ்ந்த நம் ஆசாயாள் அவற்றை அடிப் படையாகக் கொண்டு ஸ்ரீவாகபூஷணம், ஆசார்ய ஹ்ருதயம், முமூக்ஷுப்படி தத்வ ப ' --தட்' 'பெரும் க்ரந்தங் களை அருளியுள்ளார்கள், மணவா 57 மாமுநிகள் அருளிய உபதேச ரத்திநமாவையில், سده و در دلم می دنی ته ل ப * ''தெருளுற்ற = ','' - 5 3.1 அறிவாரார்? அருளிச்ச --- ர்' பெற்ற நா தழுமுதத் சல்லால் 7 பசு என்றும், *ஆழ்வார்களையும் அருளச் செயல்களையும் தாழ்வாக நினப்பயர்கள் தாம் நரகில் வீழ்வார் கள் எனது நினைத்து நஞ்சே எப்பொழுதும் நீயவர்பால் சென்றணுகக் '- 5" என்னும் திருவாயம்மா.. 'பிருப்பது நம் ஆழ்வார் களின் ஏப்பதயு ர்களது அருளிச் செயல்களின் சிறப்பையும் குறிப்பிடு தாரும். நாலாயிர திவ்விய பந்தம் ஓர் அரிய பக்திச் சுரங்க மாகும். அதன் இரு ம - நகதப் பல முறை படித்துப் பக்திப் பெரு வெள்ளத்தில் மூழ்கியம்: சிந்தனை செய்து பார்த் தால், ஆழ்மகன் *Ar--- 14 அவதார விசேஷங்களையும் அமாநுஷ். * 4 #7 : ராகரமச் செயல்களையும் குறித்துப் பாடியிருக்கும் பெரும் தெள்ளிதில் விளங்கும். ஆயினும் அவ யா, வற். நயும் ''- சாவரேயா சரண்யனா யும், ஆதியந்தமற்ற பரம் பாளயும், மேவித் தொழும் பிரமன், சிவன், இந்திர திகமெல்லாம் நாவிக்கமல முதற்கிழங்” காயும் இருந்து அவரவர்கள் காரிய பலனகளைத் தருகின்ற "நாராயணன் பரம் பொருளையே மிகவும் போற்றிப் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்- பல் வேறு 17 நாராயண நாமத்தின் ஏற்றம் நாராயணன் எனனும் சொல்லுக்கு நாரங்களுக்கு அயன மாய் இருப்பவனென்று பொருள். சித (அறிவுள்ள உயிர்கள்), அசித்(அறிவற்ற பொருள்கள்) யாவும் நாரங்கள் எனப்படும். இவை யாவற்றிற்கும் அயனமாய் (ஆதாரமாய்) இருப் பவன் நாராயணன் ஒருவனே! இவற்றைத் தனக்கு ஆதார மாய்க் கொண்டிருப்பவனும் நாராயணனே! மற்றெந்த தெய்வங்களுக்கும் அந்தப் பெருமை கிடையாது. நாராயணன் என்னும் திருநாமத்திற்கு ஜல ஸ்வரூபமாக இருப்பவனென்றும், அழிவற்றவனென்றும், பிறப்பு இறப்பு இல்லாத ஆதியந்தமில்லாத முழு முதற் பெருங் கடவுளென றும் வேதங்களும் ஸ்ம்ருதிகளும் கூறுகின்றன. பிறப்பு இறப்பு இல்லாதபெருமான் பல அவதாரங்களிலும் பிறக்கவில்லையா? என்றால், பகவான எவராலும் பிறப்பிக்கப்படவில்லை யென் றும், தன் இச்சையாலே தானே பிறக்கும் பிறப்பு இறப்பு இல்லாத பெருமான் என்பதைக் கீதையில் “அஜோபிஸந் அவ்யயாத்மா பூதா நாம் ஈச்வரோபிஸந் ஸ்வாம் ப்ரக்ருதிம் அதிஷ்டாய சம்பவாமி ஆத்ம மாயயா' எனத் திருவாய் மலர்ந்தருளியுள்ளார். "இறைவன்' என்னும் சொல்லுக்கு எல்லா விடங்களி லும் எல்லாப் பொருள்களிலும் தங்கியும் தாங்கியும் நிறைந் திருப்பவன் என்றும், 'கடவுள்' என்னும் சொலலுக்கு எல்லா வற்றையும் கடந்து இருப்பவன், எலலாவற்றையும் இயக்கு பவன் என்றும் பொருள்படுவது போல “நாராயணன" என்னும் சொல்லுக்கு உலகிலுள்ள எல்லாப் பொருள்களி லும் அந்தர்யாமியாய் இருப்பவனென்றும் பொருள்படும். எனவே, இறைவன், கடவுள் என்னும் சொறகள் நாராயண னுக்கே பொருந்தும். மற்றும் சகல கல்யாண குணங்களுக்கும் உறைவிடமாய் இருப்பவனும நாராயணனே! "முதலாவார் மூவரே; அம்மூவருள்ளும் முதலாவான் மூரிநீர் வணணன” நா-2 18 என்று ஸ்ரீ பொய்கையாழ்வார் திருவாய்மலர்ந்தருளியபடி மும்மூர்த்திகளுள் முதல்வனாய், மற்றெல்லா தேவதைகளும் போற்றி வணங்குவதற்குரிய முமு முதற் பெருங் கடவுளாய் இருப்பவன நாராயணனே ஆவான. எனவே,ஆழ்ந்தஞானம், பக்தி, வைராக்கிய குண சம்பந்நர்களாகிய ஆழ்வார்கள் அப் பரம் பொருளின் அவதாரவிசேஷங்களையும் கல்யாண குணங் களையும் அனுபவித்துப் பாடி ஆனந்தபரவசரானார்கள் அகிலலோக நாயகன் நாராயணனின் ஆட்சி முழு முதற் பெருங் கடவுளாகிய அப்பரம் பொருள் பரம், வ்யூகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை ஆகிய ஐம் பெரும் நிலைகளிலிருந்து மூவுலகங்களையும் ஆட்சி புரிகின்றார். ஸ்ரீதேவி பூதேவி, நீளாதேவி சமேதனாய், அநந்த கருட விஷ்வக்சேநர், மற்றுமுள்ள நித்தியசூரிகள் சூழப் பரமபத நாயகனா யிருந்து நித்தர்களையும் முத்தர்களையும் அருள் பாலித்து அந்தமில் பேரின்பத்தை யளித்துக் காத்தருளும் ''பரம"னாய் விளங்குகின்றார் நாராயணன். அசுரர், அரக்கர், மற்றெவராலும் துன்பம் நேர்ந்த போது பிரம்ம ருத்திர இந்திராதி தேவர்களுக்கும் முநிவர்களுக்கும் அபயமளித்துத் துயர் தீர்ப்பதற்குப் பாற்கடலில் பள்ளி கொள்ளும் பரந்தாமனாய் “வ்யூகமூல” நிலையில் காட்சி தருகின்றார் நாராயணன். "துஷ்டர்களை யழித்து நல்லோர்களைக் காக்கும் பொருட்டு யுகங்கள் தோறும அவதாரம் செய்து தர்மத்தை நிலைநிறுத்துகின்றேன்” என்னும் கீதை வாக்கிற் கிணங்க இராம கிருஷ்ணாதி அவதாரங்கள எடுத்தபோது விண்ண வரும் மாதவரும் மண்ணவரும் போற்றற்தரிய பல அரிய காரியங்களை “விபவ” நிலையாலிருந்து செய்துள்ளார் நாரா யணன் மேற்கூறிய மூன்று நிலைகளிலிருந்தும் உலக ரக்ஷண காரியத்தைச் செய்யும் பகவான அத்துடன் திருப்தி யடை யாமல், தேவர், மநுஷ்யர், திரயக், தாவரம் யாவற்றிலும், 19 1 பிரம்ம ருத்திர இந்திராதி தேவதைகளின் சரீரங்களிலும் 'அந்தர்யாமி'' நிலையிலிருந்து ஆட்சி புரிகின்றார் நாரா யணன். கலியின் கொடுமையிலிருந்து மண்ணுலக மாந்தர் துயர் நீங்கவும், பந்தபாசங்கள் நிறைந்த சம்சாரக் கடலிலிருந்து மக்கள் கரை ஏறி ஹரிநாம சங்கீர்த்தனம் செய்யவும், பகவத் பாகவத சம்பந்தம் பெற்று உலகம் உஜ்ஜீவிக்கவும் வேண்டி திருவரங்கம், திருமாலை, திருவெஃகா (காஞ்சி) மற்றும் நாடெங்கும் அர்ச்சை நிலையிலிருந்து ஆட்சி புரிகின்றார் நாராயணன். இத்தகு பரம்பொருள் நாராயணனின் ஏற் றத்தைப் பாடிப் பரவுவதே கடமையாகக கொண்டனர் ஆழ்வார்கள். போற்றுதற்குரிய பரம் பொருள் நாராயணன் “வேதநூல் பிராயம் நூறு மனிசர்தாம் புகுவரேலும் பாதியும் உறங்கிப்போகும் நின்றதில் பதினையாண்டு பேதை பாலகனதாகும் பிணி பசி மூப்புத் துன்பம் ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகருளானே!” என்று ஸ்ரீ தொண்டரடிப்பொடி யாழ்வார் கூறியருளியபடி உன்னதமான மனிதப் பிறவி பெற்று நூறாண்டுகாலம் மனித ஆயுளெனறு வேதங்களால் உரைக்கப்பட்ட வாழ்நாள் உறக்கத்திலும, நோய், நொடி, துனபங்களாலும பாதிக் கப்பட்டு வீணாளாகப் போகாமல் வளம் பெற்று உய்யும் வழியையும், எமபெருமான் நாராயணனைச் சரணடைந்து புனிதமடையும் பேற்றினையும் ஆழ்வார்கள் காட்டியருளி யுள்ளார்கள். இத்தகைய பெருமை மிக்க தேவாதி தேவனாயும், சர்வ லோக சரண்யனாயும், அபயமென்று அடைந்தவர்களைக் கைவிடாத அச்சுதனாயும், அனவரதமும் துதிககும் பக்தர் களைக் காத்தருளும் பக்தவச்சலனாயும் விளங்குவதனாலேயே ஆழ்வார்கள் நாராயணனையே பரம்பொருளாகப் போற்றி அவன் கலயாண குணங்களைப் பாடித் தொழுதார்கள், 20 மனிதன் ஓரறிவுடைய தாவரமாகவோ, ஈரறிவுடைய நததை போனற உயிரினமாகவோ, மூவறிவுடைய எறும் பாகவோ, நாலறிவுடைய வண்டாகவோ, ஐயறிவுடைய மிருகம, பறவையாகவோ பிறந்து அறியாமையில் அவதிவுற்றுப் பலவேறு கொடுமைகளுக்காளாகாமல் இருக்க ஆரறிவுடைய மனிதனாகப் பகுத்தறிவு வாய்ந்த உயர்ந்த பிறவியாகப் பிறந்தும பாதை விட்டு விலகி எண்ணரிய பாவங்களைச் செயது அதனால கொடிய துன்பங்களுக்காளாகி அவதியுறாமல் கடைத்தேறும் பொருட்டு ஆழ்வார்கள் அவதரித்து ஸ்ரீமந் நாராயணனைப் பாடியருளி நற்கதிக்கு வழிகாட்டி யருளினார்கள். பகவான் பல யுகங்களிலும் பல்வேறு அவதாரங்கள் செய்து செயற்கரிய பல காரியங்களைச் செய்து முடித்தாரா யினும், மாநுடகோடிகள் நன்றி மறந்தவர்களானார்கள். அதனால் அவருக்கு மன நிறைவு ஏற்படவில்லையென்பதைக் கண்ணன. அவஜாநந்தி மாம்மூடா : மாநுஷீம் ததுமாஸ்ரிதம் பரம்பாவ மஜா நந்தோ மமபூத மஹேஸ்வரம்" என்று கீதையில் 9.வது அத்தியாயம், 11-வது சுலோகத்தில் வருந்திக் கூறியுள்ளார். ஆயினும், ஆழ்வார்கள் இம்மண்ணு லகில் அவதரித்துப் பகவானின் அகடி தகடநா சாமர்த்தியத் தையும் அவதார விசேஷங்களையும் பலவாறு பாடியருளிய பின்னரே பகவானுக்குத் தன அவதார விசேஷங்களால் திருப்தியும் பூர்த்தியும் ஏற்பட்டிருக்குமென்பது பிரத்யக்ஷ உண்மையாகும். இல்லறவாழ்க்கையின் குறிக்கோள் பகவத்பாகவத ஆராதனையே இல்லற வாழ்க்கையையே நல்லற வாழ்க்கையாகக் கொண்ட திருவள்ளுவர் உலக வாழ்வில் அறநெறியில் வாழ் பவன் விண்ணுலகத்துத் தெய்வமென போற்றப்படுவான் என்பதை
211
"வையத்து வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்"
என்று இல்லற வாழ்க்கையின் சிறப்பினை விளக்கியுள்ளார்.
அதுவன்றியும்,
"அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றிற்
போஒய்ப் பெறுவதெவன்?''
எனவும்,
"அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை"
எனவும் கூறியுள்ளார்.
துவாபர யுகத்தில் முநிவர்களின் பரம்பொருள் நிரூபணம்
இந்த சதுர்யுகத்தின் ஆரம்பமாகிய கிருத திரேதா
யுகங்களில், ''நாராயணனே பரம்பொருள்” என தேவாதி
தேவர்களாலும் முனிச்சிரேஷ்டர்களாலும் மற்றெல்லோரா
லும் போற்றப்பட்டு வந்த பகவான் அதர்மங்கள் பெருகி,
தர்மம் அருகத் தொடங்கிய போது துவாபர யுகத்தின் முடி
வில் துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம் காரணமாக கிருஷ்ணா
வதாரம் செய்த காலத்தில் பராசரர், வியாசர் முதலான
மாதவ சிரேஷ்டர்கள் தோன்றி பலவாறாகக் கிடந்த வேதங்
களை யெல்லாம் தொகுத்து ருக், யஜுர், சாமம், அதர்வண
வேதமென நான்கு வேதங்களாக வகைப்படுத்தி நாராய
ணனே பரம்பொருள் என்பதை மீண்டும் நிலைநாட்டினர்.
துவாபர கலியுகங்களில் ஆழ்வார்கள் நிரூபணம்
அதன் பின்னர் மேலும் சில நூற்றாண்டுகள் கழிந்து
மீண்டும் குழப்பநிலை ஏற்பட்டபோது துவாபர யுகத்தின்
முடிவில் முதலாழ்வார்கள் மூவரும், திருமழிசையாழ்வாரும்,
கலியுகம் ஆரம்பமான பின் நம்மாழ்வாரும் குலசேகராழ்
வாரும் அவதரித்து வடமொழியா யிருந்த நான்கு வேதங்
களின் சாரத்தைத் தங்கள் திவ்வியமான பாசுரங்களின்
மூலமாகத் தெளிவாக எடுத்துக்கூறி, மக்களிடையே மண்டிக்
20 கிடந்த குழப்பத்தை நீக்கி, நாராயணனுடைய சௌலப்ய (சுலபமாக அடையும்படி இருத்தல்), சௌசீல்ய (உயர்ந்த வன் தாழ்ந்தவர்களோடு வேறுபாடில்லாது கலத்தல்) குணங்களைப் பலவாறாகப் பாடி, நாராயணனே பரம் பொருள் என்பதை நிரூபணம் செய்தார்கள். பெரியாழ்வார் நிலைநாட்டிய நாராயண பரத்வம் நாம் வாழும் இப்பூவுலகம் ஓர் இருள் தரு மாஞாலம். இப்பூமியில் பகலும் இரவும், ஒளியும் இருளும் மாறி மாறித் தோன்றுவது போல மானுடகோடிகளினிடையே அவ்வப் போது அஞ்ஞானமும் தோன்றி ஞானத்தை மறைத்துக் குழப்பத்தை விளைவிப்பது சகஜமாகும். அவ்வாறு மக்களி டையே குழப்பம் ஏற்பட்டபோதெல்லாம் ஞான சம்பந்நர் களும் மகானகளும் அவ்வப்போது தோன்றி, அஞ்ஞான இருளை யகற்றி மெய்ஞ்ஞான ஒளியை ஏற்றி வைத்திருப்பது வரலாறு பூர்வமான உண்மையாகும். நம்மாழ்வார் காலத்திற்குப் பிறகு, சில நூற்றாண்டுகள் கழிந்து மறுபடியும் நாட்டில் மக்களிடையே பரம்பொருளைப் பற்றிய குழப்பம் குழப்பம் நிலவியது. அவ்வமயம் பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்து வந்த அறிவுமிக்க மன்னன் ஸ்ரீவல்லப தேவன (ஜடாவர்ம பாண்டியன்) என்பவனுக்கு முத்திக்கு வித்தாகிய பரத்வத்தை அறிய வேண்டுமென்னும் ஆவல் தோன்றியதால், தன் அமைச்சர்களையும் அவையில் இருந்த பண்டிதர்களையும் சமயவாதிகள் பலரையும் அழைத்து வினவியும் உண்மையறியாது இருந்தான். அச்சமயம் அரச புரோகிதர் செல்வநம்பியின் ஆலோ சனையின்படி அரச சபையில் பொற்கிழி (கிழி - துணி, பொற்கிழி பொன் முடிப்பு) ஒன்றை அமைத்தான். ''மானுடக் கோடிகள் சம்சாரக் கடலிலிருந்து கரை ஏறி, முத்தியடைவதற்கு வித்தாயுள்ள பரம்பொருளை நிர்ணயஞ் செய்து பொற்கிழியைப் பெறலாம்” என்று அறிவித்தான். .
22 எண்ணரிய சமயப் பேரறிஞர்களும் தர்க்க சாஸ்திர நிபுணர்களும் வேதாந்த விற்பந்நர்களும் சமணர்களும் பௌத்தர்களும் சைவர்களும் பாரத நாடெங்குமிருந்து பாண்டிய நாட்டு அரசவையை யடைந்து தத்தம் சமயத்தின் சிறப்பினையும் உயர்வினையும் விளக்கிப் பல நாள்கள் வாதஞ் செய்தும் பரத்வ நிர்ணயஞ் செய்து பொற்கிழியை யடைய முடியாது போயினர். முடிவில் ஸ்ரீவில்லிபுத்தூர் வடபெருங் கோயிலுடை யான் திருவருள் பெற்ற விஷ்ணுசித்தர் பாண்டியன் அரசவையை யடைந்து, சர்வலோக நாயகனும் ஆதியந்த மற்ற தேவாதி தேவனும் அவாப்த சமஸ்த காமனுமாகிய ஸ்ரீமந் நாராயணனே பரம்பொரு ளென வேதங்களிலிருந்து தக்க ஆதாரங்கள் பலவற்றை எடுத்துக்காட்டி பரத்வ நிர்ணயஞ் செய்து, சகல சமயாச்சார்யர்களுடைய அறியா மையையும் பாண்டிய மன்னனுடைய கவலையையும் அகற்றி யது சரித்திர பிரசித்தமாகும். பெரியாழ்வார் காலத்திற்குப் பிறகு மீண்டும் தமிழகத் தில் தோன்றியிருந்த பரத்வம பற்றிய குழப்பததைத் திருமங்கையாழ்வார் அவதரித்து, சைவ பௌத்த சமயத்தினரை வாதில் வெனறு, பர சமயிகளுக்குப் பர காலனாக விளங்கி அஷ்டாக்ஷர மந்திரப் பொருளாகிய நாராயண பரத்வத்தை நாடறியப் பறைசாற்றி நிலை நாட்டினார். கூரத்தாழ்வான் நிலைநாட்டிய நாராயண பரத்வம் ஆழ்வார்கள் காலத்திற்குப் பிறகு, சில நூற்றாண்டுகள் கழிந்து 12ம் நூற்றாண்டில் நிலவியிருந்த நாராயண பரத்வக் குழப்பத்தையகற்றி ஸ்ரீவைஷ்ணவ சமயத்தின் மேன்மையை நாடெங்கும் பரப்பி விசிஷ்டாத்வைத சமயத்தை நாட்டியவர் ஸ்ரீராமாநுஜர், அது கண்டு பொறாமை கொண்ட கிருமிகண்ட சோழன் (இரண்டாம் குலோத் துங்கன்) கொண்டிருந்த தாராயண பரத்வ துவேஷத்தையும் சமண நிலை 24 பல சிவ பரத்வத்தையும் கண்டித்துத் தன் இரு கண்களையும் தியாகஞ் செய்து நாராயண பரத்வத்தை நிலை நாட்டிய ஸ்ரீகூரத்தாழ்வானின் மகத்தான தியாகம் ஒப்புயர்வற்றதும் சரித்திரப் பிரசித்தி பெற்றதுமாகும். இவ்வாறு பிற சமயத்தவர்களால் சமயங்களில் பரத்வ துவேஷம் ஏற்பட்ட காலங்களி லெல்லாம், ஸ்ரீவைஷ்ணவ சமயத்திற்குச் சோர்வு ஏற்பட்ட போதெல் லாம் அத்தகைய குழப்பங்களைக் களைந்தெறிவதற்காக ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அருந்தவ முநிவர்களும் ஆழ்வார்களும் ஆசார்யர்களும் அரும் பெருந் தொண்டாற் றியும் எண்ணரிய தியாகங்கள் புரிந்தும் இருப்பது வரலாறு கண்ட உண்மையாகும், கவியரசர்கள் நிலைநாட்டிய நாராயண பரத்வம் பாரத நாட்டின் ஒப்பற்ற இதிகாசங்களென இந்நாட்டி லுள்ள சகல சமயத்தவர்களாலும், உலகிலுள்ள அறிஞர் மக்கள் பலராலும் போற்றப்படுவது இராமாயணமும் மகா பாரதமும் ஆகும். இராமாயணத்தின் பெருமைக்குரிய நாயக னாக இருப்பவன் இராமன். மகாபாரதத்தின் சிறப்பிற்கு அணிகலனாயிருப்பவன் கிருஷ்ணன். இராமனும் கிருஷ்ணனும் ஸ்ரீமந் நாராயணனின் அவதாரங்களென்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகும். கம்பரும் வில்லிப்புத்தூராரும் பரம பாகவதர்களும் கவிச்சக்கரவர்த்திகளுமென அறிஞர் பெரு மக்களால் போற்றப்படுபவர்கள் கம்பர் இராமாயணத்தில் பலவிடங்களிலும் ராமபிரானை உலக நாயகனென்றும் பரம் பொருளின் அவதாரமென்றும் பக்தி வெள்ளம் பெருகப் பாடியிருப்பதையும், வில்லிபுத்தூரார் மகாபாரதத்தின் நாயகனாய் விளங்கும் ஸ்ரீகிருஷ்ண பகவானைத் தேவாதி தேவனென்றும், ஆதிமூலப் பரம்பொருளென்றும் பாடி யிருப்பதை நடுநிலைமையுடன் நோக்கும் அறிஞர் பெரு மக்கள் அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். ஆயினும், குறுகிய நோக்கங் கொண்ட சில பரசமய வாதிகளும் அரசியல்வாதிகளும் இராமாயணத்தைப் பாடிய 25 FLD கம்பரும், மகா பாரதத்தைப் பாடிய வில்லிபுத்தூராரும் சமய நோக்குடனே பாடியிருக்கிறார்களே யன்றி பரத்வத்தைக் கூறவில்லையென்று திரித்துக் கூறுவது அறிவுட மையற்ற செயலாகும். ''உலகம் யாவையும் தாமுள வாக்கலும் நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகிலா விளையாட்டுடையார் அவர் தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே." (உலகம் யாவற்றையும் படைத்தலையும் காத்தலையும் அழித்தலையும் என்றென்றும் அளவில்லாத ஓர் விளையாட் டாக உடைய அவரே தலைவர். அன்னவர்க்கே நாங்கள் தஞ்சம்) என்றும், ‘வானின்றிழிந்து வரம்பிகந்த மாபூதத்தின் வைப்பெங்கும் எனும் உயிரும் உணர்வும்போல் உள்ளும் புறமும் உளன்.....' (மூலப் பிரகிருதியிலிருந்து தோன்றி எல்லையற்றுப் பரந்து கிடக்கும் ஐம்பெரும் பூதங்களின் பரிணாம விகார மான உலகெங்கும் உடலில் உயிர் போலவும், உயிரில் அதன் ஞானம் போலவும் உள்ளும் புறமும் வியாபித்துள்ள வன்) என்றும், இன்னும் பலவிதங்களாகவும் இராமாவதார விசே ஷத்தையும் ஸ்ரீமந் நாராயணனுடைய பரத்வத்தையும் போற்றிப் பாடியுள்ளார் கம்பர். பல்லாண்டு காலம் தன் பலமனைத்தையும் கொண்டு முதலையுடன் போராடியும் மீளமுடியாத நிலையில் வேறு கதி யின்றி , "ஆதிமூலமே!" என்றழைத்த யானைக்கு உதவ யாரும் முன்வரவில்லை. நாராயணனாகிய ஆதிமூலப் பொருளே யானையின் குரலைக் கேட்டு உதவ ஓடோடியும் வந்தாரென்பதை, “மூலப்பேர் இட்டழைத்த மும்மதமால் யானைக்கு நீலகிரிபோல் நின்ற நெடுமாலே!" என்று வில்லிபுத்தூரார் மகாபாரதத்தில் பலவிடங்களில் 26 பாடியிருப்பது தாராயண பரத்வத்திற்கு இணையற்ற உதாரணமாகும். வெண்பா பாடுவதில் சிறந்தவரெனப் புகழ் பெற்றவர் புகழேந்திப் புலவர் இவர் கம்பர் காலத்தவரெனக் கருதப் படுபவர். புகழேந்திப் புலவர் பாடியுள்ள “நளவெண்பா” கவி நயமும் காவியச் சிறப்பும் வாய்ந்தது. பரத்வ விஷயத் தில் பக்ஷபாதமற்ற நோக்குள்ள இவர் யானையின் துயர் தீர்த்த வரலாற்றை, ‘ வேதத்தின் முன் நின்றான்; வேழம் முதலே என, என் என்றான் எங்கட்கிறை" என்று ரத்தினச் சுருக்கமாகக் கூறியிருப்பது ஆதிமூலப் பெருமானாகிய ஸ்ரீமந் நாராயணனின் பரத்வ நிலையை நனகு விளக்குகிறது. நாராயண பரத்வத்தை உணர்த்தும் கேசவத் திருநாமச் சிறப்பு வேதங்களிலும் உபநிஷதங்களிலும் நாராயணனுடைய நாமங்களில் உயர்வாகக் கொண்டாடப்படும் த்வாதச (பன்னிரு) நாமங்களில் முதல் திருநாமம் 'கேசவன்" எனபது. ஆழ்வார்களாலும் ஆசார்யர்களாலும், இன்று நித்யாநுஷ் டானங்களின் போது வைஷ்ணவர்களாலும் பிரதானமாக உச்சரிக்கப்படும் திருநாமம் கேசவன என்பது. திருநாமத்தின் ஏற்றத்தை உணர்ந்தே வேதங்களைப் பாகு படுத்திய வியாசமுநிவர், வேத சாஸத்ராத்பரம் நாஸ்தி ''நதைவம் கேசவாத்பரம" (கேசவனைவிட உயர்ந்த தெய்வம் வேறொன்றுமில்லை) என்று கூறியுள்ளார் வேதந் தமிழ்ச் செய்த மாறன் என்றும், பரசமயக் கோளரி என்றும புகழப்படும் நம்மாழ்வார் திருவாய் மொழியில், "கெடும் இடராயவெல்லாம் கேசவா! வென்ன நாளும் கொடுவினை செய்யும் கூற்றினதமர்களும் குறுககில்லார்." (கேசவா! என்று நாள்தோறும் சொன்னால் தொல்லை கள் யாவும் தொலைந்து போகும். கொடிய துன்பங்கள் தரும் யமதூதர்களும் நெருங்கமாட்டார்கள்) என்று கேசவ நாமத் தின் மகிமையை மற்றும் பலவாறாகவும் விளக்கியுள்ளார்.
27 கேசவன் என்னும் திருநாமத்தின் சிறப்பினைப் பற்றி "திருப்பாவை யில் ஸ்ரீ ஆண்டாள் , "நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் நீ கேட்டோ? கிடத்தியோ?” என்று கேசவனைப் புகழ்ந்து பாடியிருப்பதன் மூலம் கேசவ நாமத் தின் ஏற்றத்தைப் புகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இத்தகைய திருநாமத்தின் சீர்மையை நன்கு உணர்ந்த தனாலேயே தமிழகத்தின் பழம் பெரும் இலக்கியமெனப் புகழப்படும் சிலப்பதிகார'த்தைப்பாடிய இளங்கோவடிகள், “கேசவன் சீர் கேளாத செவி என்ன செலியே" என்றும், "நாராயணா! என்னாத நா என்ன நாவே!” என்றும் பாடி யிருப்பதன் மூலம் கேசவன் சீர்மையும் நாராயண பரத்வமும் நன்கு விளங்குகின்றது. கேசவன் என்னும் திருநாமத்திற்கு பிரம்ம ருத்திரர் களுக்குத் தன் திருமேனியில் இடம் தந்து வைத்திருப்பவன்; பிரம்ம ருத்திரர்களைத் தன் திருமேனியிலிருந்து உண்டாக்கி யவன்; அழகிய கேசத்தை உடையவன்; கேசி என்னும் அசுரனைக் கொன்றவன், மனத்திலிருந்து கிலேசத்தை அகற்றுபவன் என்றும் மற்றும் பலவாறாகப் பொருள் உண்டு. வேதம், இதிகாசம், புராணம், ஆழ்வார்கள் அருளிச் செயல், மற்றும் சரித்திரச் சாற்றுகளே யன்றி, கேசவன் பெருமையை, "ஆகாஸாத் பதிதம் தோயம் யதா கச்சதி சாகரம் ஸர்வதேவ நமஸ்கார? கேசவம் ப்ரதிகச்சதி.” (வானத்திலிருந்து பொழியும் மழையானது நதிகள் மூலம் முடிவில் கடலில் கலப்பது போல எந்த தேவதையை வணங்கினாலும் அது கேசவனையே சேரும்) என்று ஒரு சுலோ கம் புகழ்ந்து பாடுகிறது. நாராயண பரத்வத்தைக் காட்டும் ஹரியின் திருநாமம் நம் பாரத நாட்டில் நீண்ட காலமாகவே பல்வேறு சமயத்தினரும் மதத்தினரும் தத்தம் சமய மதக் கோட்பாடு 28 . களுக்கு ஏற்றவாறு பல்வேறு முறைகளில் இறைவனை வழி பட்ட போதிலும் அவை யாவும் நாராயண பரத்வத்தைக் குறிக்கும் ஹரியையே சாரும் என்பதைக் கீழ்க்காணும் பிரபலமான சுலோகம் ஓர் எடுத்துக் காட்டாகும். யம் சைவா: ஸமுபாஸதே சிவ இதி ப்ரம்மேதி வேதாந்தின பௌத்தா புத்த இதிப்ரமாண படவ!கர்த்தேதிநையாயிகா: அர்ஹந் நித்யத ஜைநசாஸந ரதா! கர்மேதி மீமாம்ஸகா: ஸோயம் வோ வித்தாது வாஞ்சிதபலம் த்ரைலோக்ய நாதோ ஹரி!" (சிவன் என்று சைவர்களும், ப்ரம்மம் என்று வேதாந்தி களும், புத்தர் என்று பௌத்தர்களும், கர்த்தா என்று நியாய சாஸ்திர நிபுணர்களான நையாயிகர்களும், அருகன் என்று ஜைனரைப் பின்பற்றுபவர்களும், மீமாம்ஸா நூல் கற்றவர்களோ அனைத்துக்கும் காரணமாயிருப்பது கர்மம் என்றும், ஒவ்வொரு சமயத்தினரும் ஒவ்வொரு விதமாக வழிபடுகிற அந்த மூவுலக நாயகனான ஹரியானவன் நாம் விரும்பிய பலனைக் கொடுப்பான்) என்று கோஷிககின்றது. ஹரியின் பெருமையை உரைக்கும் இந்த சுலோகம் சர்வலோக சரண்யனாகிய நாராயணனின் ஏற்றத்தை விளக்குகின்றதல்லவா. பகவான் கீதையில் காட்டிய நாராயண பரத்வம் அமரகவி சுப்ரமணிய பாரதியாரும், "எல்லா உயிர் களிலும் நானே இருக்கின்றேன் என்றுரைத்தான் கண்ண பிரான்” என்று நாராயணனுடைய பரத்வத்தைப் பற்றிப் பாமரரும் அறிந்துணரும்படி பாடியுள்ளார். இக்கருத் தினையே பகவான் கீதையில், “அஹம் க்ருத்ஸ் நஸ்ய ஜகத: ப்ரபவ: ப்ரளயஸ்ததா......” (7-6) (அகில உலகின் ஆக்கலுக்கும். அழித்தலுக்கும் நானே காரணமாவேன்) என்றும்,
29
''மத்த: பரதரம் நாந்யத் கிஞ்சிதஸ்தி தநஞ்ஜய!
மயி ஸர்வமிதம் ப்ரோதம் ஸுத்ரே மணிகணா இவ.'' (7-7)
(தனஞ்ஜயா! என்னைக் காட்டிலும் சிறிதளவும் உயர்ந்
தது வேறொன்றும் கிடையாது. இவ்வுலகம் முழுவதும்
நூலில் இணைந்த மணிகள் போல என்னையே பற்றிக்
கொண்டு இருக்கின்றன), மற்றும்,
"ரஸோஹமப்ஸு கௌந்தேய! ப்ரபாஸ்மி சசி
சூர்யயோ:
ப்ரணவ: ஸர்வவேதேஷு சப்த கே பௌருஷம்
ந்ருஷு (7-8)
(குந்தி மகனே! நீரிலுள்ள ரசமும் நானே; சந்திரன்,
சூரியனிலுமுள்ள ஒளியும் நானே; சகல வேதங்களிலும்
ப்ரணவம் (ஓங்காரம் ) நானே; ஆகாயத்திலுள்ள சப்தமும்
நானே ; மனிதர்களில் ஆண்மையும் நானே). அதுவன்றியும்,
'யே சைவ ஸாதவிகா பாவா ராஜஸாஸ் தாமஸாஸ்ச யே
மத்தஏவேதி தாந்வித்தி ந த்வஹம் தேஷூ தே மயி.” (7-12)
(சாத்விக ராஜஸ தாமஸ குணங்களுடன் உலகிலுள்ள
பொருள்கள் எவையெவை உள்ளனவோ, அப்பொருள்கள்
யாவும் என்னிடமிருந்தே தோனறினவையாகுமெனறு நீ
தெரிந்து கொள்வாயாக. அவை யாவும் எனனிடம் அடங்கி
யிருக்கினறனவேயன்றி, அவற்றிற்கு நான் அடங்கியவனாக
இல்லை.
உலகம் யாவற்றிற்கும் ஜீவகோடிகள் அனைத்துக்கும்
காரணனும் பரமனும் ஸ்ரீமந் நாராயணனே எனபதை
வேதங்களும் முநிவர்களும் ஆழ்வார்களும் ஆசாரியர்களும்
விரிவாகக் கூறியிருப்பினும பகவான் குருக்ஷேத்ரத்தில் பார்த்
தனுக்குத் தானே மேற்கூறியவாறு உபதேசம் செய்திருப்பது
அனைத்து மதத்தைச் சேர்ந்த அறிஞர் பெருமக்களின் சிந்த
னைக்கும் போற்றற்கும் உரியதாகும்.
30
ஆழ்வார்கள் நிலை நாட்டிய நாராயண பரத்வம்
இவ்விஷயத்தையே மயர்வற மதிநலம் அருளப்பெற்ற
நம்மாழ்வார்,
"திடவிசும் பெரிவளி நீர்நிலம் இவைமிசை
படர்பொருள் முழுவதுமாய் அவையவை தொறும்
உடல்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவையுண்ட சுரனே.” (1-7)
(ஆகாயம், நெருப்பு, காற்று, நீர், நிலம் ஆகிய பஞ்ச
பூதங்கள் சம்பந்தப்பட்ட பொருள்கள் யாவற்றிலும் உட
லின்கண் உயிர் போல இறைவன் எங்கும் எல்லாவற்றிலும்
மறைந்து நிறைந்துள்ளான்) என்று திருவாய்மொழியில்
பல பாசுரங்களாலும் திருவாய்மலர்ந்தருளியுள்ளார்.
வாள் வலியால் அஷ்டாக்ஷர மந்திரத்தை ஸ்ரீலக்ஷ்மீ
நாராயணனிடம் ஓதிப்பெற்ற திருமங்கையாழ்வாரும் திரு
நெடுந்தாண்டகத்தில்,
"பாருருவில் நீரெரிகால் விசும்புமாகிப்
பல்வேறு சமயமுமாய்ப் பரந்து நின்ற...'
(நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் எனப்படும் பஞ்ச
பூதங்களாகவும், உலகிலுள்ள பற்பல விதமான சமயங்களா
கவும் விரிந்து நிற்கின்ற) என்று பரம்பொருளின் பெருமை
யைப் பலவாறு பாடியருளியுள்ளார்.
பகவானின் சுதர்ஸந அம்சமாக அவதரித்த ஸ்ரீ திரு
மழிசையாழ்வாரும் ''நான் முகன் திருவந்தாதி"யில்,
'இனியறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம்
இனியறிந்தேன் எம்பெருமான/ உன்னை-இனியறிந்தேன்
காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ, நற்கிரிசை
நாரணன் நீ நன்குணர்ந்தேன் நான்.''
(ஈசனுக்கும் நான் முகனுக்கும் தெய்வமாகிய உன்னை
எம்பெருமானே! இனி நான் அறிந்து கொண்டேன்:
31 இதர காரணனும் நீயே! கற்றவையும் நீயே; கற்பவையும் நீயே. நற்கிரிசை நாராயணனும் நீயே என்பதை நான் நன்கு அறிந்து கொண்டேன) என்று அழுத்தந் திருத்தமுமாக நாராயணனுடைய காரணத்வத்தையும் பரத்வத்தையும் கூறியுள்ளார். மா நுடகோடிகள் உஜ்ஜீவிக்க பகவான் அருளிய உபதேசம் இததுணைச் சிறப்பு வாய்ந்த பரம்பொருளாகிய என்னை யடைந்து அடைவதற்கரிய பேரினபமாகிய மோக்ஷத்தை யடைவதை விட்டுவிட்டு, “காங்க்ஷந்த: கர்மணாம் ஸித்திம் யஜந்த இஹ தேவதா: க்ஷிப்ரம்ஹி மாநுஷேலோகே ஸித்திர்பவது கர்மஜா" (4-12) (இம்மனித உலகில் கருமத்தினால் விரைவில் பலன் கிடைக்கிறதென்று மனிதர்கள் ஆசை கொண்டு பலனை விரும்பி தேவதைகளை வழிபடுகிறார்கள்) என்று திருவாய்மலர்ந்தருளிய பகவான், “ஜன்ம கர்ம ச மே திவ்ய மேவம் யோ வேத்தி தத்வத ; த்யக்த்வா தேஹம் புநர்ஜனம நைதி மா மேதி ஸோ Sர்ஜுந : (4-9) (அர்ஜுநா! எவனொருவன் என்னுடைய திவ்வியமான அவதார ரஹஸயத்தையும் செயல்களையும் உள்ளவாறு தெரிந்து கொள்கிறானோ, அவன் உடலை விட்டுப் பிரிந்தபின் மீண்டும் பிறக்கமாட்டான்; அவன் என்னையே அடைவான்) என்று உறுதியாகக் கூறியுள்ளார். திரைகடலில் திசை காணாது திகைக்கும் மாலுமியைப் போல் ஒழிவில்லாத பிறவிப் பிணியில் சிக்கி, அழிவிற்குரிய காரியங்களைச் செய்து அவதியுறும் மா நுடகோடிகளுக்கு பகவானின் இவ்வரிய உபதேசங்களே இம்மைக்கும் மறுமைக்கும் உற்ற துணையும் அரிய மருந்துமாகும் என்பதில் ஐயமில்லை.
32 பாவ ஸ்ரீமந் நாராயணனின் திருநாமங்களின் ஏற்றம் திருவரங்கநாதனைப் பாடிப் பரவுவதே தன் தனிப் பெருங் கடமையாகக் கொண்ட ஸ்ரீ தொண்டரடிப்பொடி யாழ்வாரும் நாராயணனுடைய திவ்வியத் திருநாமமாகிய "கோவிந்த" நாமத்தின் பெருமையைத் "திருமாலை" என்னும் திவ்விய பிரபந்தத்தில், 'மொய்த்த வல்வினையுள் நின்று மூன்றெழுத்துடைய பேரால் கத்திரபந்து மன்றே பராங்கதி கண்டுகொண்டான்..." (அனவரதமும் கொடுமையையே நினைப்பதுவும் கொடுமையையே செய்வதுமே தன் தொழிலாகக் கொண்டு காரியங்களிலேயே ஈடுபட்டு வந்த கத்திரபந்து (க்ஷத்திர பந்து) என்னும் கொடியவனும், வடமொழியில் மூன்று எழுத்துக்களையுடைய “கோவிந்தன்' என்னும் திருநாமத்தைச் சொன்ன மாத்திரத்திலே பரமபத மடைத் தான்) என்று புகழ்ந்து பாடியிருக்கின்றார். மற்றும், "நமனும் முற்கலனும் பேச நரகில் நின்றார்கள் கேட்க நரகமே சுவர்க்கமாகும் நாமங்கள் உடைய நம்பி...” (முற்கலன் என்பவன் வாழ்நாளில் புணணிய கருமமே செய்தறியாதவன். அவன் மரணமடைந்ததும் யமதூதர்கள் அவனை யழைத்துச் சென்றனர். முற்கலனைக் கண்டதும் யமதர்மன் எழுந்திருந்து, அவனை வரவேற்றான் அதைக் கண்ட யமதூதர்கள் வியப்புற்ற போது யமன் முற்காலனை நோக்கி, ஒருசமயம அவன் கொஞ்சம் எள்ளை, “கிருஷ்ணாப் பணம்” என்று கிருஷ்ண நாமங்களைச் சொல்லித் தானம் செய்ததால், அவன் செய்த பாவங்கள் யாவும் தீயினில் தூசாகி விட்டதென்று கூறி கிருஷ்ண நாமத்தின் பெருமை 33 யைக் குறித்து யமதர்மனும் முற்கலனும் பேசிக் கொண் டிருந்ததைப் பாவ காமங்களைச் செய்து நரகவேதனையை அநுபவித்துக் கொண்டிருந்த நரகத்தில் உள்ளவர்களுக்கும் கேட்ட மாத்திரத்தில் அந்நரகலோகமே சுவர்க்கலோகமாகி விட்டதென்று கூறியிருப்பதுவும் நாராயண நாமத்திற்கு ஏற்றமல்லவா? யமதர்மன் தூதுவர்களுக்குச் செய்த உபதேசம் இத்தகைய ஆழ்வார்களின் அருளிச் செயல்களின் ஏற்றத்தையும் ஸ்ரீவைஷ்ணவர்களின் சிறப்பினையும் நன குணர்ந்ததனாலேயே யமதர்மனும் தன் தூதுவர்களை யழைத்து, மற்றெவாக்கும் தெரியாதபடி அவர்கள் கா களில் மட்டும் படும்படி ஸ்ரீமந் நாராயணனை வழிபடும் விஷ்ணு பக்தர்களைக் கண்டால, அவாகளை வணங்கித் துன்பம் தராமல் சாதுக்களாகப் போங்கள்'' என்று சொன்னதைத் திருமழிசையாழ்வார், "நான் முகன் திருவந் தாதி”யில் திருவாய் மலர்ந்தருளிய பாசுரம் இது. “திறம் பேன்மின் கண்டீர்! திருவடிதன் நாமம் மறந்தும் புறந்தொழா மாந்தர் - இறைஞ்சியும் சாதுவராய்ப் போதுமினகள் என்றான நமனும்தன் தூதுவரைக் கூவிச் செவிக்கு." இத்தகைய பல்வேறு காரணங்களால் ஆழ்வார்கள் அற்பப் பலன்களில் ஆசை வைக்காமலும், இதர தேவதை களிடம் பக்தி, விசுவாசத்தைக் காட்டாமலும், “எற்றைக் கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தனனோடு உற்றோமே யாவோம், உனக்கே நாம் ஆட்செய்வோம்” என்று சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாளும், “துஞ்சுமபோது அழைமின, துயர்வரின் நினைமின் துயரிலீர்! துயரிலீர்! சொலலினும் நன்றாம் நஞ்சு தான கண்டீர் நமமுடை வினைக்கு நாராயணா! வென் னும் நாமம்” எனறு திருமங்கையாழ்வாரும் திருவாய் மலர்ந்தருளியபடி ஆழ்வார்கள் நாராயணனுடைய திவ்விய மங்கல ஸ்வரூப ரூப குண நவிபவங்களை அனவரதமும் பாடித் நா-3 34 துதிப்பதே தம் பிறவிப் பயனாகக் கருதினர். அதுமட்டுமல்ல உலக மக்கள் பந்தபாசங்கள் நிறைந்த சம்சார சாகரத்தைக் கடந்து பேரினபமாகிய மோக்ஷ ததை யடைவதற்கு உரிய வழி பக்தி நெறிகளில் ஈடுபட்டு பகவானைச் சரணடைவதே என்பதையும் காட்டியுள்ளார்கள் “நாராயணனைப் பாடிய நம் ஆழ்வார்கள்.” ஆழ்வார்கள் வரலாறு பகவானுடைய கிருபாகடாக்ஷத்தினால் அவதரித்த ஆழ் வார்கள் பனனிருவ ரெனப் பொதுவாகக் கருதப்படுவார்கள். ஆயினும், மதுரகவி யாழ்வார், 'கண்ணிநுண் சிறுத்தாம்பு'' எனனும் பிரபந்தத்தால தன் ஆசார்யராகிய நம்மாழ் வாரையே தெய்வமாகக் கருதி பாடியுள்ளதாலும், பெரியாழ் வார் திருமகளாக அவதரித்த ஆண்டாள் தன் தந்தையையே ஆசார்யராகக் கொண்டு திருவரங்கப்பெருமானையே கணவ னாக அடைய வேண்டுமென்று எண்ணிப் பாடியிருப்பதாலும், இவர்கள் இருவரையும் தவிர்த்த மற்ற பதின்மர்களையே ஆழ்வார்களாக நம் பூர்வாசார்யர்கள் முடிவு செய்துள்ளார் கள். ஸ்ரீ பொய்கையாழ்வார்! துவாபர யுகத்தின முடிவில் பாஞ்சஜன்ய அம்சமாய் சித்தார்த்தி வருடம், ஐப்பசி மாதம், சுக்கிலபக்ஷம், அஷ்டமி திதி, செவ்வாய்க்கிழமை கூடிய திருவோண நக்ஷத்திரத்தில் காஞ்சீபுரம் என்னும் திவ்விய க்ஷேத்திரத்திலுள்ள புண்ணிய தீர்ததமாகிய பொய்கையில் ஒரு தாமரைமலரில் அவதரித்து நூறு பாசுரங்களாலான ''இயற்பா-முதல் திருவந்தாதி" எனனும் பிரபந்தத்தைத் திருவாய்மலர்ந்தருளினார். இவற் றுள் நாராயண நாமத்தைக் குறித்துப் பாடிய பாசுரங்கள் மூன்று. ஸ்ரீ பூதத்தாழ்வார் : பகவானின் கதாயுத அம்சமாய் மறுநாளே நவமிதிதி கூடிய அவிட்ட நக்ஷத்திரத்தில் மாமல்லபுரம் என வழங்கும் 35 திருக்கடன்மல்லை யென்னும் க்ஷே ததிரத்திலுள்ள குளத்தில் குருக்கத்தி மலரில் அவதரித்து நூறு பாசுரங்கள் கொண்ட “இயற்பா- இரண்டாம் திருவந்தாதி” என்னும் பிரபந்தத் தைத் திருவாய்மலர்ந்தருளினார். இவற்றுள் நாராயண நாமத் தைக் குறித்துப் பாடிய பாசுரங்கள ஐந்து. ஸ்ரீ பேயாழ்வார் . பகவானின் நாந்தகம் அம்சமாக அடுத்த தினமே தசமிதிதி கூடிய சதய நக்ஷத்திரத்தில் சென்னையைச் சேர்ந்த திருமயிலை திவ்விய தலத்தில் ஆதி கேசவப்பெருமாள் சந்நிதிக்கு அடுத்துள்ள கிணற்றில் செவ் வல்லிப்பூவில் அவதரித்து, நூறு பாசுரங்கள் கொண்ட “இயற்பா-மூன்றாம் திருவந்தாதி” என்னும பிரபந்தத்தைத் திருவாய் மலர்ந்தருளினார். இவற்றுள் நாராயண நாமத் தைக குறித்துப் பாடிய பாசுரம் ஒன்று. இந்த ஆழ்வார்கள் மூவரும் அஞ்ஞான இருள் சூழ்ந்த இவ்வுலகத்தை ஒளி மயமாக்கும் பொருட்டு ஞான விளக் கேற்றி, பகவானுடைய ஸ்வரூப ரூப திவ்விய மங்கல குணங் களைக் கண்டு, அதனால் ஏற்பட்ட ஆனந்த மேலீட்டால் மேற் கூறிய மூன்று பிரபந்தங்களைப் பாடியருளினார்கள். ஸ்ரீ திருமழிசையாழ்வார்: துவாபரயுகம், யுவவருஷம், தை மாதம், கிருஷ்ணபக்ஷம், பிரதம திதி, மக நக்ஷத்திரம், ஞாயிற்றுக் கிழமையில் சுதர்சந அம்சமாய் திருமழிசை என்னும் புண்ணிய தலத்தில் அவதரித்தார். “திருச்சந்த விருத்தம" என்னும் பிரபந்தத்தை 120 பாசுரங்களால் பகவானுடைய பரத்வ நிலையையும் ஒப்புயர்வற்ற நீரமைக் குணங்களையும் பலவாறாகப் பாடியதோடு "நான் முகன் திருவந்தாதி" என்னும் பிரபந்தத்தை 96 பாசுரங்களால் நாராயணனுடைய பரத்வத்தையும் காரணத்வத்தையும் கல்யாண குணங்களையும் பற்றிப் பாடியுள்ளார். அவற்றுள் நாராயண நாமத்தைக் குறிப்பிட்டுப் பாடிய பாசுரங்கள் பதினொன்று.
36 ஸ்ரீ நம்மாழ்வார்: கலியுகம் 43ம் நாள், பிரமாதி வருடம், வைகாசி மாதம், 12ந் தேதி, வெள்ளிக்கிழமை, விசாக நக்ஷத்திரம், கர்ககட லக்கினத்தில் சேனேசர் அம்சமாய் திருக்குருகூரில் அவதரித்தார். நான்கு வேதங் களின் சாரமாக' திருவாய்மொழி" எனனும் திவ்விய பிரபந் தத்தை 1102 பாசுரங்களாலும், ''திருவிருத்தம்" என்னும் பிரபந்தத்தை 100 பாசுரங்களாலும், 7 பாசுரங்களால் திருவாசிரியம்" எனனும் பிரபந்தத்தையும், “பெரிய திருவந்தாதி" எனனும் பிரபந்தத்தை 87 பாசுரங்களாலும் பாடி நாராயணனுடைய பரத்வத்தையும், நீர்மைக் குணங் களையும், அவதார விசேஷங்களையும், ரகசியங்களையும், பகவானுக்கும் சேதனர்களுக்கு முள்ள சம்பந்தத்தையும், பகவானுக்குத் தொண்டு செய்து அடையும் வழியையும், அர்ச்சாரூபமாய் திவ்விய தேசங்களில் எழுந்தருளியுள்ள பகவானின கல்யாண குணங்களையும் விளக்கியுள்ளார். இவற்றுள் நாராயணன் நாமத்தைக் குறித்துப் பாடிய பாசுரங்கள் முப்பத்து மூன்று. ஸ்ரீ குலசேகராழ்வார்: கலியுகம் 28ம் ஆண்டு, பராபவ வருடம், மாசிமாதம, சுக்கிலபக்ஷம், துவாதசிதிதி, வெள்ளிக் கிழமை, புனர்பூசம் நக்ஷத்திரத்தில் கௌஸ்துப அம்சமாய் கேரள நாட்டில் கொல்லி நகரத்தில் அவதரித்தார். பகவானின் கல்யாண குணங்களில் மிக்க ஈடுபாடும் பாகவத சேஷத்வத்தில் ஆர்வமும் கொண்டு, "பெருமாள் திரு மொழி" எனும் ரம் பிரபந்தததை 105 பாசுரங்களால் பாடி யருளியுள்ளார். இவற்றுள் நாராயணன் நாமத்தைக் குறிப் பிட்டுப் பாடிய பாசுரங்கள் ஐந்து, ஸ்ரீ பெரியாழ்வார்: ஸ்ரீவிலலிபுத்தூரில் கலியுகம் 47 - ம் ஆண்டில, குரோதன வருடம், சுக்கிலபக்ஷம், ஏகாதசிதிதி, ஞாயிற்றுக்கிழமை, சுவாதி நக்ஷத்திரத்தில் கருடபகவான் அம்சமாக அவதரித்தார். இவர் பகவானுக்குப் புஷ்ப கைங் கர்யத்தில் சடுபாடு உடையவராய், பாண்டியன் சபையில் 37 சகல சமய பண்டிதர்களின் முன்னிலையில் பகவானுடைய பரத்வத்தை நிரூபணம் செய்து பாண்டிய மன்னனால் கட்டப் பெற்ற பொற்கிழியை யடைந்தார். பின்னர், அரசரால் கௌரவிக்கப்பட்டு யானையின் மீது ஊர்வலம் வரும் சமயம் ஸ்ரீலக்ஷ்மீநாதன் திருக்காட்சியைக் கண்டு ஆனந்த பரவச ராகி மங்களாசாஸநம் பண்ணினார். கண்ணனின் அவதார சேஷ்டி தங்களில் மிக்க ஈடுபாடு கொண்டு 473 பாசுரங் களால் "பெரியாழ்வார் திருமொழி எனும் திவ்விய பிரபந்தத்தை அருளிச் செய்தார். இவற்றுள் நாராயண நாமத்தை முன்னிட்டுப் பாடிய பாசுரங்கள் பத்தொன்பது. ஸ்ரீ தொண்டரடிப்பொடி யாழ்வார் : கலியுகம் 289ம் ஆண்டு, பிரபவ வருடம், மார்கழி மாதம், கிருஷ்ணபக்ஷம், சதுர்தசி, செவ்வாய்க்கிழமை, கேட்டை நக்ஷத்திரத்தில் மண்டங்குடி என்னும் ஊரில் வநமாலிகா அம்சமாய் அவதரித்தார். இவர் 10 பாசுரங்களைக் கொண்ட ''திருப் பள்ளியெழுச்சி” எனும் திவ்விய பிரபந்தத்தால் அரங்கத் தம்மானைப் பள்ளி யெழுப்பியதோடு, 45 பாசுரங்கள் கொண்ட “திருமாலை” என்னும் திவ்விய பிரபந்தத்தால் திருவரங்கப்பெருமானின் திருவிளையாடல்களையும் பாகவத சேஷத்வத்தின பெருமையைப் பெற்றாரைப் புகழ்ந்தும், அல்லாதவர்களைக் கடிந்தும் பாடியருளினார். இவர் நாராயண நாமத்தை முனனிட்டுப் பாடவில்லை. ஸ்ரீ திருப்பாணாழ்வார்: கலியுகம் 342-ம் ஆண்டு, துர்மதி வருடம், கார்த்திகை மாதம், கிருஷ்ண பக்ஷம், த்விதியை, புதன்கிழமை கூடின ரோஹிணி நக்ஷத்திரத்தில் ஸ்ரீவத்ஸ அம்சராய் ஸ்ரீரங்கத் திற்கு அருகிலுள்ள உறையூரில் செந்நெல் வயலுக்கிடையே அவதரித்தார், இவர் யாழின் இசையால் அரங்கத்தரவினனை பாடுவதே பிறவிப் பயனாகக் கொண்டார். ""அமலனாதி பிரான்'' எனும் திவ்விய பிரபந்தத்தைப் பத்துப் பாசுரங் களால் திருவரங்கப் பெருமானுடைய பாதாதி கேசம் (பாதம் 38 முதல் முடி) வரை அநுபவித்துப் பாடியருளி திருவரங்கனின் திருவடிகளை யடைந்தார். இவர் நாராயண நாமத்தை குறிப்பிட்டுப் பாடவில்லை ஸ்ரீ திருமங்கையாழ்வார்: கலியுகம் 398ம் ஆண்டு நள வருடம், கார்த்திகை மாதம் வியாழக்கிழமை, கிருத்திகை நக்ஷத்திரத்தில் திருக்குறைய லூரில் ஸ்ரீசார்ங்கம் அம்சமாக அவதரித்தவர். இவர் அஷ்டாக்ஷர திருமந்திரத்தின் பெருமையையும், பகவான் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள திவ்வியத் திருத் தலங்களின் சிறப்பினையும், நமமாழ்வாரின் நான்கு பிரபந் தங்களுக்கு ஆறு அங்கங்களாக ஆறு பிரபந்தங்களென “பெரிய திருமொழி' 1084 பாசுரங்களாகவும், திருக்குறுந் தாணடகம்' 20 பாசுரங்களாகவும், ''திருநெடுந் தாண் டகம்" 30 பாசுரங்களாகவும் "திருவெழு கூற்றிருக்கை. 1 பாசுரமாகவும் 'சிறிய திருமடல் " 40 பாசுரங்க ளாகவும் பெரிய திருமடல்” 781 பாசுரங்களாகவும் மொத்த 1253 பாசுரங்களால் அருளிச் செய்துள்ளார். இவற்றுள் நாராயண நாமத்தைக் குறித்துப் பாடிய பாசுரங் கள் இருபத்தொன்பது. ஸ்ரீ ஆண்டாள்: கலியுகம் 98ம் ஆண்டு, நளவருடம், ஆடிமாதம. சுக்கில பக்ஷம், சதுர்த்தசி, செவ்வாய்க்கிழமை, பூர நக்ஷத்திரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் விஷ்ணுசித்தரின் நந்தவனத்தில் திருத்துழாய் செடிக்கருகே பூமிதேவியார் ஆண்டாளாக அவதரித்தார். இவர் பகவானுக்காக விஷ்ணு சித்தர் தொகுத்து வைத்திருந்த திருத்துழாய் மாலையை சூடிக்கொடுத்த பெருமையை யுடையவராய் 30 திவ்விய பாசுரங்களால் “திருப்பாவை” எனும் பிரபந்தத்தால் பாவை நோன்பிருந்து கண்ணனுடைய அவதாரப் பெரு மைகளையும் பாடியருளி பகவானை யடைவதே பேரின்பப் பயனென விரதம் பூண்டார். இவர் நாராயண நாமத்தைக் குறித்துப் பாடிய பாசுரங்கள் ஒன்பது. தன் 6 ஸ்ரீ மதுரகவி யாழ்வார்: துவாபரயுகம் 863879ம் ஆண்டு ஈசுவர வருடம், சிததிரை மாதம், சுக்கில பக்ஷம், சதுர்த்தசி, வெள்ளிக்கிழமை, சித்திரை நக்ஷத்திரத்தில் ஸ்ரீ வைனதே யாம்சராய் திருநெல்வேலி மாவட்டம், திருக்கோளூரில் அவதரித்தார். 11 பாசுரங்கள் கொண்ட கண்ணிநுண் சிறுத்தாம்பு” எனும் பிரபந்தத்தால் தன் ஆசார்யனாகிய நம்மாழ்வாரையே தெய்வமாகக் கொண்டு, அவர் திருவாய் மலர்ந்தருளிய திவ்விய பிரபந்தங்களைப் பட்டோலை கொண்டு பாருலகிற்கு உபகரித்தார். ஸ்ரீ இராமாநுஜர்: கலியிருள் நீங்கிக்கிருதயுகம் நிலவ உலக மெல்லாம ஸ்ரீவைஷ்ணவ சமயம் ஓங்கி விசிஷ்டாத்வைத மதம் பரவி அஷ்டாக்ஷர மந்திரத்தை அகில லோகத்தவரும் அடையப்பெற்றுப் பேரின்பமாகிய மோக்ஷமடைந்து உய்யும் பொருட்டு ஸ்ரீபெரும்பூதூரில் சித்திரைத் திருவாதிரை நக்ஷத்திரத்தில் ஆதிசேஷனே ராமாநுஜராய் அவதரித்தார். காரேய் கருணை வள்ளலெனப் போற்றப்படும் இவரைத் திருவரங்கத்தமுதனார் 108| திவ்வியப் பாசுரங்களால் 'இராமாநுஜ நூற்றந்தாதி"யாகப் பாடினார். இவற்றுள் நாராயண நாமத்தைக் குறித்துப் பாடிய பாசுரம் ஒன்று. எனவே, பன்னிரு ஆழ்வார்களு தள் தொண்டரடிப் பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், மதுரகவியாழ்வார் ஆகிய மூவரைத் தவிர்த்து மற்ற ஒன்பது ஆழ்வார்களும் அருளிச் செய்த 115 பாசுரங்களும் ஸ்ரீ இராமாநுஜர் நூற்றந் தாதியில் ஒரு பாசுரமும் சேர்ந்து ஆக மொத்தம் 116 பாசுரங்களால் ஸ்ரீமந் நாராயணனின் பரத்வத்தையும் கல்யாண குணங்களையும் குறித்துப் பாடப்பட்டுள்ளன. நாலாயிரத் திவ்விய பிரபந்தத்திலுள்ள சுமார் நாலாயிரம் பாசுரங்களும் பகவானுடைய ஒப்புயர்வற்ற கல்யாண குணங்களை உரைப்பது போல், அந்நாலாயிரத் திவ்விய பிரபந்தத்துள் நாராயணனைக் குறித்துப் பாடியுள்ள 116 திவ்வியப் பாசுரங்களும் ஸ்ரீமந் நாராயணனுடைய 40 -ந்து அளவிடற்கரிய எல்லையற்ற சௌலப்ய சௌசீல்ய குணங் களைக் கூறுகின் றன. அத்தகைய உன்னதமான பெருமைகளை கொண்ட பகவானைச் சரணடை அவன் நீர்மைக் குணங்களைப் பாடி, கடக்க முடியாத சம்சாரக் கடலைக் கடப்பதற்காகவே நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தை மிக்க கருணையுடன் நமக்கு அருளியுள்ளார்கள் "நாராயணனைப் பாடிய நம் ஆழ்வார்கள்". துன்பம் தோய்ந்த உலக வாழ்வு ஆதியில் உலக சிருஷ்டியைத் தொடங்கிய பிரம்மா முதலில் சனகர், சனந்தர், சனத்சுஜாதர், சனத்குமாரர் ஆகியோரைத் தோற்றுவித்து பிரஜா சிருஷ்டியை ஆரம்பிக் குமாறு அவர்களுக்கு ஆணையிட்டார். அதற்கு அவர்கள், "எங்களால் உலக (சம்சார) வாழ்க்கையை மேற்கொள்ள முடியாது ; மோக்ஷமடைவதற்குத் தவ வாழ்க்கையே சிறந் தது" எனக் கூறித் தந்தையின் கட்டளையை மீறினார்கள். அதைக் கண்டு கோபங் கொண்ட பிரம்மா மீண்டும் உலக சிருஷ்டிக்காக சுவாயம்பு மனுவையும், சதரூபையையும் சிருஷ் டித்ததாக ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது. எம்பெருமானார் பகவத் இராமா நுஜர் 125திரு நக்ஷத்திர காலம் இம்மண்ணுலகில் வாழ்ந்து இமயம் முதல் குமரி வரை ஸ்ரீவைஷ்ணவ சமயம் பரவவும், விசிஷ்டாத்வைத தத்துவம் தழைத்தோங்கவும் இடைவிடாது அரும் பாடுபட்டார், முடிவில் உடல் தளர்ந்த காலத்தில் இம்மண்ணுலகில் தாம் வந்த காரியம் ஒருவாறு முடிந்து விட்டதாக எண்ணியதும் நம்பெருமாள் சந்நிதியை யடைந்து, ஸ்ரீவைகுண்ட கத்யம். சரணாகதி கத்யம், ஸ்ரீரங்க கத்யம் என்னும் மூன்று கத்யங் களால் நம்பெருமாளுக்கு விண்ணப்பஞ் செய்து திருநாடு செல்ல பிரார்த்தித்தார். பெருமாளும் எம்பெருமானாரை நோக்கி, "உம்மைக் கொண்டு இன்னும் சிறிது காலம் இவ்வுலகைத் திருத்தலா
41
மென இருந்தோம் : இதற்குள் அவசரப்படுகிறீரே'' என்ன,
“இவ்வுலகில் அடி சுடுகிறது; இனி காலதாமதம் வேண்டாம்"
எனப் பதிலிறுத்தாரெனில் உலக வாழ்க்கை எத்தகைய
தென்று புலனாகிறதலலவா?”
ஆழ்வார்கள் கலங்கிய மாநுடவாழ்வு
எனவே முதலாழ்வார்கள் மூவரும் ஸ்ரீதிருமழிசையாழ்
வாரும் கூட இல்லற வாழ்வினின்றும் தவவாழ்வையே மேற்
கொண்டனர். பிறவியிலேயே மஹா ஞா நியாகிய ஸ்ரீநம்
மாழ்வாரும் பிறவியிலேயே சம்சாரபந்த மற்றவராயிருந்தும்
“மின்னின் நிலையில் மன்னுயிராக்கைகள்” என்று சரீரத்தின்
நிலையாமையையும் கேட்டினையும் விளக்கி,
“கூவிக் கூவிக் கொடு வினைத் தூற்றுள் நின்று
பாவியேன் பலகாலம் வழி திகைத்து அலமருகின்றேன்''
(3-2-9)
என்று மண்ணுலக வாழ்வைக் கண்டு திகைத்தும்,
“தரியேன் இனி உன் சரணம் தந்தென் சன்மம் களையாயே!”
என்று தன் பிறவியெனும் நோயைக் களைந்து அருள் செய்யு
மாறும் வேண்டுகின்றார்.
ஸ்ரீலக்ஷ்மீநாராயணனுக்கு மங்களா சாஸநஞ் செய்த
ஸ்ரீபெரியாழ்வாரும்,
"வாழாட்பட்டு நின்றீருள்ளீரேல்
வந்து மண்ணும் மணமும் கொண்மின்
கூழாட்பட்டு நின்றீர்களை
எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்......”(1-1-3)
என்று பகவத் பாகவதர்களைப் போற்றியும் வயிற்றுச் சோற்
றுக்கு அடிமைப்பட்டவர்களைக் கண்டித்தும் பகவத் சம்பந்தம்
பெறுமாறு அழைக்கின்றார் மேலும்,
"ஆசைவாய்ச் சென்ற சிந்தையராகி
அன்னையத்தன் என் புத்திரர் பூமி
42 வாசவார் குழலாளென்று மயங்கி மாளும் எல்லைக்கண் வாய்திறவாதே'' (4-5-1) என்னும் பாசுரத்தால் சம்சார வாழ்வில் சிக்கி, மாதா, பிதா, மனைவி, மக்கள், பூமி ஆகிய ஆசையில் மயங்கி, மயங்கி, அந்திய காலத்தில் படும் மரண வேதனையைக் குறிப்பிடுகினறார். மற்றும், "பறவையேறு பரம புருடா! நீ யென்னைக் கைக்கொண்டபின் பிறவியென்னும் கடலும் வற்றிப் “பெரும்பத மாகின்றதால்..........'' என்னும் பாசுரத்தால் பகவத் சம்பந்தம் பெற்றதால் பிறவிக் கடல் வற்றிப் பேரின்பப் பயன் பெற்றதாகக் கூறுகிறார். “வாயொரு பக்கம் வாங்கி வலிப்ப வார்ந்த நீர்க்குழிக் கண்கள் மிழற்ற தாயொரு பக்கம் தந்தை யொருபக்கம் தாரமும் ஒருபக்கம் அலற்ற தீயொரு பக்கம் சேர்வதன் முன்னம் செங்கண் மாலொடும் சிக்கெனச் சுற்ற மாயொருபக்கம் நிற்கவல்லார்க்கு அரவதண்டத்தில் உய்யலுமாமே'' (4-6-9 என்னும் பாசுரத்தால் அந்தியகாலத்தில் படும் அவதியைச் சித்திரித்து, தாய், தந்தை, தாரம் எனத் துயரமுற்றுச் சூழ் கின்ற தீயை அடைவதற்கு முனபாகச் செங்கண்மாலோடு சீக்கிரம் சேர்ந்து உய்யுங்களென்று அழைக்கின்றார். மனித வாழ்வினைக் கண்டு கலங்கிய ஸ்ரீ தொண்டரடிப் பொடியாழ்வாரும், “வேதநூற் பிராயம் நூறு மனிசர்தாம் புகுவரேலும் பாதியும் உறங்கிப்போகும் நின்றதில் பதினையாண்டு பேதை பாலகனதாகும் பிணிபசி மூப்புத்துனபம் ஆதவால் பிறவிவேண்டேன் அரங்கமா நகருளானே!"
43
என்றபடி வேதத்தில் மனிதனுடைய வயது நூறு என்று
கூறப்பட்டிருப்பினும், உறக்கததில் பாதியும், மறுபாதி நாள்
பிணி பாலபருவம், பசி, வயோதிகம் முதலிய துன்பங்களா
லும் கழியும் இம்மானுடப் பிறவியைப் பழித்து வேண்டா
மென்று அரங்கநாதனை வேண்டுகின்றார். மற்றும்,
"பெண்டிரால் சுகங்கள் உய்பபான் பெரியதோர்
இடும்பைபூண்டு
உண்டிராக் கிடக்கும்போது உடலுக்கே கரைந்து நைந்து”
என்று பெண்களால் சுகங்களை யநுபவிப்பதற்குச் சம்சார
வாழ்வில் படும் அளவிடற்கரிய துனபங்களை யெண்ணி
வேதனைப்படுகினறார்.
அரச போகத்தையே வெறுத்து அரங்கன் திருவடியே
அபயமெனக் கொண்ட ஸ்ரீ குலசேகரப்பெருமான்,
'மெய்யில் வாழ்க்கையை மெய்யெனக் கொள்ளும் இவ்
வையந்தன்னொடும் கூடுவதில்லை யான்'' என்றும்,
நூலின் நேரிடையார் திறத்தே நிற்கும்
ஞாலந்தன்னொடும் கூடுவதில்லை யான்'' என்றும்,
"மாரனார் வரிவெஞ்சிலைக் காட்செய்யும்
பாரினாரொடும் கூடுவதில்லை யான்'' என்றும்,
"உண்டியே உடையே யுகந்தோடும் இம்
மண்டலத்தொடும் கூடுவதில்லை யான்''
என்னும் பாசுரங்களினால் பொய்யான வாழ்க்கையை மெய்
யெனக் கொண்டு, அதனால் பெண்களிடம் நேசங்கொண்டும்
அவர்களுக்குப் பணிவிடை செய்தும், சோற்றுக்காகவும்
துணிககாகவும் ஆசைப்பட்டுக் கிடக்கும் இவ்வுலகத்தாரோடு
நான் கூடமாட்டேனென்று கலங்குகின்றார்.
வாள் வலியால் ஸ்ரீலக்ஷ்மீ நாராயணனிடமிருந்து அஷ்டா
க்ஷர மந்திரத்தை ஓதப்பெற்ற ஸ்ரீதிருமங்கையாழ்வார் தன்
கடந்து போன வாழ்க்கையை யெண்ணிக் கலங்கி,
44
"வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்
பெருந்துயர் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர் தம்மொடு
அவர்தரும் கலவியே கருதி. ஓடினேன்...” (1-1-1)
என்று அற்பர்களோடு கூடி அடைந்த துயரத்தை எண்ணி
யும்,
பாவியேன் உணரா தெத்தனை பகலும்
பழுதுபோ யொழிந்தன நாள்கள்..." (1-1-2)
என்று அறியாமல் கழிந்த நாள்களை எண்ணியும்,
“சேமமே வேண்டித் தீவினை பெருக்கித்
தெரிவைமார் உருவமே மருவி
ஊமனார் கண்ட கனவிலும் பழுதாய்
ஒழிந்தன கழிந்த அந்நாள்கள்...”
(1-1-3)
என்று தீயகருமங்களால் கழிந்து போன நாள்களை நினைத்துத்
துயரப்பட்டும் பாடியுள்ளார். மேலும்,
“தாயே தந்தையென்றும் தாரமே கிளைமக்களென்றும்
நோயே பட்டொழிந்தேன் நுன்னைக் காண்பதோர்
ஆசையினால் ..." (1-9-1)
என்று சம்சார வாழ்க்கை யென்னும் நோயில் பட்ட வேதனை
யையும்,
''மானேய் கண்மடவார் மயக்கிற்பட்டு மாநிலத்து
நானே நானாவித நரகம்புகும் பாவஞ்செய்தேன்...'' (1-9-2)
என்று பெண்கள் ஆசையால் பலவிதமான நரகம் புகும்
பாவம் செய்ததையும்,
"கொன்றேன் பல்லுயிரைக் குறிக்கோள்
ஒன்றில்லாமையினால்
என்றேனும் இரந்தார்க்கு இனிதாக உரைத்தறியேன்...'
(1-9-3)
45 என்று காரணமேயின்றிப் பல உயிர்களைக் கொன்றேனே யன்றி, ஒருபோதும் அடைந்தவர்களுக்கு இனியபடி உரைக்க வில்லையே யென்பதையும், ''குலந்தான் எத்தனையும் பிறந்தேயிறந் தெய்த்தொழிந் தேன் நலந்தான் ஒன்றுமிலேன் நல்லதோர் அறஞ் செய்துமிலேன் ..... (1-4-4 என்று பிறவிகள் பல எடுத்தும் நல்ல காரியம் எதுவும் செய் யாது போனமையையும், "எப்பாவம் பலவும் இவையே செய்து இளைத் தொழிந்தேன் துப்பா! நின்னடியே தொடர்ந்தேத்தவும் கிற்கின்றிலேன் ...'' என்று பல பாவ காரியங்கள் செய்தமையையும் பகவானைத் தொழாதிருந்தமையையும், “மண்ணாய் நீரெரிகால் மஞ்சுலாவு மாகாசமுமாம் புண்ணார் ஆக்கைதன்னுள் புலம்பித் தளர்ந்தொழிந்தேன்...” என்று பஞ்சபூதமய மாய் அறுவறுக்கத் தக்கதான உடலைக் கொண்டு அழுது அவதிப்படுவதையும், “தெரியேன் பாலகனாய்ப் பல தீமைகள் செய்துமிட்டேன் பெரியேன் ஆயினபின் பிறர்க்கே யுழைத்தேழையானேன்...” என்று தெரியாப் பாலகனாய்ப் பல தீமைகள் செய்து பெரி யவன் ஆயினபின்பு ஐம்புலன்களுக்கு உழைத்ததையும், • நோற்றேன் பல் பிறவி நுன்னைக் காண்பதோ ராசையினால் ஏற்றேன் இப்பிறப்பே இடருற்றனன எமபெருமான்!......'' என்று பகவானைக் காணும் ஆசையினால் பல பிறவிகள் எடுத்த பின், இப்பிறவி எடுத்துத் துயரப்படுவதையும், "பற்றேல் ஒன்றுமிலேன் பாவமே செய்து பாவியானேன் மற்றேல் ஒன்றறியேன மாயனே! எங்கள் மாதவனே! என்று பற்று எதுவுமின்றிப் பாவம் செய்தேனேயன்றி, மற் றெதையும் அறிய மாட்டேன் பெருமானே! என்று தன கைம் ......
46 முதல் ஒன்றுமில்லாமையையும் விண்ணப்பித்துத் திருவேங் கடமுடையானைச் சரணடைந்து, தான் மனிதப்பிறவி பெற்று அறியாமையாலும் மற்ற வகையிலும் செய்த பாவங்களைப் போக்கியருளுமாறு பற்பலவாறு பிரார்த்திக்கின்றார். மனிதப் பிறவியில் எண்ணரிய துன்பங்களுக்குத் துணை யாய் விளங்கும் மனை வாழ்க்கையைக் கடிந்து, தொல்லை நீங்கி வாழும் வகையைக் காட்டுமாறு விண்ணகர் மேயவனை வேண்டி, "சாதலும் பிறத்தலும் என்றிவற்றைக் காதல் செய்யாது உன் கழலடைந்தேன் ஓதல்செய் நான மறையாகி உம்பர் ஆதல் செய் மூவுருவானவ னே! ஆணடாய் உன்னைக் காண்பதோர் அருளெனக் கருளுதியேல் வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே!'' என்று இரங்கிக் கூறும் இப்பாசுரம் மனை வாழ்க்கையில் சிக்கி மாய்ந்து போகும் மாநுட கோடிகளுக்கு ஓர் எடுத்துக் காட் டாகும். பகவானைப் பாடிப் பரவசராகி, பந்தபாசங்களை யகற்றி உய்யும் வகை காணு வதற்காக அடையப்பெற்ற கரண களே பரங்களைக் கொண்டு, “வம்புலாம் கூந்தல் மனைவியைத் துறந்து பிறர் பொருள் தாரமென்று இவற்றை நம்பினார் இறந்தால் நமன் தமர் பற்றி எற்றிவைத்து எரியெழுகின்ற செம்பினால் இயன்ற பாவையைப் பாவீ! தழுவென மொழிவதற்கு அஞ்சி நம்பனே! வந்து உன் திருவடியடைந்தேன் நைமிசாரண்யத்துள் எந்தாய்!'' என்னும் அரிய பாசுரத்தின்படி மனிதப் பிறவி என்னும் மாயையில் சிக்கி, பெண்ணாசை, பொருளாசையால் எண் ணரிய தீய கருமங்கள் செய்ததன் பயனாக ஏற்படும் யமதண் 47 எனும் டனையின் பயங்கர வேதனை சிந்தனைக்கு உரியது மட்டுமல்ல! மனித வாழ்க்கைக்கு ஓர் எச்சரிக்கையுமாகும். சூடிக்கொடுத்த ஆண்டாளும் "திருப்பாவை”யில், "எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் மற்றை நங் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்" என்று பகவானோடு எத்தனை பிறவி எடுத்தேனும் பகவா னுக்கே பணி செய்யும் பாக்கியம் அருளுமாறு பிரார்த்திக் கின்றார். இன்றைக்கு ஏறக்குறைய 800 வருடங்களுக்கு முன் ஸ்ரீ பட்டருடைய சிஷ்யராய் திருவரங்கத் திவ்விய க்ஷே ததிரத் தில் நித்திய வாசஞ் செய்து அஷ்ட பிரபந்தம்" என அரிய பாசுரங்களால் திருவரங்கப் பெருமானின் திருவிளை யாடல்களையும், மற்றுமுள்ள க்ஷேத்திரங்களின் ப்ரபாவங் களைப் பற்றியும் பற்பலவாறு போற்றிப் பாடியும், ஆழ்வார் களையும் ஆசார்யர்களையும் பின்பற்றி ஆராதனை செய்தும் வந்த மகா வித்வான - திவ்வியக்கவி பிள்ளைப்பெருமாள் அய்யங்கார் என்னும் பாகவத சிரேஷ்டர் சம்சார வாழ்க் கையக் கண்டு அஞ்சி, "தனமாதர் அஞ்சொற் குதலைப் புதல்வர் தரணி இல்லம் தனம் ஆதரஞ்செயும் வாழ்வு அஞ்சியே தஞ்சம் நீயெனப் போந் தனம் ஆதரங்கிக்க வெற்பெடுத்தாய்! தண்ணனந்த சிங்கா தன! மாதரங்கமுள்ளாய்! அரங்கா! முத்தி தந்தருளே!" என்று மனைவி, மக்கள், பூமி, வீடு, செல்வம் இவற்றை ஆதாரமாகக் கொண்ட மனித வாழ்வைக் கண்டு கலங்கிப் பற்பலவாறு பாடியுள்ளார். மாண்பு மிக்க மானுடப் பிறவி இத்தகைய இல்லற வாழ்விற்கு அடிப்படையாக இருப் பது மனிதப் பிறவியாகும். மனிதப் பிறவியே அறம், 481 பொருள், இன்பத்தை அநுபவிக்கவும், முடிவில் பேரின்ப மாகிய வீடு பெறவும் தகுதியுள்ளதாய் இருக்கிறது கொந்தளிக்கும் கடலில் கப்பலில் ஓட்டும் மாலுமி போன்றவன் குடும்ப வாழ்க்கையை நடத்தும் கிருஹஸ்தன் (இல்லறம் நடத்துபவன்). திசை தவறி தவறி புயலில் சிக்கிய மாலுமியின் கதியையே இல்லற தர்மத்திலிருந்து விலகிய கிருஹஸ்தன் அடைவானென்பதில் ஐயமில்லை. கிருஹஸ் தனே பிரம்மசர்யம், வானப்ரஸ்தம், சந்யாசம் ஆகிய மூன்று ஆசிரமங்களுக்கும் பெருந் துணையாய் இருக்கின்றான். இதையே திருவள்ளுவர், “இல்வாழ்வான் என்பான இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை” என்று இல்லறம் நடத்துபவனை (கிருஹஸ்தனை)ப் பாராட்டிக் கூறியுள்ளார் . கிருஹஸ்தன் கடமை இத்தகைய கிருஹஸதன் சரீரத்தைப் போஷிப்பதே குறிக்கோளாகக் கொண்டும்" ஐவர் குமைக்கும் சிற்றின்பம்” என்று நம்மாழ்வார் பழித்துக் கூறும் ஐம்புலன் இன்பங் களிலேயே நாட்டங் கொண்டும் உற்றார், உறவினர், சுற்றத் தாரையே துணையாக எண்ணிக்கொண்டும் செயலாற்றிக் கொண்டு இருந்தால், இல்லறவாழ்வு மிருக வாழ்வாகி, முடிவில் நரகத்தில் விழ நேரிடும். எனவே, கிருஹஸ்தன் பந்தபாசங்களினால் ஏற்படும் துன்பங்களிலிருந்து விடுதலை பெற்று பகவத் சம்பந்தம் பெறுவதற்குப் பெருந் துணையா யிருப்பது ஆத்ம ஞானமாகும். கிருஹஸ்தன் உலக விஷயங்களிலேயே காலத்தைக் கழிக்காமல் , ஆத்மக்ஷேமம் அடையும் பொருட்டு பகவத் ஞான சமபந்தமான விஷயங்களில் மனதைச் செலுத்திப் புனிதமான தர்ம காரியங்களில் ஈடுபட வேண்டுமெனபது ஆழ்வார்கள், ஆசாரியர்களுடைய அருள் போதனையாகும்.
49 கிருஹஸ்தன் உலகில் செய்யக்கூடிய எல்லாத் தர்ம காரியங்களுக்கும் அடிப்படையாயிருப்பது இல்லற தர்ம மெனப் போற்றப்படுகின்றது அதுவும் மற்றவர்கள் குறை கூறும்படி இலலாதிருந்தால் மேனமையாகுமென்பதை, "அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன் பழிப்பது இல்லாயின் நன்று" என்று மேலும் திருவள்ளுவர் இல்லற வாழ்க்கையைப் புகழ்ந்து கூறியுள்ளார். புண்ணியம் பல செய்து பெருமைக்குரியவராகி சுவர்க் காதி இன்பங்களை அனுபவிக்கும் தேவர்களும்கூட புண்ணிய பலத்தின் கரலம முடிந்ததும இம்மணணுலக வாழ்வை மீண்டும் அடைய வேண்டியவர்களாய் இருக்கின்றார்கள். அத்தகைய தேவர்களும் மேனமேலும புண்ணியம் தேடு வதற்குச் சாதனமாயிருக்கும் பகவத் அனுபவம் பெறுவதற் குச் சுவர்க்கத்தில் தக்க வாயப்பு வசதிகளும் சூழ்நிலையும் இல்லாமல் இருக்கிறார்கள். எனவே தேவர்களும் கூட பகவத் அனுபவம் பெற்று மோக்ஷம் அடைவதற்கு இம்மண்ணுலகை நாடி வருகிறார்கள். ஆயினும், இவ்வையகத்தில் சரீர சம்பந்தம் பெற்ற கிருஹஸ்தர்கள் பகவத் அநுபவம் பெறுவதற்கு வேண்டிய சாதனமும் சூழ்நிலையும் இருந்தும் அதைப் பயன்படுத்திக் கொண்டு ஆதமா நுபவம் பெறாமல் கர்ம வசப்பட்டு சரீர சம்பந்தத்தால் அதர்ம அதர்ம காரியங்களில் ஈடுபடுகின்றார்கள். அவ்வாறினறி கிருஹஸதர்கள் சரீர சம்பந்தத்தைப் பொருட் படுத்தாமல் ஆத்மா நுபவம் பெற்று தர்மமான காரியங்களில் ஈடுபடுவார்களேயாகில, அவர்கள் நிலத் தேவர்களாகப் புகழப்படுவார்கள் என்பதை, "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்'' என்னும் குறளால் சுட்டிக் காட்டியிருப்பது பகவத் அனுபவத் நா-4 50 பெற்று திற்குத் தக்கதொரு சான்றாகும். மா நுடப் பிறவி பெற்ற வர்கள் செய்யும் புனிதமான காரியங்களின் மூலம் ஆத்ம ஞானம் பெற்று பகவத் சம்பந்நர்களாகி மோக்ஷ பேரின் பத்தை எய்துவார்களென்பது திண்ணமாகும். அவ்வாறின்றி கிருஹஸ்தர்கள் ஆத்ம ஞானத்தை மறந்து சரீர சம்பந்தத்தால் ஏற்படும் கர்ம சம்பந்தங்களில் சிக்கி இவ்வுலக இனபங்களில் நாட்டங் கொள்வாரேயாகில், தூராக்குழியில் விழுந்து பிறவி யெனும் மீளா நரகிற்கு ஆளாவார்களென்பதில் ஐயமில்லை யென்பதைத் தெளிந் துணர்ந்தாலன்றி, சன்மம கடைத்தேற வழியில்லை. எனவே மனைவி, மககள், சுற்றத்தார் அனைவரும் கர்ம சம்பந்தத்தால் ஏற்பட்டவர்களெனபதை உணர்ந்து பாகவதர்களுடன் சேர்ந்து பகவதநுபவம் உஜ்ஜீவியுங்களென்று நம்மாழ்வார் திருவாய் மலர்ந்தருளிய “கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும் கண்டதோடு பட்டதல்லால் காதல் மற்றியாதுமில்லை எண்டிசையும் கீழும் மேலும் முற்றவும் உண்டபிரான் தொண்டரோமாய் உய்யலல்லால் இல்லைகண்டீர் துணையே" என்னும் இப்பாசுரம் சம்சாரிகள் சிரமேற் கொண்டு செய லாற்றத் தக்கதாகும். மானுடப் பிறவி பெற்ற மாந்தர் தேவதாந்தரங்களை (நாராயணனை யல்லாத தேவதைகளை)ப் பூஜித்து அற்பப் பலன்களை யடைகின்றார்கள். அவை யாவும் நிரந்தரமான பலன்கள் அல்ல. ஸ்ரீய:பதியாகிய நாராயணனைச் சரணடைந்து அடையும் பலனே என்றும் அழிவற்ற பேரின்பப் பலனாகும். அவ்வாறின்றி ஏக சக்ராதிபதியாய் உலகமெல்லாம் ஒரு குடைக் கீழ் ஆண்ட மன்னனும் அரச போகம் யாவும் இழந்து கருநாய் கடித்த காலுடன் உடைந்த பானையேந்தி பிச்சை யெடுக்கும் கதியையடைவாரென்பதை ''ஒரு நாயகமாய் ஓட உலகுடனாண்டவர் கரு நாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர் பெருநாடு காண இம்மையிலே பிச்சைதாம் கொள்வர் திருநாரணன் தாள் காலம்பெறச் சிந்தித்துய்ம்மினோ” என்று நம்மாழ்வார் அருளிச் செய்துள்ள பாசுரம் சர்வேச் வரனை ஆராதித்து அடையும் பலனை விட்டு, அற்பப் பலன்களுக்காக மா நுட வாழ்வையே கதியெனப் பற்றுப வர்களுக்கு ஓர் எச்சரிக்கையாக இருக்கின்றதெனலாம். இவ்வாறு ஆழ்வார்களும் . ஆசார்யர்களும், அவர்களுக் குப்பின் தோன்றிய உத்தம சிரேஷ்டர்களாகிய மஹான்கள் பலரும் கண்டு கலங்கும் சம்சார வாழ்க்கை எத்தகைய தொல்லையும் துயரமும வாய்ந்ததென்று தெளிவாக விளங்கு கின்றதல்லவா ? சம்சாரி எத்தகையவன்? தந்தை-தாய், மனைவி, மக்கள், தனம், தானியங்களும் கூடிய இவ்வுலக வாழ்விற்கு அடிப்படையாக இருப்பது சம்சார வாழ்வு. சம்சாரம் என்னும் சொல்லானது. சம் + சாரம் என்னும் இரு சொற்களால் ஆனவை. சம் என்றால் கூட்டி என்றும், சாரம் என்றால் அனுபவிக்கும் இன்பம் என்றும் பொருள்படும். சம்சாரி என்னும் சொல்லுக்குப் பலரோடும் கூடிய இன்பத்தை அனுபவிப்பவனென்று பொருள் கொள்ள லாம். தந்தை, தாய், மனைவி, மக்கள், உற்றார், உறவின ருடன் கூடிய சம்சாரியைக் கண்டால் சர்ப்பத்தைக் கண்டாற் போல் அஞ்சி யிருக்கவேண்டும்” எனறு ஸ்ரீவசந பூஷணததில் கூறப்பட்டுள்ளது. சாப்பம் கடித்தவுடனே மனிதன் நோவுபட்டு இறந்துவிடுவான். ஆனால், சம்சார வாழ்க்கையில் ஈடுபட்டவன் காலமெலலாம் நோவு பட்டுக் கொண்டே சாவானென்பது உண்மையல்லவா! சம்சாரம் ஒரு விஷவிருக்ஷம் க்ஷண மாத்திரத்தில் சுகமும் துக்கமும் கலந்து சக்கரம் போல் உருண்டோடும் இச்சம்சார வாழ்வு ஒரு விஷவிருக்ஷம் 6
52
என்று முநிவர்களும் மூத்தோர்களும் கலங்கிக் கூறியுள்ளனர்.
ஆயினும், இச்சமசாரமாகிய பயங்கர விஷ விருக்ஷத்தில
அமுதமயமான இருகனிகள் உள்ளன மா நுடகோடிகள் பந்த
பாசங்களும் துன்பங்களும் நிறைந்த இச்சம்சார வாழ்க்கையி
லிருந்து கடைத்தேறி உஜ்ஜீவிக்கும் பொருட்டு பகவான்
நமக்காக அளித்துள்ள அவ்விரு கனிகளே பகவத் ஆராதனை
யும் பாகவத ஆராதனையுமாகும.
சம்சார பந்தம் தீர பகவந் நாமங்களே தஞ்சம்
பந்தபாசம் நிறைந்த கர்ம வசப்பட்ட அமைதியற்ற
இவ்வுலகில் பிறந்த மா நுடகோடிகள் எண்ணரிய துன்பங்
களிலிருந்து விடுதலை பெற்று அமைதியும் இன்பமும் பெறத்
துணையாகவும் வழிகாட்டியாசவும் இருப்பது பகவானுடைய
திருநாமங்களே இன்பமுற்றபோதும் துன்பம் நேர்ந்த
போதும் அதைக் கண்டு சற்றும் கலங்காமல் "எல்லாம்
இறைவன் செயல்” என எண்ணித் தம்மை ஈசுவரார்ப்பணம்
செய்து சரணமடையும ஜீவான்மாக்களைக் காத்தருளும்
கருணை வள்ளல பகவானே. எனவே அவனைச் சரணமடை
யும் சம்சாரிகளுக்குச் சம்சாரமாகிய விஷவிருக்ஷத்தைப்
பற்றிய கவலையே இல்லை இதை நன்குணர்ந்த ஸ்ரீபொய்கை
யாழ்வார் “இயற்பா-முதல் திருவந்தாதி"யில்,
“வினையால் அடர்ப்படார் வெந்நரகில் சேரார்
தினையேனும் தீககதிக்கண செல்வார்- நினைதற்கு
அரியானைச் சேயானை ஆயிரம் பேர்ச் செங்கண்
கரியானைக் கைதொழுதக்கால்
என்றும்,
"மனமாசு தீரும் அருவினையும் சாரா
தனமாய தானே கைகூடும் --புனமேய
பூந்துழாயான் அடிக்கே போதொடு நீரேந்தித்
தாம் தொழா நிற்பார் தமர்*
53 6. என்னும் இவ்விரு பாசுரங்களால் "பகவானை அனவரதமும் ஆராதனை செய்பவர்கள் இப்பிறவியில் கர்ம வினையால் அவதிப்படமாட்டார்கள், கொடிய நரகிலும் சேரமாட்டார் கள்; திணையளவும் தீய - வழிகளில் சல்லமாட்டார்கள் என்றும், மனத்திலுள்ள குற்றங்கள் தீர்ந்து விடும். கொடிய பாவங்களும் சேரா; செல்வமாகிய யாவும் கைகூடும்'' என்றும் கூறுகிறார். பகவதாராதனையின் பெருமை பகவதாராதனையின சிறப்பைக் குறித்து மாதவ ஞாநி ஸ்ரீ திருமழிசையாழ்வாரும் ''திருச்சந்த விருத்தத்"தில், "அறிந்தறிந்து வாமனன் அடியினை வணங்கினால் செறிந்தெழுந்த ஞானமோடு செல்வமும் சிறந்திடும் மறிந்தெழுந்த தென் திரையுள் மன்னுமாலை வாழ்த்தினால் பரிந்தெழுந்து தீவினைகள் பற்றறுதல் பான்மையே'' என்னும் பாசுரத்தால் உலகளந்த வாமனப் பெருமாளை வணங்கினால் புகழ் மிக்க ஞானத்துடன் செல்வமும் சேருவ தீயபாவங்கள் யாவும் அறவே அகலுமென்று திருவாய் மலர்ந்தருளியுள்ளார். பகவதாராதனையின் பெருமையை ஸ்ரீ பூதத்தாழ்வார் இயற்பா இரண்டாம் திருவந்தாதி"யில் கேவலம் பொருளால் தேவர் உலகத்தை அடைய முடியாதென்றும், அருளாலே அறம் பெறலா மென்றும், அருளைப் பெறுவதற்கு மணி வண்ணன் பாதங்களை மறவா மல் துதிக்கும்படி கூறும் பாசுரம் இது: "பொருளால் அமருலகம் புக்கியலலாகாது அருளால் அறமருளுமன்றே - அருளாலே மாமறையோர்க் கீந்த மணிவண்ணன் பாதம் நீ மறவேல் நெஞ்சே! நினை.' துடன் - 541 மா நுடப் பிறவி பெற்றுக் கணக்கில் அடங்காத பாவத்தைச் செய்ததினால் கொடிய நரக வேதனை யடைய முடியாமல் தவிர்க்க வேண்டுமானால், உலகளந்தப் பெருமா னுடைய பாதங்களை வணங்குவதற்கு இப்போதே முயற்சிக்க வேண்டுமென்பதை, ''பின்னால் அருநரகம் சேராமல் பேதுறுவீர்! முன்னால் வணங்க முயல்மினோ-பன்னூல் அளந்தானைக் கார்க்கடல்சூழ் ஞாலத்தையெல்லாம் அளந்தானவன் சேவடி” என்னும் பாசுரத்தால் ஸ்ரீ பூதத்தாழ்வார் பகவதாராதனை யின் சிறப்பினைப் பாடியருளியுள்ளார். பிறந்தநாள் முதல் தவயோகியாய் வேதம் தமிழ்ச் செய்த மாறன் சடகோபன், ''ஓயு மூப்புப் பிறப்பு இறப்புப் பிணி வீயுமாறு செய்வான் திருவேங்கடத்து ஆயன் நாள்மலராம் அடித்தாமரை வாயுள்ளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே” என்னும் பாசுரத்தால் கலியுக வரதனாய், காட்சிக்கு இனிய வனாய் விளங்கும் திருவேங்கடமுடையானை வாயினாலும் மனத்தினாலும் தியானிப்பவர்களின் ஓய்வில்லாத பிறப்பு இறப்பு என்னும் நோயை யகற்றிக் காத்தருளுவானென்று திருவாய் மலர்ந்தருளியுள்ளார். பகவதாராதனையின் பலன் ஸ்ரீமணவாளமாமுநிகள் பகவதாராதனையின் ஏற்றத்தை ஸ்ரீவசநபூஷண வியாககியானத்தில், “கார்த்திகை மாதத் தில் விஷ்ணு ஆலயத்தில் ஏற்றி வைத்தத் திருவிளக்கின் திரியானது ஒளி குறைந்து எரிந்து கொண்டிருந்தது. அப் போது ஒரு எலி அத்திரியைக் கௌவி இழுத்தது. அச்சமயம் ஒரு பூனை வருவதைக் கண்ட அந்த எலி திரியை விட்டுவிட்டு ஓடிவிட்டது. ஒளி மங்கியிருந்த திரியைத் தீண்டித் தூணடி 55 யதால், அவ்விளக்கு மிக்கப் பிரகாசத்துடன் எரியலாயிற்று, எலியினுடைய அச்செயலானது ஒரு புண்ணிய காரியமாகி, அடுத்த பிறவியில் அந்த எலி ஓர் அரசகுமாரியாகப் பிறந்து சிறந்து விளங்கிய தெனறு ஸ்ரீவிஷ்ணு தர்மத்தில் லலிதா சரிதத்தை விரிவாகக் கூறியுள்ளார். பகவதாராதனையின் சிறப்பினை விளக்கும் மற்றொரு புனித சாஸ்திரத்தை இங்கு காண்போம்: நம்பாடுவான் என்றொரு உத்தம பக்தன் அவன் தினந்தோறும் திருக் குறுங்குடிக்கு நடந்து சென்று திவ்வியமான பாடல்களால் இனிமையாகப் பாடி பகவானை மகிழ்விக்கச் செய்வதைத்தன் கடமையாகக் கொண்டவன கார்த்திகை மாத சுக்ல பக்ஷம் பகவானுக்கு மிகவும் பிரியமான நாளாகும். நம்பாடுவான் அன்றைய தினம பூராவும் விரதமிருந்து உள்ள முருகப் பகவானைப் பாடி பரவசமடையச் செய்வது வழக்கம் அன்றொரு நாள் ஏகாதசி திதியன்று இரவு வழக்கம் போல நம்பாடுவான் பகவானைப் பாடித் துதிக்கும் பொருட் டுச் சந்நிதியை நோக்கிப் புறப்பட்டான். காட்டின் வழியாகச் செல்லும் போது ஒரு பிரம்ம ரக்ஷஸ் நம்பாடுவானைத் தடுத்து நிறுத்தி, “நீ யார்? எங்கே போகினறாய்? மிகவும் பசியாக இருக்கும் எனக்கு இன்று நீ நல்ல ஆகாரமாவாய்" என்று அதட்டிக் கூறியது. பிரம்ம ரக்ஷஸின் வார்த்தைகளைக் கேட்ட நம்பாடுவான் சற்றுத் திகைப்படைந்தாலும் ஒருவாறு தேறி, “என்னை இப்போது ஒன்றும் செய்ய வேண்டாம்; நான் அடுத்தாற் போலுள்ள பகவான் சந்நிதிக்கு அவசரமாகப் போய் பரடிய பின் திரும்பிவந்து உனக்கு ஆகாரமாகின்றேன்; என் வார்த் தைகள் சத்தியமானவை; என்னைப் போகவிடு” என்று வேண்டினான். இவ்வாறு பிரம்ம ரக்ஷஸிற்கும் நம்பாடுவானுக்கும் வெகு நேரம் வாககுவாதம் ஏற்பட்டு, கடைசியாக பிரம்மரக்ஷஸ் நம்பாடுவான வார்த்தைகளை நம்பி அவனைப் போகவிட்டது.
56 நம்பாடுவான் பகவான் சந்நிதியை யடைந்து பலவாறு பகவானைக் கைசிகம் என்னும் பண்ணால் உருக்கமாகப் பாடிய பின்னர், மீண்டும் பிரம்மரக்ஷஸிடம் வந்து தன்னை ஆகார மாக்கிக் கொள்ளும்படி உரைத்தான். மிகவும் பசியுடன் காத்திருந்த பிரம்மரக்ஷஸ் சொன்ன படியே திரும்பி வந்துள்ள நம்பாடு வானின் நேர்மையையும் பக்தியின் தூய்மையையும் கண்டு வியப்புற்று மனம் மாறி யது. நம்பாடுவானை நோக்கி அன்று பாடிய பாடல்களின் பல னைத் தனக்குத் தரும்படி வேண்டியது. நம்பாடுவான் மறுக் கவே, ரக்ஷஸ் மேலும் மேலும் வேண்டிப் பின் சரணாகதி பண்ணிற்று. பிறகு நம்பாடுவான் மனமிரங்கி, அன்று பாடிய கைசிகப்பண்ணின் பலனைக் கொண்டு ரக்ஷஸ் ஜன்மத்தினின் றும் விடுவித்து மோக்ஷத்தை யடையும்படி பண்ணினான். பகவதாராதனையின் ஏற்றத்தை யறிந்த ஆழ்வார்கள் பகவானை நாலாயிரம் திவ்வியப் பாசுரங்களால் பாடிப்பரவி, உலகமாந்தர் உய்யும் வகையைக் காட்டி யருளினர். அங்ஙனமே ஆசார்யர்களும், மற்றுமுள்ள முனிசிரேஷ்டர் களும், இதுவரை தோன்றிய பாகவதோத்தமர்களும் பகவதா ராதனையின் பெருமையை எடுத்துக்கூறி மண்ணுலகத்தோர் துயர் நீங்கி வாழத் துணை புரிந்தனர். ஞாநியின் பெருமை பகவதாராதனையின் பெருமையை பிரம்மாதி தேவர் களும், நாரதாதி முநிவர்களும், பராசரர், வியாசர், சுகர் முதலான தவச்சிரேஷ்டர்களும் புகழ்ந்து கூறியிருப்பினும், பக்தவச்சலனும் பாகவதப் பிரியனுமாகிய பகவான் மாநுட கோடிகள் தன்னிடம் பக்தி கொண்டு ஆராதனை செய்வதைக் காட்டிலும், தன்னிடம் நீங்காத பக்தி யுடையவர்களான பாசுவதர்களிடம் பக்தி கொண்டு அவர்களை ஆராதனை செய்வதையே மிகவும் விரும்புகிறானென்னும் விஷயத்தை பகவத் கீதையில், 57 "தேஷாம் ஜ்ஞாநீ நித்யயுக்த ஏகபக்திர் விசிஷ்யதே ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோ Sத்யர்த்த மஹம் ஸச மமப்ரிய:" (என்னிடம் சதா பக்தி உள்ளவனும், என் ஒருவனிடமே பக்தி உடையவனுமான ஞாநி உயர்ந்தவன். ஞாநிக்கு நான் மிகவும் பிரியமானவன். அது போலவே அவனும் எனக்கு மிகவும் பிரியமானவன்) என்று ஞாநியை மிகவும் புகழ்ந்துள் ளார். அதுவன்றியும் ஞாநியின் பெருமை எத்தகைய தென்பதை, "காமைஸ தைஸ்தைர் ஹ்ருத ஜ்ஞாநா: ப்ரபத்யந்தே Sந்யதேவதா: தம்தம் நியமமாஸ்தாய ப்ரக்ருத்யா நியதா: ஸ்வயா.” {7-20) (ஜனங்கள் தங்களுக்கு இது வேண்டும்; அதுவேண்டுமென் னும் ஆசையினால் அறிவிழந்து தம் சுபாவத்திற்குக் கட்டுப் பட்டு இதர தேவதைகளைச் சரணடைந்து, அந்தந்த தேவதை களுக்காக ஏற்பட்ட விரதங்களைச் செய்கிறார்கள்) என்றுகூறி, என்னைச் சரணடைந்த ஞாநியோ அற்பப் பலன்களை விரும்பி இதர தேவதைகளைப் பூஜை செய்யமாட்டா னென்பதை வற்புறுத்தி, ' உதாரா ஸர்வ ஏவைதே ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம் ஆஸ்தித: ஸஹி யுகதாத்மா மாமேவா நுத்தமாம் கதிம்.” (ஞாநி என்னுடைய ஆத்மா என்பதே எனது முடிவு. ஏனெனில் அவன் தன் மனத்தை யடக்கி என் ஒருவனையே கதியாகக் கொண்டிருக்கிறான்) என்று பகவான ஞாநியைப் பற்றி மிகவும் புகழ்ந்துள்ளார். உத்தம பாகவதர்கள் யார்? பகவான் திருவாய் மலர்ந்தருளிய அருள்மொழிகளைப் பற்றி ஆராய்வோமாகில், அவரிடம் பேரன்பு பூண்டு திரிகரண சுத்தியாக நீங்காத நிலையான பக்தி-ஆழ்ந்த பக்தி கொண்டவர்களாகிய ஆழ்வார்களும் ஆசார்யர்களும்,
58
அவர்களிடம் அல்லும் பகலும் இடைவிடாத அடிமை செய்
வதையே தம் பிறவிப் பணியெனக் கருதிப் பணியாற்றும்
அடியார்களுமே உண்மையான பாகவதர்கள் ஆவார்கள்.
அத்தகைய பாகவதர்களையே பகவான் கீதையில் “ஞாநி''
என்று உயர்வாகக் குறிப்பிட்டுள்ளார்.
பகவான் கீதையில் கூறிய கருத்தினையே பரம ஞாநி
யாகிய நம்மாழ்வார்,
"குலந்தாங்கு சாதிகள் நாலிலுங் கீழிழிந்து எத்தனை
நலந்தான இல்லாத சண்டாள சண்டாளர்களாகிலும் (உள்
வலந்தாங்கு சக்கரத்தண்ணல் மணிவண்ணற்கு ஆளென்று
கலந்தார் அடியார்தம் அடியார் எம்மடிகளே.” (3-7-9)
(பிரம்ம க்ஷத்திரிய வைசிய சூத்திர ரென்னும் நான்கு
சாதிகளிலும் கீழானவர்களாய், சிறிதளவும் நன்மையே இல்
லாத சண்டாள சண்டாளர்களாக இருந்தாலும், வலது
கையில் சக்கரத்தைத் தாங்கிய மணிவண்ணனது பக்தர்க
ளென்று கலந்த அடியார்களின் அடியார்களுடைய அடி
யார்கள் அடியேன் வணங்கும் தெய்வங்களே) என்று பாகவ
தர்களைப் புகழ்ந்து பாடியதோடன்றி,
• அடியார்ந்த வையமுண்டு ஆலிலையன்ன வசஞ்செய்யும்
படியாதுமில் குழவிப்படி எந்தை பிரான் தனக்கு
அடியார் அடியார் தம்மடியார் அடியார்தமக்கு
அடியார் அடியார் தம்மடியார் அடியோங்களே” (3-7-10)
என்று அடியார்க்கு அடியார்களாகிய பாகவதர்களுடைய
பெருமையை மேலும் பற்பலவாறு போற்றிப் பாடியிருக்
கிறார்.
மற்றும் “பயிலுங் சுடரொளி", “திருமாற் கடிமை”
ஆகிய பாசுரங்களிலும் பாகவத சேஷத்வத்தின் பெருமை
யைப் பலவாறு பாடியிருப்பதிலிருந்து பகவான் ஞாநி என்று
புகழ்ந்துரைக்கும் பாகவதாகளுடைய பெருமை எத்துணைச்
59 சிறப்பு வாய்ந்ததென்பது தெள்ளிதில் விளங்குகின்ற தல்லவா! உப போற்றற்குரிய பாகவதன் சேவை சேதனனைப் பகவானிடம் காட்டிக் கொடுத்து பகவத் சம்பந்தமுள்ள பாகவதனாக உஜ்ஜீவிக்கச் செய்யும் ஆசார் யனுடைய உபகாரம் ஏற்றமுள்ளதேயாயினும், அதைவிட சேதனனை ஆசார்யனிடம் சேர்த்துவைத்து, அவனை பகவத் சம்பந்தமுள்ள பாகவதனாக ஆக்கும் பொருட்டு பாகவதன் செய்யும் உபகாரம் பெரிதும் போற்றற்குரியதாகும். இவ்வகையில் சேதனனை பகவானிடம் காட்டிக் கொடுத்து ஆசார்யன் செய்யும் உபகாரத்தைவிட சேதனனை ஆசார்யனிடம் சேர்த்து வைத்து பாகவதன் செய்யும் உப காரமே பகவானால் பலகாலும் பாராட்டத் தக்கதாக விளங்குகின்றதென்பது இங்கு குறிப்பிடத் தக்கதாகும். எனவே, பாகவதன் சேதனனுக்காக செய்யும் காரமே ஆசார்ய சம்பந்தமும் பகவத் கைங்கர்யமும் அடை வதற்குரிய தகுதியைப் பெறுகிறதென்பது உண்மையாகும் அல்லவா? ஏற்றம் மிக்க சத்ருக்ந ஆழ்வாரின் தொண்டு பகவதாராதனையை விட பாகவத ஆராதனையின் ஏற்றத் தினைக் கூறும் சம்பவங்கள் நம் இதிகாச புராணங்களில் பல விடங்களில் காணலாம். பிதுர்வாக்கிய பரிபாலனத்தின் பொருட்டு சக்ரவர்த்தித் திருக்குமாரன் ஸ்ரீராமபிரான் சீதா லக்ஷ்மணர்களுடன் வனவாசஞ் செய்யக் கானகம் சென்று சித்திரகூடத்தில் தங்கியிருந்தார். அதைக் கேட்டு அளவிலா துக்கமடைந்த பரதன் சித்திரகூடம் சென்று இராமனை அயோத்திக்கு வந்து அரசை ஏற்குமாறு பன் முறை வற்புறுத்தியும் இசையாமையால், முடிவில் இராம டைய பாதுகைகளைச் சிரமேல் தாங்கிக் கொண்டு அயோத்தியை யடைந்து நந்தி கிராமத்தில் தங்கி பாதுகை 60 . களைச் சிம்மாசனத்தின் மேல் வைத்து பூஜித்து காரியங்களைக் கவனித்து வந்தார். அச்சமயம் ஆராத் துயரங் கொண்டிருந்த பரதனுக்கு இடைவிடாது அடிமை செய்வதையே கடமையாகக் கொண்ட சத்ருக் நனுடைய பாகவதத தொண்டினைப் பல வாறாக நம் ஆசார்யர்கள் சிலாகித்துப் போற்றியிருப்பது பாகவத ஆராதனைக்கு ஓர் ஏற்றமாகும் பாகவத ஆராதனையின் பலன் மற்றும் பகவானிடம் நீங்காத பக்தி கொண்டிருந்த ப்ரஹ்லாதன், நாரதர், பராசரர் முதலான புனிதர்களாகிய பாகவதர்களின பெருமையை, "ப்ரஹ்லாத நாரத பராசர புண்டரீக வ்யாஸ அம்பரீஷ சுக சௌநக பீஷ்ம தெளம்யாந் ருக்மாங்கத அர்ஜுந வசிஷ்ட விபீஷணாதீந் புண்யாநி இமாந் பரம பாகவதாந் ஸ்மராமி" என்று விசேஷமாகப் பாராட்டப்படுகிறது பாகவத ஆராதனையின் சிறப்பினைக் குறித்து ஸ்ரீமண வாள மாமுநிகள் ஸ்ரீவசநபூஷண வியாக்கியானத்தில் ஓரிடத்தில் பின்வருமாறு திருவாய்மலர்ந்தருளி யிருப்பது கவனிக்கத்தக்கதாகும். "சம்சார வாழ்வில் ஈடுபட்டு விசேஷமான கைங்கரியம் எதுவும் செய்யாத ஒரு பெண் மரணமடைந்தாள். அவளை யமதூதர்கள் பற்பலவாறு இம்சைகள் செய்து இழுத்துக் கொண்டு போவதையும், யம தூதர்களின் இம்சையைப் பொறுக்கமாட்டாமல் அப்பெண் துடிப்பதையும் மாதவி என்னும் விஷ்ணு பக்தை தன் தவ பலத்தால் கண்டு கலங்கி அவளிடம் கருணை கொண்டாள். தான் அதுவரை செய்த தவத்தின் பலனில் ஒரு நாள் தவப்பலனை அவளுக்கு அளித்தாள்.
61 யம தூதர்களின் சித்திரவதைக்கு ஆளாகி அவதிப் பட்டுக் கொண்டிருந்த அப்பெண் அக்கணமே யமபாதை நீங்கியவளாய் மகிழ்சசி யடைந்தாள். அதைக் கண்ட யம தூதர்கள் வியப்புற்று யமதர்மனிடம் விவரத்தைத் தெரிவித் தனர். அதற்குக் காரணமென்ன வென்பதை யமதர்மனும் சிந்தித்துத் தெளிந்தான். "அவள் ஒருநாள் இரவு தன் வீட்டை யடைந்த ஓர் விஷ்ணு பக்தன தங்குவதற்கு இடமளித்து உபசரித்து ஆதரித்தாள். அப்பெண அப்பாகவதனை ஆதரித்ததன் பல னாகவே மாதவியின் ஒரு நாள தவப்பலனை அடையப் பெற்று யம பாதையிலிருந்து மீளமுடிந்தது என்னும் விஷயத்தைத் தன் தூதர்களுக்குத் தெரிவித்துப் பாகவத ஆராதனையின் சிறப்பினைப் பலவாறாகப் புகழ்ந்து கூறினான்." பகவத் பாகவத ஆராதனைகளே விமோசனத்திற்கு வழியாகும் எனவே கலி இருள் சூழ்ந்து கணக்கில் அடங்காத துன்பங் களுக்கு ஆளாகியுள்ள சமசாரிகளுக்குப் பகவத் ஆராதனையே யன்றி, பாகவத ஆராதனையும் அத்தியாவசியமாகுமென்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகும். வறுத்தெடுக்கும் வேதனை நிறைந்த கலியின் கொடுமை சொல்லில் அடங்காது. பாஷண்டவாதிகள் (வேதத்திற்கும் தர்மசாஸ்திரங்களுக்கும் மாறுபட்ட கருத்துடையவர்கள்) எங்கும் பெருகி, தெய்வ வழிபாட்டிற்கும் ஆன்மீக நெறி களுக்கும் எதிரிடையான போக்கு அதிகரித்து, 'அவனன்றி ஓர் அணுவும் அசையாது' என்னும் ஆன்றோர் வாக்கினையும் மறந்து, ''எல்லாம் இறைவன் செயல்' என்னும் எண்ண மின்றி, தேகமே ஆத்மாவாகக் கருதும் "யானே, என்னுடை யதே" என்னும் அகங்கார மமகார உணர்வுகள் மேலோங்கி, உயர்ந்த ஜாதி - தாழ்ந்த ஜாதி என்ற ஜாதிப்பித்தும், பணக் காரன் - ஏழை, படித்தவன் - படிக்காதவன் என்ற விபரீதமான வித்தியாசங்களும் தோன்றி குழப்பமான சூழ்நிலைமை 62 ஏற்பட்டிருக்கும் தற்காலம், சம்சாரம் என்பது ஒரு விஷ விருக்ஷமாய் இருப்பினும், பகவத் ஆராதனையும் பாகவத ஆராதனையுமே விமோசனத்திற்குரிய வழியாகுமென்பது முற்றிலும் உண்மையாகும். நாட்டின் நெருக்கடிக்குக் காரணமென்ன? கடந்த 50 வருட காலமாக நாடெங்கும் சினிமாவும் ரேடியோவும் ஏராளமாகப் பெருகியதாலும், காம உணர் வினைத் தூண்டும் கதைகளும் கட்டுரைகளும் சரித்திர நாவல் களும் பொழுதுபோக்கு என்னும் பெயரால் கணக்கில் அடங்காதவை வெளியாகியதாலும் என்ன பயன்? நாட்டின் முன்னேற்றத்திற்காவது மக்களின் அறிவு வளர்ச்சிக்காவது அதனால் ஏதேனும் பயனுண்டா? இல்லை யென்பதே உண்மை யாகும. மக்களிடையே மேலும் அஞ்ஞான இருள் சூழ்ந்து ஆன்மீக உணர்வுகள் படிப்படியாகக் குறைந்து பகவதாரா தனையும் பாகவதாராதனையும் நலிந்து காலமழை பொய்த்து நாடெங்கும் பெரியதொரு நெருக்கடி ஏற்பட்டு அதனால் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் நஷ்டமேற்பட்டு மக்கள் சொல்லொணாத் துயரங்களுக்கு ஆளாகியிருப்பது இன்று கண்கூடாகும். இந்நிலைன மயில் T. V. க்களும் வீடியோ கேஸட்டுகளும் காம உணர்வைத் தூண்டும் சித்திரங்களும் வீடுகள் தோறும் விஷவிருக்ஷம் போல் வளர்ந்து, இன்று வீடுகளும் கல்விச்சாலை களும் தேவாலயங்களும் கூட உல்லாசம், கேளிக்கைக்குரிய இடங்களாக மாறி, மக்களிடையே இருந்த ஓரளவு ஆன்மீக ஒழுக்கமும் நல்லெண்ணமும் குறையத் தலைப்பட்டுள்ளது துரதிர்ஷ்டவசமாகும் அறிஞர் பெருமக்களின் கடமை என்ன? அதுமட்டுமின்றி அறிவாளிகளாகிய நூலாசிரியர்கள் தங்கள் திறமையைக் கொண்டு சமுதாய வளர்ச்சிக்கு அடிப் படையாகவுள்ள பகவத் சம்பந்தமான ஆன்மீக நூல்களை 63 . எளிய நடையில் எழுதி வெளியிட்டு மக்களை அறிவாளி களாகவும் ஆன்மீக வாதிகளாகவும் அமைதியான வாழ்க்கை நடத்துபவர்களாகவும் செய்யும் பணியை மறந்து, இளந் தலைமுறையினரை இம்மைக்கும் மறுமைக்கும் பயனின்றி மீளா நரகத்தில் தள்ளக் கூடியதும் சமுதாயத்திற்குச் சிறிதளவும் பயன்படாததுமான கற்பனைக் கதைகளையும் நாவல் களையும் புதுமை என்னும் பெயரால் எழுதி வயிறு வளர்க்கப் பொருள் திரட்ட எண்ணுவது பாவம் நிறைந்த காரியமாகும். இத்தகைய சூழ்நிலையில் அரசியல் கட்சிகளின் பிர சாரமும் அரசியல் வாதிகளின் ஆதிக்கமும் நா டெங்கும் பெருகி, சுய பலமும் செல்வாக்கும் ஆடம்பரமும் படாடோ பமும் அதிகரித்து, அதன் பயனாகப் பாடப் புத்தகங்களில் தனிமனிதனைப் புகழ்பாடும் போக்கும், பகிரங்கமான இடங் களில் தனிமனிதனுக்குச் சிலைகள் அமைக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டு, அன்பும் அறனும் குன்றி, ஆன்மீக உணர்வுக்கு எதிரிடையான சூழ்நிலை நாடெங்கும் ஏற்பட்டிருப்பது வருந்துதற்குரியதாகும். இந்நிலைமையில் பெருமைக்குரியதும் மேல் நாட்டு அறிஞர்களால் போற்றத்தக்கதுமான நம் புராதனக் கலா சாரங்களும் பழக்க வழக்கங்களும் அறவே மறந்து, நம் நாகரிகத்திற்குப் பெருந்தீங்கு இழைக்கக்கூடிய மேல் நாட்டுக் கலாசாரங்களும் பழக்க வழக்கங்களும் நம் மக்களிடையே விஷம் போல் பரவி, சமுதாயம் சீர்கேடு அடைவதைத் தடுத்து நிறுத்த வேண்டியது நல்லெண்ணங் கொண்ட அறிஞர்கள் கடமையாகும். இன்று இந்திய நாட்டின் பழம் பெரும் கலாசாரங்களை யும் ஆன்மீக இலக்கியங்களையும் இதிகாசப் புராணங்களின் சிறப்பினையும் அறிந்துணர்ந்த ஆயிரக்கணக்கான மேல் நாட்டு அறிஞர்களும் சாதாரண மக்களும் கூட தம் வாழ்க் கையில் வெறுப்புக் கொண்டவர்களாய் நம் நாட்டு ஆன்மீக 641 உணர்வுகளில் ஆர்வங் கொண்டு உஜ்ஜீவிக்கும் வழியெனக் கருதிப் பின்பற்றுகிறார்கள் ஆயினும வயிற்றுப் பிழைப்பிற காக ஆங்கிலக்கல வியில் பட்டம பெற்ற ஒருசிலர் நம் நாட்டு ஆன்மீக இலக்கியங்களின் பெருமையையும பக்திப் பரவச மூட்டும் நூல்களின் சிறப்பினையும் அறிந்துணராது அவற்றை "பழமை'' யென்று வெறுப்பதும், மேல் நாட்டு இலக்கியங் களை “புதுமை” யென்று போற்றுவதும் அறியாமையும் சிறு பிள்ளைத்தனமுமாகும். மகாத்மா காந்தியின் மாபெரும் சேவை மகாத்மா காந்தி சுமார் 6) ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டின விடுதலைக்காக அஸ்திவார மிட்டபோது அன்பும் அறனும் ஆன்மீகமும் ஆடம்பரமினமையும் அடிப்படையாகக் கொண்ட சுயநலமற்ற சாத்வீக சத்யாக்கிரக இயக்கத்தின் மூலம் கோடிக்கணக்கான மககளை ஒன்று திரட்டிப் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துச் சுதந்திரம் பெற்றார். சுதந்திரப் போராட்டம் நடைபெற்ற காலத்தில் தேசமெங் கும் இராமநாமமே தாரக மந்திரமாகக் கொண்டு ஆன்மீக உணர்வை மக்களிடையே பரப்பி, அன்பும் அறனும் பண்பும் உடையவர்களாக இந்து, முஸ்லீம், கிறிஸ்துவ மக்களை ஒன்று திரட்டி “உலகம் போற்றும் உத்தமர் மகாத்மா காந்தி” யெனப் புகழ் பெற்றார் அவர் தனக்காகவோ, தன் சந்ததியார்களுக்காகவோ யாதொரு சொத்தையோ பதவியையோ செல்வாக்கையோ விரும்பியதில்லை; ஏற்படுத்திக் கொண்டதுமில்லை. பாரத நாட்டையே பாரத நாட்டு மக்களையே தன் சொத்தாகக் கருதினார். தன வாழ்நாளிலோ பிறகோ தனக்கு எந்தவித மான சிலைகளோ ஞாபகார்த்தச் சின்னங்களோ ஏற்படுத்தக கூடாதென அறிவித்தார். ஆயினும், இன்று அவர் மறைந் தாலும் அவர் திருநாமமும் லக்ஷியமும் அல்லும் பகலும் ஒளி மயமாய் அனைவர் உள்ளங்களிலும் நிலைத்து நாடெங்கும் உலகம் பூராவும் போற்றப்படுவது கண்கூடாகும்.
65 அன்று காந்தியடிகளைப் பின்பற்றித் தம் உயர்ந்த பட்டங்களையும் அரசாங்கப் பதவிகளையும் இராஜபோக வாழ்வினையும் துறந்து சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்ட பெரும்பாலான தேசீயவாதிகள் பலன் கருதாது அவர் காட்டிய பாதையைப் பின்பற்றிச் சுயநலமற்றவர் களாகவும் தேசத் தொண்டர்களாகவும் தியாகம் செய்தவர் கள், இன்று அரசாங்கப் பதவியை ஏற்றுக்கொண்ட பிறகு, தியாக உணர்வு மங்கி, பொது நலங் குனறிச் சேவை மனப் பான்மை நீங்கிச் சுயநலப் பேராசை கொண்டவர்கள் ஆகிய தன் பயன் இன்று நாடெங்கும் மக்களிடையே சேவா மனப் பான்மையும் தியாக உணர்வும் குன்றி, பேராசைப் பூதத் திற்கு ஆளாகிச் சொல லொணாத் துயரம் அடைந்திருப்பது கண்கூடாகும். மகாத்மா காந்தி தனக்குப் பிறகு பண்டித ஜவஹர்லால் நேருவை அரசியல் வாரிசாக நியமித்தாரேயன்றி, தன் உற்றார், உறவினர் எவரையும் நியமிக்கவில்லை யென்பது போற்றற்குரிய அவருடைய பற்றற்ற மனப்பான்மைக்குச் சிறந்த உதாரணமாகும் ஆனால், நேருவோ தனக்குப் பிறகு அரசியல் வாரிசாக யாரையும் நியமிக்காமல் மறைந்தது ஒரு புதிராகும். தற்கால அரசியல் வாதிகளோ அரசாங்க அதிகாரத்தைத் தங்கள் பிழைப்பிற்குரிய சாதனமாகவும், பரம்பரைச்சொத்தாகவும் கருதிச் செயலாற்றுவது வருந்தற் குரிய விஷயமாகும். எதிர்கால இளைஞர்கள் மேற்கூறிய வற்றை ஆழ்ந்து சிந்தனை செய்யவேண்டு மென்பதற்காகவே அரசியல் விஷயத்தை இங்கு குறிப்பிடலானோம். நாட்டின் எழுச்சிக்கு ஆன்மீக உணர்வே மருந்து அன்று காந்தியடிகள் மிருகபலத்தை வெறுத்து ஆன்மீக பலத்தால் தேசமக்களைச் சுயநலமற்றச் சுதந்திர வீரர்களாக ஒன்று திரட்டினார். இனறு நாடெங்கும் மக்களிடையே ஒற்றுமையின்றிச் சுயநலம் பெருகி,பலாத்காரம் மேலோங்கி “நான், எனது” எனனும் அகங்கார மமகாரம் மிகுந்து பல வித நா-5 66 கொடுமைகளுக்கு ஆளாகி அவதியுறுகின்றனர். மக்களி டையே இந்நிலை மாறி நன்னிலை நிலவ மகாத்மாகாந்தி போதித்த ஆன்மீக நெறியே தக்க மருந்தாகும். ஆன்மீக உணர்வினால் தான் “சர்வே ஜநா: சுகிநோ பவந்து” (எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும்) என்னும் உன்னத எண்ணம மக்களிடையே ஏற்பட்டு, நாட்டை எதிர் நோக்கியுள்ள தீவினைகள் யாவும் 'தீயினில் தூசாகி' சுபிக்ஷம் ஏற்பட்டு பாரத நாடு பணடைப் பெருமை பெற்றுச் சிறப் புற்று விளங்க முடியுமேயன்றி, வேறு எத்தகைய திட்டங் களாலும் கதி மோக்ஷமில்லை யென்பது திண்ணமாகும். ஆயிரக்கணக்கான வருடங்களாக பகவான் அவதாரங் கள் பல புரிந்தும், ஆழ்வார்களையும் ஆசார்யர்களையும் மற்றும் பல பாகவதோத்தமர்களையும் தோற்றுவித்தும் காட்டியருளிய அன்புவழி , அறவழி , ஆன்மீக வழியே தேச மக்களின் துயர்களைத் தீர்த்து வறுமை, பசிப் பிணியைப் போக்கியருளும் சீரியவழி என்னும் நோக்கத்துடன் பகவானை சரணடைவோமேயாகில், “தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் முமமாரி” பெய்து நாடும் மக்களும் நலம் பெற்று வாழ்வோமெனபதில் ஐயமில்லை. இளம் பருவமே இறைவனை வழிபடுவதற்குரிய காலம் பகவானுடைய திருநாமங்களைப் பாடி வணங்குவதற்குரிய பருவம் இளம்பருவமேயாகும் இளம்பருவமே கல்விகற்கவும் பகவத் ஞானத்தை யடையவும ஏற்ற காலமாகும். இளம் பருவத்தில் பெற்ற பகவத் ஞானமானது நிலைத்து நின்று நற்குண நற்செயல்களுக் காளாககி, தீய பழக்க வழக்கங் களுக்கு இடம் தராமல வாழ்நாள் முழுவதும் வளமுடைய தாகச் செய்து பேரின்பமாகிய மோக்ஷத்தை யடைவதற்கு வழிகாட்டியாகவும் இருக்கும். அதனால் தேசத்திற்கும சமுதாயத்திற்கும் மிக்க நன்மையுமாகும். அவ்வா றினறி இளம்பருவத்தில் பகவத் சம்பந்தமான .
67 நற்காரியங்களில் ஈடுபடாமல் வயதான பிறகு பங்கு கொள்ளலாமென்று எணணியிருப்போமேயாகில், ஐம்புலன் களின் வசப்பட்டுத் தீயபழக்க வழக்கங்களுக்கும் தீய செயல் களுக்கும் ஆளாகித் தீயோர்களின் பிடியில் அகப்பட்டு வாழ் நாள் வீணாளாகு மென்பதில் ஐயமில்லை. கடந்த 40 வருட காலப் பொது வாழ்வில் ஏற்பட்டுள்ள சீர்கேடே இன்றுள்ள சமுதாயப் பிற்போக்கு நிலைமைக்குக் காரணமாகும். எனவே தீவினைகளிலிருந்து நீங்கி நற்கருமங்கள் புரிந்து நல்வாழ்வு வாழ்வதற்கு ஏற்ற பருவம் இளம் பருவமேயாகும். எனவே, அடைவதற்கரிய ஆதியந்தமற்ற பரம்பொருள் நாராயணனே என்பதை அறிந்துணர்ந்த ஆழ்வார்கள், “நாராயணனே முழுமுதற பெருங்கடவுள" எனறு அவன் திருநாமங்களைப் பாடிப் பரவசமடைந்தார்கள். இக்கலி யுகத்தில் கலிபயம் நீங்கி வாழ்வதற்குப் பெருந் துணையாய் இருப்பது நாராயணன் திருநாமங்களே என்பதை நம்மாழ் வாரும், "பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச்சாபம் நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்றுமிலலை கலியும் கெடும் கண்டுகொண்மின கடலவண்ணன பூதங்கள் மணமேல் மலியப்புகுந்து இசைபாடியாடி உழிதரக்கண்டோம்' (5-2-1) என்று பாடி கலிபயம் நீங்கி யமபய மென்ற கவலையுமின்றி மாநுடகோடிகள் உய்யுமவகை காட்டியுள்ளார். எனவே, ஆழ்வார்கள் அருளிச் செயல்களே கதியென எண்ணிக் கடமையைச் செய்வோமாகில், நமமைப் பற்றிய பாவங்கள் யாவும் நீங்கிப் பரமன் அருள் கிட்டுமென்னும் நோக்கத் துடன் '' நாராயணனைப் பாடிய நம் ஆழ்வார்கள்” என்னும் இந்நூலினை வெளியிடலானோம். இந்நூலின் பிற்பகுதியில் சேர்க்கப்பட்டிருக்கும் கட்டு ரைகள் நூலுக்கு அழகூட்டுவதாக அமைந்துள்ளன.
68 * நாராயணனே பரம்பொருள்” என்னும் கட்டுரை ஸ்ரீமாந் குமாரவாடி உ. வே. ராமாநுஜாசார்யர் அவர்களால் எ எழு தப்பட்டதாகும். இக்கட்டுரையில் சுருதி, ஸ்ம்ருதி, இதிகாச புராணங்களிலிருந்து பற்பல மேற்கோள்களுடன் நாரா பண பரத்வ நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. “நாராயணனே முதற் பெருங்கடவுள்” என்னும் கட்டுரை ஸ்ரீமாந் வித்வாந்-பிரபந்நவித்வாந் R. இராமஸ்வாமி இராமா நுஜதாஸர் அவர்களால் எழுதப்பட்டதாகும். இதில் நாரா பண பரத்வத்தின் சிறப்பும் ஆழ்வார்களின் அருளிச் செய லின் ஏற்றமும் சங்ககால நூல்களில் நாராயணன் பெரு மையை நன்கு போற்றப்பட்டிருப்பதும் விளக்கப்பட்டுள்ளது. “மூவருள் முதல்வன் மூரிநீர்வண்ணன்" என்னும் கட்டு ரையை ஸ்ரீமாந் A. ஸ்ரீராமுலு தேசிகன் எழுதியுள்ளார். இக்கட்டுரையில் முழுமுதற் பெருங் கடவுளாகிய மகா விஷ்ணுவின் சிறப்பினைச் சங்க இலக்கியமாகிய பரிபாடல் களிலிருந்தும், கம்பராமாயணம், ஆழ்வார்கள் அருளிச்செயல் களிலிருந்தும் தக்க மேற்கோள்களுடன் எடுத்துக்காட்டி யுள்ளார். நாராயண நாமத்தின் ஏற்றத்தை உள்ளங்கை நெல்லிக் கனி போல் விளக்கும் இந்நூலுக்கு மெருகூட்டுவதாய் அமைந் துள்ள இம்மூன்று கட்டுரைகளும் மேலும் பல சிறந்த விஷயங் களைக் கொண்டதாய் இருப்பதுடன் வாசகர்களுக்கு அரிய விருந்தாயும் விளங்குகின்றன. ஆத்மஞானம் பெற விரும்பும் அன்பர்கள் படித்துப் பயன்பெறத் தக்க பல விஷயங்களும் அடங்கியுள்ளன. மேற்படி மூன்று கட்டுரை யாளர்கட்கும் அடியேன் பணிவார்ந்த நமஸ்காரங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன், இந்நூலின்கண் கருத்துப் பிழையோ எழுத்துப் பிழையோ ஏற்படாவண்ணம் திருத்தி உதவிய ஸ்ரீமாந் வித்வாந்-இராமஸ்வாமி இராமாநுஜ ஸ்வாமி அவர் களுக்கு அடியேன் நன்றி உரித்தாகுக. இந்நூலுக்குப் பரிந் ஓர்
69
துரையும் கருத்துரையும் வழங்கி மிக்க துணை புரிந்த ப்ரபந்ந
வித்வாந் ஸ்ரீமாந் R. யதிராஜ ராமாநுஜ ஸ்வாமி அவர்
களுக்கும் பணிவார்ந்த நன்றி உரியதாகுக.
ஆழ்வார்கள் அருளிச் செயல்களையும் ஆசார்யர்களின்
அருள் போதனைகளையும் நூல்கள் வாயிலாக வெளியிட்டுத்
தமிழகமெங்கும் ஆன்மீக உணர்வைப் பரப்பி பகவத் பணி
யாற்ற வேண்டு மென்னும் நோக்கத்துடன் இதுகாறும் வெளி
யிட்டுள்ள நூல்களை ஆதரித்த பகவதன்பர்கள் இந்நூலினை
யும் ஆதரித்துச் செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலின்
திருவருள் பெற்று இன்புற்றிருக்கப் பிரார்த்திக்கின்றேன்.
அடியேன் -தாஸாநு தாஸன்
ஸ்ரீலக்ஷ்மீ நாராயண ராமாநுஜ தாஸன்
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஆழ்வார், எம்பெருமானார், ஜீயர் திருவடிகளே சரணம்
நாராயணனைப் பாடிய நம் ஆழ்வார்கள்
ஸ்ரீ மணவாள மாமுநிகள் தனியன்
(அழகிய மணவாளன் அருளிச்செய்தது)
ஸ்ரீசைலேச தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்
யதீந்த்ரப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம்முநிம்.
குரு பரம்பரையின் தனியன்
(ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச்செய்தது )
லக்ஷ்மீநாத ஸமாரம்பாம் நாதயாமுந மத்யமாம்
அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்.
எம்பெருமானார் தனியன்
யோநித்யமச்யுத பதாம்புஜ யுக்மருக்ம
வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாயமேநே
அஸ்மத்குரோர் பகவதோஸ்ய தயைகசிந்தோ:
ஸ்ரீராமாநுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே.
ஸ்ரீ நம்மாழ்வார் தனியன்
(ஸ்ரீ ஆளவந்தார் அருளிச்செய்தது)
மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதிஸ்
ஸர்வம் யதேவ நியமேந மதந்வயா நாம்
ஆத்யஸ்ய ந : குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா.
ஆழ்வார்கள், உடையவர் தனியன்
(ஸ்ரீ பராசர பட்டர் அருளிச்செய்தது)
பூதம் ஸரஸ்ச மஹதாஹ்வய பட்டநாத
ஸ்ரீபக்திஸார குலசேகர யோகிவாஹாந்
பக்தாங்கரிரேணு பரகால யதீந்த்ர மிச்ராந்
ஸ்ரீமத் பராங்குசமுநிம் ப்ரணதோஸ்மி நித்யம்.
71 ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீபொய்கையாழ்வார் திருவாய்மலர்ந்தருளிய 100 பாசுரங்கள் கொண்ட “இயற்பா- முதல திருவந்தாதி"யிலிருந்து திரட்டப்பெற்ற ஸ்ரீமந் நாராயணன் திருநாமம் குறித்துப் பாடிய திவ்விய பாசுரங்கள். அரன் நாரணன் நாமம் ஆனவிடை புள் ஊர்தி உரை நூல் மறை உறையும் கோயில் - வரைநீர் கருமம் அழிப்பு அளிப்பு கையது வேல் நேமி உருவம் எரிகார் மேனி ஒன்று. (5) அயல் நின்ற வல்வினையை அஞ்சினேன் ; அஞ்சி உயநின் திருவடியே சேர்வான்-நயநின்ற நன்மாலை கொண்டு ‘நமோ நாரணா' என்னும் சொன்மாலை கற்றேன தொழுது. (57) நாவாயில் உண்டே 'நமோ நாரணா' என்று ஓவாது உரைக்கும் உரையுண்டே - மூவாத மாக்கதிக்கண் செல்லும் வகையுண்டே என்னொருவர் தீக்கதிக்கட் செல்லும் திறம். (95) ஸ்ரீ பூதத்தாழ்வார் திருவாய்மலர்ந்தருளிய 100 பாசுரங்கள் கொணட “இயற்பா- இரண்டாம் திருவந்தாதி" யிலிருந்து திரட்டப்பெற்ற ஸ்ரீமந் நாராயணன் திருநாமம் குறித்துப் பாடிய திவ்விய பாசுரங்கள். அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை இடுதிரியா-நன்புருகி ஞானச் சுடர் விளக்கேற்றினேன் நாரணற்கு ஞானத்தமிழ் புரிந்த நான். ஞானத்தால் நன்குணர்ந்து நாரணன்றன் நாமங்கள் தானத்தால் மற்றவன் பேர் சாற்றினால்-வானத் தணியமரர் ஆக்குவிக்கும் அஃதன்றே நங்கள் பணியமரர் கோமான் பரிசு, (6 (1 ) (2 ) 72 பழிபாவம் கையகற்றிப் பல்காலும் நின்னை வழிவாழ்வார் வாழ்வராம் மாதோ-வழுவின்றி நாரணன்றன் நாமங்கள் நன்குணர்ந்து நன்கேத்தும் காரணங்கள் தாமுடையார் தாம். (20) இது கண்டாய் நல்நெஞ்சே! இப்பிறவியாவது இதுகண்டா யெல்லாம் நாம் உற்றது - இது கண்டாய் நாரணன் பேரோதி நரகத்தருகணையாக் காரணமும் வல்லையேல் காண். (66) பகற் கண்டேன் நாரணனைக் கண்டேன் கனவில் மிகக் கண்டேன் மீணடவனை மெய்யே-மிகக்கண்டேன் ஊன் திகழும் நேமி ஒளி திகழும் சேவடியான் வான் திகழும் சோதி வடிவு. (81) ஸ்ரீ பேயாழ்வார் திருவாய்மலர்ந்தருளிய 100 பாசுரங்கள் கொண்ட ''இயற்பா - மூன்றாம் திருவந்தாதி"யிலிருந்து திரட்டப்பெற்ற ஸ்ரீமந் நாராயணன் திருநாமம் குறித்துப் பாடிய திவ்விய பாசுரம். நாமம் பல சொல்லி நாராயணா என்று நாமங் கையால் தொழுதும் நன்னெஞ்சே! - வாமருவி மண்ணுலகம் உண்டுமிழ்ந்த வண்டறையும் தண்துழாய்க் கண்ணனையே காண்க நங்கண். (8) ஸ்ரீதிருமழிசையாழ்வார் திருவாய்மலர்ந்தருளிய 96 பாசுரங்கள் கொண்ட ''இயற்பா - நான்முகன் திருவந்தாதி"யிலிருந்து திரட்டப்பெற்ற ஸ்ரீமந் நாராயணன் திருநாமம் குறித்துப் பாடிய திவ்விய பாசுரங்கள். நான்முகனை நாராயணன் படைத்தான் நான் முகனும் தான் முகமாய்ச் சங்கரனைத்தான் படைத்தான்-யான் முகமாய் 731 (1) அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ்பொருளைச் சிந்தாமல் கொண்மின் நீர் தேர்ந்து. இன்றாக நாளையேயாக இனிச்சிறிது நின்றாக நின்னருள் என்பாலதே - நன்றாக நான் உன்னையன்றி யிலேன் கண்டாய் நாரணனே! நீ என்னையன்றி இலை. (7) வீடாக்கும் பெற்றி யறியாது மெய் வருத்திக் கூடாக்கி நின்றுண்டு கொண்டுழல்வீர்!- வீடாக்கும் மெய்ப்பொருள் தான் வேத முதற் பொருள் தான் நற்பொருள் தான் நாராயணன். [விண்ணவற்கு நாராயணன் என்னை யாளி நரகத்துச் சேராமல் காக்கும் திருமால் தன்-பேரான பேசப்பெறாத பிணச்சமயர் பேசக்கேட்டு ஆசைப்பட் டாழ்வார் பலர். (14) மேல் நான் முகன் அரனையிட்ட விடுசாபம் தான் நாரணன் ஒழித்தான் தாரகையுள் - வானோர் பெருமானை யேத்தாத பேய்காள்! பிறக்கும் கருமாயம் பேசில் கதை. (31) போதான இட்டிறைஞ்சி ஏத்துமினோ பொன்மகரக் காதானை யாதிப் பெருமானை - நாதானை நல்லானை நாரணனை நம் ஏழ்பிறப்பறுக்கும் சொல்லானைச் சொல்லுவதே சூது. (64) வலமாக மாட்டாமை தானாக வைகல் குலமாகக் குற்றம் தானாக-நலமாக நாரணனை நம்பதியை ஞானப்பெருமானை சீரணனை யேத்தும் திறம். (67) இல்லறம் இல்லேல் துறவறம் இல்லென்னும் சொல்லறம் அல்லனவும் சொல்லல்ல-நல்லறம் ஆவனவும் நால்வேத மாத்தவமும் நாரணனே யாவது ஈது அன்றென்பார் ஆர்? (72) 74 இனியறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம் இனியறிந்தேன் எம்பெருமான்! உன்னை-இனிய றிந்தேன் காரணன் நீ கற்றவை நீ கற்பவைநீ நற்கிரிசை நாரணன் நீ நன் குணர்ந்தேன் நான். (96) ஸ்ரீ திருமழிசையாழ்வார் திருவாய் மலர்ந்தருளிய 120 பாசுரங்கள் கொண்ட “திருச்சந்த விருத்த”த்தி லிருந்து திரட்டப்பெற்ற ஸ்ரீமந் நாராயணன் நாமம் குறித்துப் பாடப்பெற்ற திவ்விய பாசுரங்கள். எட்டு மெட்டும் எட்டுமாய் ஓரேழும் ஏழும் ஏழுமாய் எட்டு மூன்று மொன்றுமாகி நின்ற ஆதிதேவனை எட்டினாய பேதமோடு இறைஞ்சி நின்று அவன் பெயர் எட்டெழுத்தும் ஓதுவார்கள் வல்லர் வானமாளவே. (77) சோர்விலாத காதலால் தொடக்கறா மனத்தராய் நீரரா வணைக்கிடந்த நின்மலன் நலங்கழல் ஆர்வமோடு இறைஞ்சி நின்று அவன் பெயர் எட்டெழுத்தும் வாரமாக ஓதுவார்கள் வல்லர் வான மாளவே. (78) ஸ்ரீ நம்மாழ்வார் திருவாய்மலர்ந்தருளிய “திருவாய்மொழி” யிலிருந்து திரட்டப்பெற்ற ஸ்ரீமந் நாராயணன் திருநாமம் குறித்துப் பாடப்பெற்ற திவ்விய பாசுரங்கள். எண்பெருக்கு அந்நலத்து ஒண்பொருள் ஈறில வண்புகழ் நாரணன் திண்கழல் சேரே. (1-2-10) அமைவுடை யறநெறி முழுவதும் உயர்வுற உயர்ந்து அமைவுடை முதல் கெடல் ஒடிவிடை யறநில மதுவாம் அமைவுடை யமரரும் யாவையும் யாவரும் தானாம் அமைவுடை நாரணன் மாயையை யறிபவர் யாரே? (1-3-3) ஒன்றெனப் பலவென அறிவரும் வடிவினுள் நின்ற நன்றெழில் நாரணன் நான்முகன் அரனென்னு மிவரை 75 ஒன்ற நும்மனத்து வைத்துள்ளி நும் இருபசை யறுத்து நன்றென நலஞ் செய்வது அவனிடை நம்முடைநாளே.(1-3-7) நல்கித்தான் காத்தளிக்கும் பொழிலேழும் வினையேற்கே நல்கத்தானாகாதோ? நாரணனைக் கண்டக்கால் மல்குநீர்ப் புனற்படப்பை இரைதேர் வண்சிறு குருகே! மல்கு நீர்க கண்ணேற்கு ஓர் வாசகங் கொண்டருளாயே. (1-4-5) நாடாத மலர் மாடி நாடோறும் நாரணன்றன் வாடாத மலரடிக்கீழ் வைக்கவே வகுக்கின்று வீடாடி வீற்றிருத்தல் வினையற்ற தென் செய்வதோ? ஊடாடு பனிவாடாய்! உரைத்தீராய் எனதுடலே . (1-4-9) செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும் மல்கும் கண்பனி நாடுவன் மாயமே அல்லும் நன்பகலும் இடைவீடின்றி நல்கி என்னைவிடான் நம்பி நம்பியே. (1-10-8) தோற்றோம் மடநெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு எம் ஆற்றாமை சொல்லி அழுவோமை நீநடுவே வேற்றோர் வகையில் கொடிதாய் எனையூழி மாற்றாண்மை நிற்றியோ? வாழி கனையிருளே! (2-1-7) கேசவன் தமர் கீழ்மேல் எமரே ழெழு பிறப்பும் மாசதிர் இது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றனவா! ஈசன் என் கருமாணிக்கம் என செங்கோலக்கண் விண்ணோர் நாயகன் எம்பிரான் எம்மான் நாராயணனாலே . (2-7-1) நாரணன் முழுவேழுலகுக்கும் நாதன் வேதமயன் காரணம் கிரிசைகருமம் இவை முதல்வன் எந்தை சீரணங்கமரர் பிறர்பலரும் தொழுதேத்த நின்று வாரணத்தை மருப்பொசித்த பிரான் என்மாதவனே! (2-7-2) உடையார்ந்த ஆடையன் கண்டிகையன் உடைநாணினன் புடையார் பொனனூலினன் பொன்முடியன் மற்றும் பல்கலன் 76 நடையாவுடைத் திருநாரணன் தொண்டர் தொண்டர் கண்டீர் இடையார் பிறப்பிடைதோ றெமக்கு எம்பெருமக்களே. ஒருநாயகமாய் ஓட உலகுடன் ஆண்டவர் கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர் பெருநாடுகாண இம்மையிலே பிச்சைதாம் கொள்வர் திருநாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்துய்ம்மினோ. (4-1-1) ஏகமூர்த்தி இருமூர்த்தி மூன்று மூர்த்தி பலமூர்த்தி ஆகி ஐந்து பூதமாய் இரண்டுசுடராய் அருவாகி நாகம் ஏறி நடுக்கடலுள் துயின்ற நாராயணனே! உன் ஆகம் முற்றும் அகத்தடக்கி ஆவியல்லல் மாய்த்ததே. (4-3-3) கால சக்கரத்தொடு வெண்சங்கம் கையேந்தினாய் ஞாலமுற்றும் உண்டுமிழ்ந்த நாராயணனே! என்றென்று ஓலமிட்டு நானழைத்தால் ஒன்றும் வாராயாகிலும் கோலமாம் என் சென்னிக்கு உன்கமலமன்ன குரைகழலே. பெய்வளைக் கைகளைக்கூப்பிப் பிரான் கிடக்கும் கடல் என்னும் செய்யதோர் ஞாயிற்றைக்காட்டிச் சிரீதரன்மூர்த்தி யீதென்னும் நையும் கண்ணீர் மல்கநினறு நாரணன் என்னுமன்னே என் தெய்வ உருவில் சிறுமான செய்கின்ற தொன்றறியேனே. ஒன்றிய திங்களைக் காட்டி ஒளிமணிவண்ணனே என்னும் நின்ற குனறத்தினை நோக்கி நெடுமாலே! வா என்று கூவும் நன்றுபெய்யும் மழைகாணில் நாரணன் வந்தான் என்றாலும் என்றின மையல்கள் செய்தார் என்னுடைக் கோமளத்தையே. (4-4-4) ஏறினபித்தினோடு எல்லா உலகும் கண்ணன்படைப்பென்னும் நீறுசெவ்வே யிடக்காணில் நெடுமால் அடியார் என்றோடும் நாறுதுழாய்மலர் காணில் நாரணன்கண்ணி யீதென்னும் தேறியும் தேறாதும் மாயோன் திறத்தனளே யித்திருவே. சீலமில்லாச் சிறியேனேலும் செய்வினையோ பெரிதால் ஞாலமுண்டாய் ஞானமூர்த்தீ நாராயணா! என்றென்று 17 காலந்தோறும் யானிருந்து கைதலை பூசலிட்டால் கோலமேனி காணவாராய் கூவியும் கொள்ளாயே. (4-7-1) திருவடியை நாரணனைக் கேசவனைப் பரஞ்சுடரை திருவடி சேர்வது கருதிச் செழுங்குருகூர்ச் சடகோபன் திருவடிமேல் உரைத்ததமிழ் ஆயிரத்துள் இப்பத்தும் திருவடியே அடைவிக்கும் திருவடி சேர்ந்து ஒன்றுமினே புக்கடிமையினால் தன்னைக்கண்ட மார்க்கண்டேயனவனை நக்க பிரானும் அன்றுய்யக்கொண்டது நாராயணனருளே கொக்கலர் தடந்தாழை வேலித திருக்குருகூரதனுள் மிக்க ஆதிப்பிரான் நிற்க மற்றைத தெய்வம் விளம்புதிரே. தெய்வநாயகன் நாரணன திரிவிக்கிரமன் அடியிணைமிசை கொய்கொள் பூம்பொழில்சூழ் குருகூர்ச் சடகோபன் செய்த ஆயிரத்துள் இவை தண்சிரீவர மங்கைமேய வைகல் பாடவல்லாா வானோர்க் காராவமுதே. [பத்துடன் தொல்லருள் நல்வினையால் சொல்லக் கூடுங்கொல் தோழிமீர்காள்! தொல்லருள் மண்ணும் விண்ணும் தொழநின்ற திருநகரம் நல்லருள் ஆயிரவர் நலனேந்தும் திருவல்லவாழ் நல்லருள் நம்பெருமான் நாராயணன் நாமங்களே (5-9-10) நாட்டில் பிறந்தவர் நாரணற் காளன்றி யாவரோ? நாட்டில் பிறந்து படாதனபட்டு மனிசர்க்கா நாட்டை நலியும் அரக்கரை நாடித்தடிந்திட்டு நாட்டை யளிததுய்யச் செய்து நடந்தமை கேட்டுமே!(7-5-2) மாலரி கேசவன் நாரணன் சீமாதவன் கோவிந்தன் வைகுந்தனென்று ஓலமிட என்னைப்பண்ணி விட்டிட்டொன்றும் உருவும்சுவடும் காட்டான் ஏலமலர்க்குழல் அன்னை மீர்காள்! என்னுடைத் தோழியர்காள்! என் செய்கேன்? காலம்பல சென்றும் காண்பதாணை உங்களோடு எங்களிடையில்லையே (8-2-7) 181 அற்புதன் நாராயணன் அரிவாமனன் நிற்பது மேவிநிற்ப தென்நெஞ்சகம் நற்புகழ் வேதியர் நான்மறை நின்றதிர் கற்பகச் சோலைத் திருக்கடித்தானமே. (8-6-10) ஓராயிரமாய் உலகேழ் அளிக்கும் பேராயிரம் கொண்டதோர் பீடுடையன் காராயினகாள நன்மேனியினன் நாராயணன் நங்கள் பிரான் அவனே. (9-3-1) எவை கொல் அணுகப்பெறும் நாள்? என்றெப்போதும் கவையில் மனமின்றிக் கண்ணீர்கள் கலுழ்வன் நவையில் திருநாரணன்சேர் திருநாவாய் அவையுள் புகலாவதோர் நாள் அறியேனே. (9-8-4) கோவாகிய மாவலியை நிலங்கொண்டாய்! தேவாசுரம் செற்றவனே! திருமாலே! நாவாய் உறைகின்ற என நாரண நம்பி! ஆவா அடியான இவனென்று அருளாயே. (9-8-7) கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர்! எண்ணும் திரு நாமம் திணணம் நாரணமே (10-5-1) நாரணன் எம்மான் பாரணங் காளன் வாரணம் தொலைத்த காரணன் தானே. (10-5-2) வாட்டாற்றான் அடிவணங்கி மாஞாலப் பிறப்பறுப்பான் கேட்டாயே மடநெஞ்சே! கேசவன் எம்பெருமானை பாட்டாய பலபாடிப் பழவினைசள் பற்றறுத்து நாட்டாரோடு இயல்வொழிந்து நாரணனை நண்ணினமே. நண்ணினம் நாராயணனை நாமங்கள் பலசொல்லி மண்ணுலகில வளம்மிக்க வாட்டாற்றான் வந்தின்று விண்ணுலகம தருவானாய் விரைகின்றான் விதிவகையே எண்ணினவாறாக இக்கருமங்கள் என் நெஞசே! (10.6-3) சூழ்விசும் பணிமுகில் தூரியம் முழக்கின ஆழ்கடல் அலைதிரை கையெடுத்தாடின 19 ஏழ்பொழிலும் வளம் ஏந்திய என்னப்பன் வாழ்புகழ் நாரணன தமரைக் கண்டுகந்தே. (10-9-1) நாரணன் தமரைக் கண்டுகந்து நனனீர் முகில் பூரண பொற்குடம் பூரித்த துயர்விண்ணில் நீரணிகடல்கள் நின்றார்த்தன நெடுவரைத் தோரணம் நிரைத்தெங்கும் தொழுதனர் உலகே. ஸ்ரீ குலசேகர ஆழ்வார் திருவாய்மலர்ந்தருளிய 105 பாசு ரங்கள் கொண்ட பெருமாள் திருமொழி" யிலிருந்து திரட்டப் பெற்ற ஸ்ரீமந் நாராயணன் திருநாமம் குறித்துப் பாடிய திவ்விய பாசுரங்கள். திடர்விளங்கு கரைப்பொன்னி நடுவுபாட்டுத் திருவரங்கத் தரவணையில பளளிகொள்ளும் கடல்விளங்கு கருமேனி யம்மான் தன்னைக் கண்ணாரக் கண்டுகக்கும் காதல் தன்னால் குடைவிளங்கு விறல் தானைக் கொற்றவொள்வாள் கூடலர்கோன் கொடைக்குலசேகரன் சொற்செய்த நடைவிளங்கு தமிழ்மாலை பத்தும் வல்லார் நலந்திகழ் நாரணனடிக்கீழ் நண்ணுவாரே. (1-11) தோய்த்த தண்தயிர் வெண்ணெய் பாலுடன் உண்டலும் உடன்றாய்ச்சி கண்டு ஆர்த்ததோளுடை எம்பிரானென் அரங்கனுக் கடியார்களாய் நாத்தழும்பெழ நாரணாவென்று அழைதது மெய்தழும்பத் தொழுது ஏத்தி இன்புறும் தெ தொண்டர் சேவடி ஏத்திவாழ்தது மென்நெஞ்சமே. (2-4) மாரனார் வரிவெஞ்சிலைக காட்செய்யும் பாரினாரொடும் கூடுவதில்லை யான் ஆரமார்வன் அரங்கன் அனந்தன் நல் நாரணன் நரகாந்தகன் பித்தனே. (3-3)
80
மல்லைமாநகர்க் கிறையவன் தன்னை
வான் செலுத்தி வந்தீங்கணை மாயத்து
எல்லையில் பிள்ளை செய்வன காணத்
தெய்வத்தேவகி புலம்பிய புலம்பல்
கொல்லி காவலன மாலடிமுடிமேல்
கோலமாம் குலசேகரன் சொன்ன
நல்லிசைத் தமிழ்மாலை வல்லவர்கள்
நண்ணுவார் ஒல்லை நாரணனுலகே. (7-11)
திலலை நகர்த் திருச்சித்ர கூடந்தன்னுள்
திறல் விளங்கு மாருதியோ டமர்ந்தான் தன்னை
எல்லையில் சீர்த் தயரதன் தன மகனாய்த் தோன்றிற்
றது முதலாத் தன்னுலகம புக்க தீறா
கொல்லியலும் படைத்தானைக் கொற்றவொள்வாள்
கோழியர்கோன் குடைக்குலசேகரன் சொற்செய்த
நல்லியலின் தமிழ்மாலை பத்தும்வல்லார்
நலந்திகழ் நாரணனடிக்கீழ் நணணுவாரே. (10-11)
ஸ்ரீ பெரியாழ்வார் திருவாய்மலர்ந்தருளிய 473 பாசுரங்கள்
கொண்ட “பெரியாழ்வார் திருமொழி”யிலிருந்து திரட்டப்
பெற்ற ஸ்ரீமந் நாராயணன் திருநாமம் குறித்துப் பாடிய
திவ்விய பாசுரங்கள்.
ஏடுநிலத்தில் இடுவதன் முன்னம்வந்து எங்கள் குழாம்புகுந்து
கூடுமனமுடையீர்கள்! வரமபொழி வந்து ஒல்லைக்கூடுமினோ
நாடும் நகரமும் நன்கறிய நமோ நாராயணாய வென்று
பாடும் மனமுடைப் பத்தருள்ளீர்! வந்து பல்லாண்டு
கூறுமினே. (1-1-4)
ல்வழக் கொன்றுமில்லா அணிகோட்டியர்கோன்
அபிமானதுங்கன்
செல்வனைப் போலத் திருமாலே! நானும் உனக்குப்
பழவடியேன்
81 நல்வகையால் நமோ நாராயணா வென்று நாமம் பலபரவிப் பல்வகையாலும் பவித்திரனே! உன்னைப் பல்லாண்டு கூறுவனே. (1-1-11) பல்லாண்டென்று பவித்திரனைப் பரமேட்டியைச் சார்ங்க மென்னும் வில்லாண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டுசித்தன் விரும்பிய சொல் நல்லாண்டென்று நவின்றுரைப்பார் நமோ நாராயணாய வென்று பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருந்தேத்துவர் பலலாணடே. (1-1-12) செந்நெலார் வயல்சூழ் திருக்கோட்டியூர் மன்து நாரணன் நம்பி பிறந்தமை மின்னு நூல் விட்டுசித்தன விரித்த இப் பன்னு பாடல்வல்லார்க் கில்லைபாவமே. (1-2-10) கச்சொடு பொற்சுரிகை காம்பு கனகவளை உச்சிமணிச்சுட்டி ஒண்தாள் நிரைப்பொற்பூ அச்சுதனுக்கென்று அவனியாள் போத்தந்தாள் நச்சுமுலையுண்டாய்! தாலேலோ! நாராயணா அழேல் தாலேலோ! (1-4-8) நச்சுவார் முன்னிற்கும் நாராயணன் தன்னை அச்சோ வருகவென் முய்ச்சியுரைத்தன மச்சணிமாடப் புதுவைககோன பட்டன் சொல் நிச்சலும் பாடுவார் நீள் வீசும் பாள்வரே. (1-9- 1) வண்ணப்பவள மருங்கினிற் சாத்தி மலர்ப்பாதக் கிண்கிணி யார்ப்ப நண்ணித் தொழுமவர் சிந்தைபிரியாத நாராயணா! இங்கேவாராய் எண்ணற்கரிய பிரானே! திரியை எரியாமே காதுக்கிடுவன் 6 நா- (2-3-2) (2-4-1) கண்ணுக்கு நன்றும் அழகும் உடைய கனகக் கடிப்பும் இவையா. வெண்ணெய் அளைந்த குணுங்கும் விளையாடு புழுதியும் கொண்டு திண்ணென இவ்விரா வுன்னைத் தேய்த்துக்கிடக்க நான் ஒட்டேன் எண்ணெய் புளிப்பழங் கொண்டிங்கு எத்தனை போதுமிருந்தேன் நண்ணல் அரியபிரானே! நாரணா! நீராடவாராய். கன்றினை வாலோலை கட்டிக் கனிகள் உதிர எறிந்து பின்தொடர்ந் தோடிஓர் பாம்பைப் பிடித்துக்கொண் டாட்டினாய்போலும் நின் திறத்தேன் அல்லேன் நம்பி நீ பிறந்த திருநன்னாள் நன்று நீ நீராடவேண்டும் நாரணா! ஓடாதே வாராய். கொண்டல்வண்ணா! இங்கே போதராயே கோயிற்பிள்ளாய்! இங்கே போதராயே தெண்டிரைசூழ் திருப்போர்ககிடந்த திருநாரணா! இங்கே போதராயே உண்டுவந்தேன் அம்மம் என்று சொல்லி ஓடி அகம்புக ஆய்ச்சிதானும் கண்டெதிரே சென்றெடுத்துக் கொள்ளக் கண்ணபிரான் கற்றகலவிதானே. சலமாமுகில் பல்கணப் போர்க்களத்துச் சரமாரி பொழிந்தெங்கும் பூசலிட்டு நலிவானுறக் கேடகம் கோப்பவன்போல் நாராயணன் முன் முகம் காத்தமலை (2-4.) (2-9-4) 83 இலைவேய் குரம்பைத் தவமாமுனிவர் இருந்தார் நடுவே சென்று அணார் சொறிய கொலைவாய்ச் சினவேங்கைகள் நினறுறங்கும் கோவாத்தனமெனனும கொற்றக்குடையே (3-5-8) நாடும் ஊரும் அறியவே போய் நல்ல துழாயலங்கல் சூடி நாரணன போமிடமெல்லாம் சோதித் துழிதர்கின்றாள கேடு வேண்டுகின்றார் பலருளர் கேசவனோ டிவளை பாடி காவலிடுமின் என்றென்று பார் தடுமாறினதே. (3-7-5) ஞாலமுற்று முண்டு ஆலிலைத்துயில் நாராயணனுக்கு இவள் மாலதாகி மகிழ்ந்தனளென்று தாயுரை செய்ததனை கோலமார் பொழில்சூழ் புதுவையர்கோன் விட்டுசித்தன் சொன்ன மாலைபத்தும் வல்லவர்கட்கு இல்லை வருதுயரே. (3-7-11) ஒன்றும் அறிவொன்றில்லாத உருவரைக கோபாலர் தங்கள் கன்றுகால் மாறுமாபோலே கன்னியிருந்தாளைக் கொண்டு நன்றும் கிறிசெய்து போனான் நாராயணன செய்த தீமை என்றும் எமர்கள் குடிககோர் ஏச்சுச்சொல்லா யிடுங்கொலோ? (3-8- 2) சீயினால் செறிந்தேறிய புண்மேல் செற்றலேறிக் குழம்பிருந்து எங்கும் 84. ஈயினால் அரிப்புண்டு மயங்கி எல்லைவாய்ச்சென்று சேர்வதன் முன்னம் வாயினால் நமோநாரணா வென்று மத்தகத்திடைக் கைகளைக் கூப்பிப் போயினால் பின்னை இத்திசைக்கென்றும் பிணைகொடுக்கிலும் போகவொட்டாரே. (4-5-2) சலம்பொதி உடம்பின் தழலுமிழ் பேழ்வாய்ச் சந்திரன் வெங்கதிரஞ்ச மலர்ந்தெழுந்தணவு மணிவண்ண உருவின் மால் புருடோத்தமன் வாழ்வு நலந்திகழ் சடையான் முடிக்கொன்றை மலரும் நாரணன் பாதத்துழாயும் கலந்திழி புனலால் புகர்படு கங்கைக் கண்டமென்னும் கடிநகரே. (4-7-2) நன்மை தீமைகள் ஒன்றுமறியேன் நாரணா என்னு மித்தனையல்லால் புன்மையால் உன்னைப் புள்ளுவம்பேசிப் புகழ்வான் அன்று கண்டாய் திருமாலே! ன்னுமாறுன்னை ஒன்றுமறியேன் ஓவாதே ' நமோ நாரணா!' என்பன் வன்மையாவது உன்கோயிலில் வாழும் வைட்டணவனென்னும் வன்மை கண்டாயே. கண்ணா! நான்முகனைப் படைத்தானே! காரணா கரியாய் அடியேன் நான் உண்ணாநாள் பசியாவ தொன்றில்லை ஓவாதே நமோ நாரணா!' என்று எண்ணாநாளும் இருக்கெசுச் சாம வேத நாண்மலர் கொண்டுனபாதம் நண்ணாநாள் அவை தத்துறுமாகில் அன்றெனக் கவை பட்டினிநாளே. (5-1-6) 85 காமர் தாதை கருதலர் சிங்கம் காண இனிய கருங்குழற்குட்டன் வாமனன் என் மரகதவண்ணன் மாதவன் மதுசூதனன் தன்னை சேமநன்கமரும் புதுவையர்கோன் விட்டுசித்தன் வியன் தமிழ் பத்தும் நாமமென்று நவின்றுரைப்பார்கள் நண்ணுவாரொல்லை நாரணனுலகே. (5-1-10) ஸ்ரீதிருமங்கையாழ்வார் திருவாய்மலர்ந்தருளிய "பெரிய திருமொழி"யிலிருந்து திரட்டப்பெற்ற ஸ்ரீமந் நாராயணன் திருநாமம் குறித்துப் பாடிய திவ்விய பாசுரங்கள். வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் பெருந்துயர் இடும்பையில் பிறந்து கூடினேன் கூடி இளையவர் தம்மோடு அவர் தரும் கலவியே கருதி ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால் உணர்வெனும் பெரும்பதந் தெரிந்து நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன் 'நாராயணா' வென்னும் நாமம். (1-1-1) ஆவியே! அமுதே! என நினைந்துருகி அவரவர் பணைமுலை துணையா பாவியேன் உணரா தெத்தனைபகலும் பழுதுபோ யொழிந்தன நாள்கள் தூவிசேர் அன்னம் துணையொடும் புணரும் சூழ்புனல் குடந்தையே தொழுது என் நாவினால் உய்ய நான் கண்டுகொண்டேன் • நாராயணா' வென்னும் நாமம். (1-1-2) சேமமே வேண்டித் தீவினை பெருக்கித் தெரிவைமார் உருவமே மருவி 86 (1-1-3) (1-1-4) ஊமனார்கண்ட கனவிலும் பழுதாய் ஒழிந்தன கழிந்த அந்நாள்கள் காமனார் தாதை நம்முடையடிகள் தம்மடைந்தார் மனத்திருப்பார் நாமம் நானுய்ய நான் கண்டுகொண்டேன் ' நாராயணா!' வென்னும் நாமம். வென்றியேவேண்டி வீழ்பொருட்கிரங்கி வேற்கணார் கலவியே கருதி நின்றவா நிலலா நெஞ்சினை யுடையேன் என் செய்கேன்? நெடுவிசும்பணவும் பன்றியாயன்று பாரகங்கீண்ட பாழியான் ஆழியானருளே நன்று நானுய்ய நான்கண்டுகொண்டேன் 'நாராயணா!' வென்னும் நாமம். கள்வனேன் ஆனேன் படிறு செய்திருப்பேன் கண்டவா திரிதந்தேனேலும் தெள்ளியேன் ஆனேன் செல்கதிக்கமைந்தேன் சிக்கெனத் திருவருள் பெற்றேன் உள்ளெலாம் உருகி குரல் தழுத்தொழிந்தேன் உடம்பெலாம் கண்ணநீர் சோர நள்ளிருளளவும் பகலும் நானழைப்பன் 'நாராயணா' வென்னும் நாமம். எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் எனக்கரசு என்னுடை வாணாள் அம்பினாலரக்கர் வெருக்கொள நெருக்கி அவருயிர் செகுதத எமமண்ணல் வம்புலாம் சோலை மாமதிள் தஞ்சை மாமணிக் கோயிலே வணங்கி நம்பிகாள்! உய்ய நான் கண்டுகொண்டேன் நாராயணா வென்னும் நாமம் இற்பிறப்பறியீர்! இவரவரென்னீர் இன்னதோர் தன்மை யென்றுணரீர் (1-1-5) (1-1-6) 87 கற்பகம் புலவர் களைகண் என்றுலகில் கண்டவா தொண்டரைப்பாடும் சொற்பொருளாளீர்! சொல்லுகேன் வம்மின் சூழ்புனல் குடந்தையே தொழுமின் நற்பொருள் காண்மின் பாடி நீருய்ம்மின் நாராயணா வென்னும் நாமம். (1-1-7) கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும் கருத்துளே திருத்தினேன் மனத்தை பெற்றிலேன தனால் பேதையேன் நன்மை பெருநிலத் தாருயிர்க் கெல்லாம் செற்றமேவேண்டித் திரிதர்வேன் தவிர்ந்தேன் செல்கதிக் குய்யுமாறெண்ணி நற்றுணையாகப் பற்றினே னடியேன் நாராயணா வென்னும் நாமம் (1-1-8) குலந்தரும் செவ்வந்தந்திடும் அடியார் படுதுயராயின வெல்லாம் நிலந்தரஞ் செய்யும் நீளவீசும்பருளும் அருளொடு பெருநிலமளிக்கும் வலந்தரும் மற்றுந்தந்திடும் பெற்ற தாயினு மாயின செய்யும் நலந்தருஞ் சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணா வென்னும் நாமம். (1-1-9) மஞ்சுலாஞ்சோலை வண்டறைமாநீர் மங்கையார் வாள்கலிகன்றி செஞ்சொலாலெடுத்த தெய்வ நன்மாலை இவை கொண்டு சிக்கெனத தொண்டீர்! துஞ்சும்போ தழைமின் துயர்வரில் நினைமின் துயரிலீர்! சொல்லிலும் நன்றாம் நஞ்சுதான் கண்டீர் நம்முடைய வினைக்கு நாராயணா! வென்னும் நாமம். (1-1-10) 88 பேசுமின் திருநாமம் எட்டெழுத்தும் சொல்லி நினறு பின்னரும் பேசுவார் தமை யுய்யவாங்கிப் பிறப்பறுக்கும் பிரானிடம் வாசமாமலர் நாறுவார் பொழில் சூழ்தரும் உலகுக்கெல்லாம் தேசமாய்த் திகழும மலைத்திருவேங்கடம் அடைநெஞ்சமே! (1-8-9) சொல்லுவன் சொல் பொருள் தானவையாய்ச் சுவையூறொலி நாற்றமும் தோற்றமுமாய் நல்லரன் நான் முகன் நாரணனுக் கிடந்தான் தடஞ்சூழ்ந் தழகாய கச்சி பல் லவன் வில்லவ னென்றுலகில் பலராய்ப் பலவேந்தர் வணங்குகழல் பல்லவன் மல்லையர்கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே. (2-9-1) நந்தா விளக்கே! அளத்தற்கரியாய்! நரநாரணனே! கருமாமுகில் போல் எந்தாய்! எமக்கே யருளாய் எனநின்று இமையோர் பரவும் இடம் எத்திசையும் கந்தாரம் அந்தேன் இசைபாட மாடே களிவண்டு மிழற்ற நிழல் துதைந்து மந்தாரம் நின்று மணமல்கும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கென் மனனே. (3-8-1) வாராகமதாகி யிம்மண்ணை யிடந்தாய்! நாராயணனே! நல்லவேதியர் நாங்கூர் சீரார் பொழில் சூழ் திருவெள்ளக்குளத்துள் ஆராஅமுதே! அடியேற் கருளாயே. (4-7-8) கிடந்தநம்பி குடந்தைமேவிக் கேழலாய் உலகை இடந்தநம்பி எங்கள் நம்பி எறிஞர் அரணழிய கடந்தநம்பி கடியார் இலங்கை உலகை ஈரடியால் நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோ நாராயணமே. (6-10-1) 89 விடந்தானுடைய அரவம் வெருவச் செருவில் முன நாள் முன் தடந்தாமரை நீர்ப்பொய்கை புக்கு மிக்க தாடாளன் இடந்தான் வையம் கேழலாகி உலகை ஈரடியால் நடந்தானுடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே. பூணாதனலும் தறுகண் வேழம் மறுக வளைமருப்பை பேணான்வாங்கி அமுதம்கொண்ட பெருமான் திருமார்வன் பாணாவண்டு முரலும் கூந்தல் ஆய்ச்சி தயிர் வெண்ணெய் நாணாதுண்டான் நாமம் சொல்லில் நமோ நாராயணமே. கல்லார் மதிள்சூழ் கச்சி நகருள் நச்சிப்பாடகத்துள் எல்லா வுலகும் வணங்கவிருந்த அம்மான் இலங்கைக்கோன் வல்லாளாகம் வில்லால் முனிந்த எந்தை விபீடணற்கு நல்லானுடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே. குடையா வரையால் நிரைமுன் காத்த பெருமான் மருவாத விடைதான் ஏழும்வென்றான் கோவல் நின்றான் தென் னிலங்கை அடையா அரக்கர் வீயப்பொருது மேவி வெங்கூற்றம் நடையா உண்ணக்கண்டான் நாமம் நமோ நாராயணமே. கான எண்கும் குரங்கும் முசுவும் படையா அடலரக்கர் மானம் அழித்து நின்ற வென்றி அம்மான் எனக்கென்றும் தேனும் பாலும் அமுதுமாய திருமால் திருநாமம் நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாராயணமே. நின்ற வரையும் கிடந்த கடலும் திசையும் இருநிலனும் ஒன்றும் ஒழியாவண்ணம் எண்ணி நின்ற அம்மானார் குன்று குடையாவெடுத்த அடிகளுடைய திருநாமம் நன்று காண்மின்; தொண்டீர்! சொன்னேன் நமோ நாராயணமே. (6-10-7) கருங்கால்மாரி கல்லேபொழிய அல்லேயெமக்கென்று படுங்கால் நீயே சரணென்று ஆயர் அஞ்ச அஞ்சாமுன் நெடுங்கால் குன்றம் குடையொன்றேந்தி நிரையைச் சிரமத்தால் நடுங்காவண்ணம் காத்தான் நாமம் நமோ நாராயணமே.
90
பொங்குபுணரிக் கடல் சூழ் ஆடை நிலமாமகள் மலர்மா
மங்கை பிரமன் சிவன் இந்திரன் வானவர் நாயகராய
எங்கள் அடிகள் இமையோர் தலைவருடைய திருநாமம்
நங்கள் வினைகள் தவிர உரைமின் நமோ நாராயணமே.
வில்லேர் நுதல் வேல் நெடுங் கண்ணியும் நீயும்
கல்லார் கடுங்கானம் திரிந்த களிறே!
நல்லாய்! நரநாரணனே! எங்கள் நம்பி!
சொல்லாய் உன்னையான் வணங்கித் தொழுமாறே.
(7-1-5)
பரனே! பஞ்சவன் பவுழியன் சோழன்
பார்மன்னர் மன்னர்தாம் பணிந்தேத்தும்
வரனே! மாதவனே! மதுசூதா! மற்றோர்
நல் துணை நின்னலால் இலேனகாண்
நரனே! நாரணனே! திருநறையூர் நம்பீ!
எம்பெருமான்! உம்பராளும்
அரனே! ஆதிவராக முன்னானாய்
அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே! (7-7-4)
மற்றும் ஓர் தெய்வம் உளதென்றிருப்பாரோடு
உற்றிலேன் உற்றதும் உனனடியார்க் கடிமை
மற்றெல்லாம் பேசிலும் நின் திருஎட்டெழுத்தும்
கற்று நான் கண்ணபுரத்துறை யம்மானே! (8-10-4)
வலம்புரி ஆழியானை வரையார் திரள் தோளன் தன்னை
புலம்புரி நூலவனைப் பொழில் வேங்கடவேதியனை
சிலம்பிய லாறுடைய திருமாலிருஞ் சோலை நின்ற
நலந்திகழ் நாரணனை நணுகுங்கொல் என் நன்னுதலே.
எங்கானும் ஈ தொப்பதோர் மாய முண்டே?
நரநாரணனாய் உலகத்தற நூல்
சிங்காமை விரித்தவன எம்பெருமான்
அதுவன்றியும் செஞ்சுடரும் நிலனும்
91 பொங்கார் கடலும் பொருப்பும் நெருப்பும் நெருங்கிப் புகப்பொன் மிடறத்தனை போது அங்காந்தவன காணமின் இனறு ஆய்ச்சியரால் அளைவெண்ணெய் உண்டாப்புண்டிருந்தவனே. (10-6-1) நாமம் பலவுமுடை நாரண நம்பீ! தாமத்துளவம் மிக நாறிடுகின்றீர் காமனெனப் பாடி வந்தில்லம் புகுந்தீர் ஏமத்து இது என் ! இது என! இது என்னோ! (10-8.4) ஸ்ரீ ஆண்டாள் திருவாய்மலர்ந்தருளிய ''திருப்பாவை" யிலிருந்து திரட்டப்பெற்ற ஸ்ரீமந் நாராயணன் திருநாமம் குறித்துப் பாடிய திவ்விய பாசுரங்கள். மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் நீராடப் போது வீர் போதுமினோ நேரிழையீர்! சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்! கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான் நாராயணனே நமக்கே பறை தருவான் பாரோர் பு பழப் படிந்தேலோ ரெம்பாவாய். கீசுகீசென்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே! காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து வாசநறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசைபடுத்த தயிரரவம் கேட்டிலையோ? நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் நீ கேட்டோ கிடத்தியோ ? தேசம் உடையாய் | திறவேலோ ரெம்பாவாய் (1) (7) நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் மாற்றமும் தாராரோ ? வாசல் திறவாதார் 92 நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால் போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள் கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகருணனும் தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ! ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே! தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய். (10) ஸ்ரீ ஆண்டாள் திருவாய்மலர்ந்தருளிய ''நாச்சியார் திருமொழி"யிலிருந்து திரட்டப்பெற்ற ஸ்ரீமந் நாராயணன் திருநாமம் குறித்துப் பாடிய திவ்விய பாசுரங்கள். நாமமாயிரம் ஏத்தநின்ற நாராயணா! நரனே! உன்னை மாமி தன்மகனாகப் பெற்றால் எமக்கு வாதைதவிருமே காமன் போதரு காலமென்று பங்குனிநாள் கடை பாரித்தோம் தீமை செய்யும் சிரீதரா! எங்கள் சிற்றில் வந்து சிதையேலே. அன்றுலகம் அளந்தானை யுகந்தடிமைக்கண் அவன் வலி செய்ய தென்றலும் திங்களும் ஊடறுத்தென்னை நளியும் முறைமை யறியேன் என்றும் இக்காவில் இருந்திருந்து என்னைத் ததர்த்தாதே நீயும் குயிலே ! இன்று நாராயணனை வரக்கூவாயேல் இங்குத்தை நின்றும் துரப்பன். (1.5-10) விண்ணுற நீண்டடி தாவிய மைந்தனை வேற்கண் மடந்தை விரும்பி கண்ணுறவென் கடல்வண்ணனைக் கூவு கருங்குயிலே ! என்ற மாற்றம் பண்ணுறு நான்மறையோர் புதுவை மன்னன் பட்டர்பிரான் கோதை சொன்ன
93
நண்ணுறு வாசகமாலை வல்லார் 'நமோ
நாராயணாய !' என்பாரே.
(1-5-11)
வாரணம் ஆயிரம் சூழவலஞ்செய்து
நாரண நம்பி நடக்கின்றா னென்று எதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புரமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழி! நான். (6-1)
இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான்
நம்மையுடையவன் நாராயணன் நம்பி
செம்மையுடைய திருக்கையால் தாள்பற்றி
அம்மிமிதிக்கக் கனாக் கண்டேன் தோழி! நான். (6-8)
சலங்கொண்டு முகிர்ந்தெழுந்த தண்முகில்காள் ! மாவலியை
நிலங்கொண்டான் வேங்கடத்தே நிரந்தேறிப்
பொழிவீர்காள்!
உலங்குண்ட விளங்கனிபோல் உள் மெலியப் புகுந்தென்னை!
நலங்கொண்ட நாரணற்கு என் நடலை நோய் செப்புமினே.
ஸ்ரீ இராமாநுஜரைக் குறித்து ஸ்ரீ திருவரங்கத்தமுதனார் பாடிய
‘இராமாநுஜ நூற்றந்தாதி”யில் ஸ்ரீமந் நாராயணன்
திருநாமம் குறித்துப் பாடிய திவ்விய பாசுரம்.
மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே
கண்ணுற நிறகிலும் காணகில்லா உலகோர்களெல்லாம்
அண்ணல் இராமாநுசன் வந்து தோன்றிய அப்பொழுதே
நண்ணருஞானம் தலைக்கொண்டு நாரணற்காயினரே. (41)
ஆழ்வார், எம்பெருமானார், ஜீயர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீமதே ராமாநுஜாய நம :
நாராயணனே பரம்பொருள்
ஸ்ரீமாந் உ. வே. குமாரவாடி சே. இராமாநுஜாசார்யர்.
பிரமாணங்கள் நாராயணனே பரமாத்மா என்கின்றன .
பிரமாணங்களுக்கு இசைவதே அறிவுடையார் செயல்.
பிரமா' என்றால் அறிவு.
நமக்கு அறிவு நல்குவது பிரமாணம். அது மூன்று வகை
யில் அமைந்துள்ளது. அம்மூவகை பிரமாணங்கள் மூலமே
நாம் அறிவைப் பெறுகிறோம். நமது புலன்களைக் கொண்டும்,
மனனுணர்வினாலும், பிறர் சொல்லக் கேட்டும் நமக்கு அறிவு
உண்டாகிறது.
நம் புலன்களால் உய்த்துணர்வது பிரத்யட்சம். அனத
நாத்திகர் உட்பட எல்லோரும் ஒப்புக்கொள்வார். அது
முதலாவது பிரமாணமாகிறது.
அடுத்து மனனுணர்வினால் ஊகித்து அறிய உதவும் தர்க்
கம் (யுக்தி) அல்லது அளவை அறிவு. கூரிய அறிவினர் இசைவ
தாகும். இது இரண்டாவது வகை
முதல் இரண்டு வகை பிரமாணங்களாலும் அதாவது
ஐம்புலன்களாலும், மனனுணர்வினாலும் நாம் பெறமுடி
யாத அறிவைப் பிறர் சொல்லக் கேட்டுப் பெறுகிறோம்.
அல்லது நூல் கொண்டு தெளிகிறோம். அவ்வாறு கேட்டும்
படித்தும் அறியத்தக்கவை சப்தப்ரமாணம் எனப்படுகிறது.
இத்தகைய சொல் பொருள் வடிவினதான ஞான நற்கலை
நூல்களில் வேதமே சிறந்த பிரமாணமாகக் கற்றுத் தெளிந்த
சான்றோர் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
ஆகவே
நமக்கு
வேதமே முடிவான பிரமாணம். அதற்குமேல் பிரமாணம்
வேறு இல்லையெனத் தேறிற்று.
95 வேதச் சிறப்புகள் புலன்களுக்கு எட்டாதவையும் யூகத்துக்குக் கிட்டா தவையுமான அறிவையே வேதம் நமக்கு நல்குகிறது. அதுவே அதன் சிறப்பு. புலன்களால் அறியக் கூடியதையோ, யூகித் தறியத் தக்கதையோ வேதம் ஒருபோதும் சொல்லாது. ஆகவே நாம் முழு அறிவு பெறவேண்டின் வேதம் சொல் வதை ஏற்பது தவிர வேறுவழியில்லை. நமது அனுபவத்துக்கும் யுக்திக்கும் பொருத்தமான, ஆனால் நாமாக முற்றிலும் உணரமுடியாத உயரிய செம் பொருள்களை நமக்கு உணர்த்துவதாலும் பிரமாணங்களில் தலை சிறந்தது வேதமே என்று அறுதியிடப்பட்டுள்ளது. அது எந்த தனி நபராலும் எந்த ஒரு குறிப்பிட்ட காலத்திலும் படைக்கப்பட்டதன்று. ஆகவே மானிடக்குற்றங்கள் எதுவும் அதற்கு இல்லை நித்யமான பரம் பொருளைக் காட்டி நிற்கும் நித்யமான பிரமாணம் வேதம். பிரளய காலத்தும் அழிவதில்லை. ஆத்மா, பரமாத்மா. மூலப்ரக்ருதி போன்று அதுவும் நித்யமானது; நிர்தோஷமானது. அதாவது குற்றம் குறையற்றது. இதனை யும் வேதம் கொண்டே நாம் அறிகிறோம். ஆனது பற்றியே இறைவனால் மயர்வற மதிநலம் அரு ளப்பெற்று 'வேதம் தமிழ் செய்த மாறன' என்று போற்றப் பெறும் நம்மாழ்வாரும் இறைவன் இருப்பை வெளியிடும் போது, "திடவிசும்பு எரிவளி நீர்நிலம் இவைமிசை படர்பொருள் முழுவதுமாய் அவை யவைதொறும் உடல்மிசை உயிரெனக் கரந்து எங்கும் பரந்துளன் சுடர்மிகு சுருதியுள் இவையுண்ட சுரனே'' என்று இறைநிலையைத் தம் சொற்களால் ஒருவாறு விளக்கி விட்டு, “உளன் சுடர்மிகு சுருதியுள்' என்று வேதப் பிரமாண ஆதாரத்தையும் உடன் அருளிச் செய்கின்றார்.
96 “யோ ப்ரஹ்மாணம் விதாதிபூர்வம் யோவை வேதாம்ச ப்ரஹிணோதி தஸ்மை.'' (எவன் பிரமனைப் படைத்து, அவனுக்கு வேதமும் ஓதி வைத்தானோ) என்று கூறுகிறபடி "வேதம் முன் ஓதிய பட்டன” என்ற சிறப்பு நாராயணனுக்கே உரியது. "மாதா பிதா ப்ராதா, நிவாஸஸ்ஸரணம் ஸுஹுர்த் கதிர் நாராயண:” என்று உலகுக்கோர் முந்தைத் தாய் தந்தையாக விளங்கும் நாராயணனே பிரமனை முதலில் படைத்து அவனுக்கு வேதங்களையும் ஓதி வைத்தான என்று வேதம கூறுவதில் அறியத் தக்கதொரு அரிய கருத்து உள்ளது. அதாவது, “நான்முகனை நாராயணன் படைத்தான்” என்பது வேதக் கருத்து என்பதோடு, "நான் முகனைப் படைப்பது போல் வேதத்தை நாராயணன் படைத்தான்” என்று கூறவில்லை. தனனால் படைக்கப்பட்ட பிரமனுக்கு ஏற்கனவேயுள்ள வேதததை ஓதிவைத்தான் நாராயணன் எனபது கூர்ந்து தோக்கத்தக்கது. கல்பந்தோறும் இப்படி தொடர்வதாக வேத சாஸ்த்ர பிரமாணங்கள் மூலமாக நாம் அறிகிறோம். நித்யமான வேதங்கள் கூறுவதென்ன? நம்மையே நாம் மேலெழப் பார்க்கையில் முதலில் நம் உடலையே நாமாக அறிகிறோம். ஆனால், அறிவு முதிர முதிர, நாம் இந்த உடலலல புலனகளு மன்று; மனமும் அல்ல; மூச்சுக்காற்று மனறு; ஏன்? அறிவுமலல; அறிவற்ற சடமு மல்ல; துனபம் தரும் மற்றப் பொருளுமல்ல; நாமே நம்மைத் தெளிந்தறியத் தக்க பொருளுமலல; கருதற்கு அரியது உயிர் அல்லது ஆத்மா. கருதற்கு அரிய ஆத்மா வைப் பற்றிய அறிவு நம் அநுபவத்தாலோ, யுக்திகளாலோ தெளிவு பெறுவதில்லை; முழுமை பெறுவதில்லை. அப்போது தான் வேதத்தின் உதவி நமக்குத் தேவைப்படுகிறது. நம் ஆத்மாவை (ஜீவனைப் பற்றி வேதம் கூறுவதென்ன? - 91 உடலுக்குள் உறையும் ஜீவன் (சித்) அறிவற்றதாயின் ஆத்மாவைப் பற்றிய விசாரம வேண்டுவதில்லை. அறிவுள்ள படியால் தான் ஆத்ம விசாரம் நமமை விடாது தொடர் கிறது. ஆத்மா அல்லது ஜீவன் என்பது உடல், பொறிகள், புலன்கள், மனம, மூச்சு, அறிவு இவற்றுள் வேறுபட்டதாய், ஜடமில்லாததாய், ஆனந்த இயல்பினதாய், எப்போதும் உள்ள தாய், அணுவாய், உருவற்றதாய், சிந்திக்கவும் அரிய தாய், 'அவயவமற்றதாய், விகாரங்கள் (மாறுதல்) இல்லாத தாய், அறிவிற்கு இருப்பிடமாய, இறைவன இட்ட கட்டளை யில அவனால் தரிககபபடுவ தாய், அவனுக்குரிய பொருளாய் இருப்பதொன்று என்று நமமை நாம வேதப் பிரமாண உதவி கொண்டு அறிய முடியும். மற்றெவ் வகையாலும் இந்த ஆன்ம உணமையை அறிய முடிவதில்லை. அறியப் படும் இந்த உண்மை அநுபவத்துக்கும் யுக்திக்கும் கூட பொருத்தமாகத்தான் உள்ளது. ஜீவன் அறிவுடையதாகையால் அறியவேண்டிய உய ரிய செம்பொருள்களை இவ்வாறு வேதமாகிற மறை நூல் கொண்டும் தெளிவது இயல்பாகிறது. ' கல்வி கரையில! கற்பவர் நாள் சில' ஆகையால், பெறற்கரிய மானிடப் பிறவியிலே வேதம் கொண்டு அறியத் தக்கவைகளை, கற்பவை கற்க' எனபதற்கேற்ப அவசியம் அறியவேண்டிய வற்றை முதலில் விரைந்து அறிதல வேண்டும். அவ்வாறு அறியவேண்டும் அர்த்தங்கள் (செம்பொருள்கள்) அறிவுள்ள இந்த ஜீவனுக்கு ஐந்து வகையில் உள்ளன. “மிக்க இறைநிலை, மெய்யாம் உயிர்நிலை, தக்க நெறி, தடையாகித் தொககியலும ஊழ்வினை, வாழ்வு" எனற ஐந்துமே அவை. “ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் ப்ராப்துச்சப்ரத்யகாத்மந: ப்ராப்த்யுபாயம் பலம் ப்ராப்தே: ததா ப்ராப்தி விரோதிச வதந்தி ஸகலா வேதா: ஸேதி ஹாஸ புராணகா!" நா-7 98 என்பது வைதிகர் வசனம். உடலுள் உறையும் இந்த ஆத்மா வின் அறிவு முதிர முதிரத் தெளிவுறும் பொருள்களில் தலை யானது பரமாத்ம ஜ்ஞானமே. உலகக் காரணப் பொருளாய், காக்கும் இயல்வினதாய் (ரட்சகமாய்) எப்பொருளும் ஒன்றி நிற்கும் (லயமடையும் ) இடமாய் விளங்கும் அப்பரம் பொருள் பற்றிய அறிவையே வேதம் நமக்குப் பிரதானமாக (முக்கியமாக) உணர்த்து கிறது. அதையே “வேதாந்த விழுப்பொருளின் மேலிருந்த விளக்கு'' என்று அவனால் மயற்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்கள் தெளிவுறுத்தியுள்ளனர். மீமாம்ஸை தோன்றியதேன்? வடமொழி மறைகளில் 'ஸத்' என்றும், 'ஆத்மா' என்றும், 'ப்ரஹ்மம்' எனறும், 'பரஞ்ஜோதி' என்றும் பொதுப் பெயர்களால அப்பரம் பொருளைக் குறிப்பிட்டு வருமபோதே அவ்வேதம இடையிடையே ஹிரண்யகர்பன் (பிரமன்), சிவன், இந்திரன், வருணன், இந்திரன், வருணன், வாயு என்பது போன்ற தேவதைகளின் பெயர்களாலும் அவனை ஓதுவ துண்டு. இதனால் ஏற்பட்ட குழப்பங்களும் பல உண்டு. “வணங்கும் துறைகள் பல; மதிவிகற்பால் பிணங்கும் சமயம் பல; அவை யவை தொறும் அணங்கும் பல என் கிறார் நமமாழ்வார். “தம் காலத்தில் மறைந்த பல வேதங்களையும் கண்டு பிடித்து, முறைப்படுத்தி, வகுத்துத தொகுத்துக் கொடுத்த வேத வியாசரே வேதங்களில் ஏற்படும் இத்தகைய குழப்பங் களை நீக்கி, சீராக வேதக் கருத்தை அறிய மீமாம்ஸா சாஸ் திரத்தையும் தோற்றுவித்தார். தமது சிஷ்யர் ஜெய்மினியைக் கொண்டும் தாமுமாக வேதத்தின் முற்பகுதி, பிறபகுதி இரண்டிலுமுள்ள சிக்கலைத் தீர்ககச் சூத்திரங்கள் இயற்றிவைத்தார். மீமாம்ஸா நூல் கள் பூர்வம, உத்தரம் என இருவகையில் உள்ளவை. வேதச் .
99 சொல் பொருள் ஆராய்ச்சி யே ‘மீமாம்ஸா' என்பதற்குப் பொருளாகும். 'ஆராய்ச்சி' என்னும்போதே சில முறைகளைப் பற்ற வேண்டும், பின்பற்ற வேண்டிய அம்முறைகளை ‘நியாயம்' கொண்டு ஆராய்ந்தால், “நாராயணனே பரம் பொருள்'' என்பது யாவருக்கும் எளிதில் விளங்கி நிற்கும். அதனைச் சிறிது நிரூபிப்போம். காரணப்பொருள் வேதங்கள் பரமாத்மாவைக் குறிப்பிடும் உபநிஷத் வாக் கியங்களில் அவனைக் காரணப் பொருளாகவே முந்துற முனனம் பலவிடங்களில் குறிப்பிடுகினறன. கண் முதலிய வெளிப் புலன்களால் காணப்பெறும் இப் பிரபஞ்சத்துக்கு எது காரணமோ அப்பொருளை ப்ரஹ்மம் (பரமாத்மா) என்று வேதம் கூறும். ''யதோவா இமாநி பூதாநி ஜாயந்தே தத்ப்ரஹ்ம!" (காணப்படும் இவை எதிலிருந்து உண்டானவையோ அது ப்ரஹ்மம்) என்கிற சொற்றொடரைக் காண்க. உபநிஷத்துக்களில் காரணவாக்கியங்கள் பல உண்டு. ஆனால் ஒனறைப் போல மற்றொன்று இருப்பதில்லை. ஒவ் வோரிடத்தில் ஒவ்வொரு பெயரைக் கூறி, அதுவே காரணப் பொருள் என்று பேசும் 'ஸத்' என்ற ஒரு பெயரைக் குறிப்பிட்டு “ஸதேவ ஸெளம்ய இதம் அகர ஆஸித்' (ஸத் என்பதே முதலில் இருந்தது) என்று ஓரிடத்தில் காரணப் பொருளாக 'ஸத்' என்பதைக் கூறும். காரணந்து த்யேய. (காரணப் பொருளே தியானத்துக்குரியது) எனறு மறறோர் இடத்தில் தொடரும். இதனால் காரணப் பொருள் பரமாத்மா 'ஸத்' என்ற பெயரால் கூறப்படுவதை நாம் அறியலாம். இதே போன்று 'ஆத்மா', 'ப்ரஹ்மம்', 'பரஞ்சோதி' போன்ற பொதுப் பெயர்களால் பல இடங்களிலும் மற்றும் 100 பிரமனுக்கே உரிய ஹிரண்யகர்பன், சிவனுக்குரிய சம்பு, ருத்ரன் மேலும் இந்திரன், வருணன், வாயு போன்ற தேவதைகளின் பெயராலும் குறிப்பிடுவதுண்டு. இதனால் காரணப் பொருளின உண்மையான பெயர் எது என்பதில் குழப்பம் ஏற்பட்டு விட்டது. அறிவுள்ள அறிவற்ற பொருள்களின் திரட்சியாக விளங்கும் பிரபஞ்சத்தைத் தன்னுள் தோற்றுவித்து அதனுள் தான் ஊடுருவி நின்று அவற்றின் ஸத்தை (உண்டாதல்), ஸ்திதி (இருத்தல்). ப்ரவிருத்தி (செயலில் மூட்டுதல்), நிவ்ருத்தி (செயலிலிருந்து மீட்டல்), அனைத்தும் தன் அதீன மாகக கொண்டு நிற்கும் பரம்பொருளின் பெயரை “நாராயணன" என்ற சொல்லிலேயே வேதம் இட்டு வைத் திருக்கிறது. இந்த உண்மையை, “அந்தர்பஹிஸ்ச தத்ஸர்வம் வ்யாப்ய நாராயணஸ் ஸ்தித:' என்றும், "அந்தப்ரவிஷ்ட: சாஸ்தா ஜனானாம் ஸர்வாத்மா'' எனறும், அந்தர்யாமியாக (உள் உறைபவனாக) எங்கும் பரந்துள்ள அப்பொருளை “வியாப்னோதி இதி விஷ்ணு” (பரவி நிற்பதால் விஷ்ணு) என்றும், "ஸர்வத்ரவஸதி இதி வாசுதேவ:" (எங்கும் உறை பவன் என்பதால் வாசுதேவன்) என்றும் குறிப்பிடுவதோடு, “நாராணாம் அயனம் ய:ஸ ” (நாரங்கள் எனப்படும் நித்யப் பொருள்களுக்கு உறைவிடம்) என்றும், மற்றொரு வகையில் "நாரா! அயனம் யஸ்ய” (நித்தியப் பொருள்களுக்குள் உறைபவன்) எனறும் குறிப்பிடுகிறது. தளர்வின்றியே என்றும் எங்கும் பரந்த தனிமுதல் ஞானம் ஒன்றாய் அளவுடை ஐம்புலன்கள் அறியாவகையால் அருவாகி நிற்கும் வளரொளி ஈசனை மூர்த்தியைப் பூதங்களைந்தை இரு சுடரைக் கிளரொளி மாயனைக் கண்ணனைத் தாள்பற்றி யான் என்றும் கேடிலனே'' 101 என்று அந்தப் பரம்பொருளை நம்மாழ்வார் விவரிப்பார். "உடல் மிசை உயிரெனக் கரந்து எங்கும் பரந்துள்ள அவனை, ''ஸ ஆத்மா , அங்காந் யந்யா தேவதா" (அவனே உயிர், மற்ற தேவதைகள் அவனுக்கு உடலாக (சரீரமாக) உள்ளனர் என்று வேதம் காட்டுகிறது. சரீரத்தைக் குறிக்கும் சொல் ஆத்மாவையும், ஆத்மாவைக் கூறுகிறபோது சரீரத்தையும் இணைத்துப் பொருள் கொள்வது போல வேதமும், 'சகல சப்த வாச்யத்துவம்' எல்லாப் பெயர்களுக்கும் சொல்லுக்கும் உரியனாய் இருக்கும் நாராயண பதத்தின் சிறப்பை எடுத்துக் காட்டவே பரம் பொருளுக்கு "நாராயணன்' என்ற பெயரை வேதமே காரணம், இடுகுறி இருவகைகளாலும் இட்டு வைத்திருக்கிறது. இதனை அறியாத சிலர் சிருஷ்டிக்குக் கருவியாக விளங்கும் பிரம்மா, அல்லது சம்ஹாரத்துக்குக் கடவனாகும் சிவன் போன்ற ஜீவாத்மாக்களை முழு முதற் பொருளாகக் கருதி நூல் இயற்றவும், மூலக் கருத்துக்கு முரண்பட்ட உரைகளை விரிக்கவும் தலைப்பட்டனர். அதன் விளைவுகள் தான் பல சமயப் பிணக்குகள். “பிணக்கற அறுவ கைச் சமயமும் நெறி உள்ளி உரைத்த கணக்கறு நலத்தனன் அந்தமில் ஆதியம் பகவன்" என்று கொண்டாடப்படுகின்ற கண்ணனும் கீதையில் தன் மேன்மையைத் தெளிவுறுத்தினான். ஆயினும் மனக்குற்ற மாந்தர், “அவஜா நந்தி மாம் மூடா : மாநுஷீம் தநும் ஆச்ரிதம்" (மானிட உருவில் வந்த என்னை மூடர் அவமதிக் கின்றனர்) எனறு கண்ணனே கூறுமபடியாயிற்று. நிலையில் உண்மைப் பொருளை அறுதியிட, வேதாந்த விழுப்பொருளை அறிய மீமாம்ஸா நியாயங்களே நமக்குக் கை கொடுக்கின்றன. அம்முறையில் ஓர் ஆய்வை நாம் இங்குக் காணலாம்.
102 உபநிஷத்துக்களில் காரண வாக்கியங்கள் பல உண்டு. அவற்றுள் ஒரு வாக்கியம் போன்று மற்றொரு வாக்கியம் காரணப் பொருளைக் கூறாமல் முரண்பாடு தோன்றக் கூறி யிருத்தலை நாம் காணலாம். எடுத்துக் காட்டாக, “ஹிரண்ய கர்ப்பஸ் ஸமவர்த்தாக்ரே” (பிரளய காலத்தில் ஆதியில் பிரமன் இருந்தான் என்பது ஒருவாக்கியம். அடுத்து, “நஸத் நசாஸத் சிவ ஏவ கேவல:"ஸத்தும் அஸத்தும் அக்காலத்தில் இல்லை. சிவன் மட்டுமே இருந்தான்) என்பது மற்றொரு வாக்கியம். "ஏகோஹவை நாராயண ஆஸீத்; ந ப்ரஹ்ம ந ஈசான” என்பது இன்னொரு சொற்றொடராகும். இப்படி மூன்று வாக்கியங்களில் கூறப்படும் பொருள் களில் முரண்பாடு தோன்றுகிறதல்லவா? வேதங்களில் முரண்பாடுகளை நீக்கிப் பொருள் கொள்ளவே மீமாம்ஸா நியாயங்களை வியாஸர் தோற்று வித்தார். அதன்படி இங்கு முரண்பாட்டை நீக்கிப் பொருள் கொள்வது எங்ஙனம் என்பதைப் பார்ப்போம். முதல் இரண்டு வாக்கியங்களில் யாதுமில்லா அன்று, ஸத்தும் அஸத்தும் அழிந்த காலத்தும் சிவன் இருந்தா னென்று தெளிவாகத் தெரிகிறது அதே போல் நாராயணன் அப்போது இல்லையென்று தெளிவாகத் தெரிகிறதா? தெரிய வில்லை. ஆனால்,' ஏகோஹவை நாராயண ஆஸீத் நப்ரஹ்மா ந ஈசான:" இந்த வாக்கியத்தில், "நாராயணன் அக்காலத்தில் இருந்தான்” என்பது எவ்வாறு தெளிவாகத் தெரிகிறதோ, அவ்வாறே , " அக்காலத்தில் பிரமனும் இல்லை; சிவனும் இல்லை” என்பதும் தெளிவாகத் தெரிகிறது. இதனால் தேறிய பொருள் என்ன? மேலே கூறிய மூன்று வாக்கியங்களுக்குள் முரண்பாடு நீக்கிப் பொருள் கொள்வதே சீரிய நெறியாகும் முதல் இரு என்ற 103 தொடர்களுக்கும், எல்லாம் அழிந்த காலத்தும் பிரமன் மாத்திரம் இருந்தான்; அல்லது சிவன் மாத்திரம் இருந்தான்; வேறு பொருள் இல்லையென்ற கருத்தைக் கொண்டோ மானால், “ஏகோஹவை நாராயண ஆஸீத்' என்னும் வாக் கியம பொருந்துமா? பொருந்தாது. ஆனால், 'ஏகோஹவை” என்னும் வாக்கியம் தெளிவாகத் தெரிவிக்கும். * எல்லாம் அழிந்த காலத்தில் நாராயணன் மாத்திரம் இருந்தான்; மற் றொன்றும் இல்லை'' என்னும் கருத்தைக் கொண்டோமானால் முதல் வாக்கியங்களிலும் பொருந்துவதில் தட் டொன்றுமிலலை; தடையேதுமில்லை. ஆகவே, ஏனைய பொருள் அழிந்தகாலத்து பிரமனோ சிவனோ இருந்ததாகவும், அப்பிரமனும் சிவனும் அழிந்த காலத்தும் அழிவில்லாத நாராயணனே இருந்ததாகவும், முதல் இரண்டு வாக்கியங்களும் மூன்றாம் வாக்கியமும் முறையே அறிவிக்கின்றன வென்று கூறும்போது முரண் பாடு சிறிதும் ஏற்பட வழியில்லையே. இவ்வாறு ஆராய்ந்து வேதக் கருத்தை அறுதியிடுவது வியாஸர் செய்த மீமாம்ஸா சாஸ்திர வழியாகும். இதற் கெல்லாம் அவசியமே இல்லாதபடி தைத்திரிய உபநிஷத்து எழுப்பும் கோஷம் நம் காதுகளில் ஒலிக்கட்டும். ''நாராயண : பரப்ரஹ்ம தத்வம் நாராயண: பர: நாராயண: பரஞ்ஜ்யோதி : ஆத்மா நாராயண: பரா யச்ச கிஞ்சித் ஜகத்யஸ்மிந் த்ருச்யதே ச்ரூயதேபிவா” (பரம் ப்ரஹ்மம் நாராயணனே, உயர்ந்த உண்மையான வஸ்து நாராயணனே; உயர்ந்த ஆத்மாவும் நாராயணனே; இந்த உலகத்தில் காண்பனவும் கேட்பனவுமான எல்லா வஸ்துக்களிலும் உள்ளும் புறமும் நுழைந்து நிறைந் திருப்பவன் நாராயணனே.) அதனாலன்றோ தெளியாத மறைநிலங்கள் தெளிவித்த ஆழ்வார்களும் ஒருமிடராக அவன் பரத்துவத்தைப் பரக்கப் பேசினர், 104 “முதலாவார் மூவரே; அம்மூவருள்ளும் முதலாவான மூரிநீர்வண்ணன்” என்று பொய்கையாழ்வாரும், “மாதவன்பேர் சொல்லுவதே ஒத்தின் சுருக்கு” என்று பூதத்தாழ்வாரும், “நாமம் பல சொல்லி நாராயணா'' என்று பேயாழ்வாரும், ''நான்முகனை நாராயணன் படைத்தான்-நான் முகனும் தான் முகமாய்ச் சங்கரனைத் தான் படைத்தான்...'' “தேருங்கால் தேவன் ஒருவனே......'' “இனியறிந்தேன் ஈசற்கும் நான்முகர்க்கும் தெய்வம்...'' "காரணன் நீ கற்பவைநீ நற்கிரிசை நாரணன் நீ நன்கறிந்தேன் நான்" என்று திருமழிசை யாழ்வாரும் அறுதியிட்டனர் பின் நம்மாழ்வாரும், "எறிகடல் நடவுள் அறிதுயில் அமர்ந்து சிவன், அயன், இந்திரன், இவர்முதல் அனைத் தோர் தெய்வக்குழாங்கள் கைதொழக் கிடந்த தாமரை யுந்தித் தனிப்பெரு நாயக! மூவுலகளந்த சேவடியோயே!" என்று ஒன்றெனப் பலவென அறிவரும் வடிவினுள் நின்ற நன்றெழில் நாரணன பெருமையை நிலைநிறுத்தினார். அவரை யடுத்துச் சேரலர் கோனும், "பிறையேறு சடையானும் நான்முகனும் இந்திரனும் முறையாய பெருவேள்விக் குறை றைமுடிப்பான் மறையானான்' என்றுரைத்தார். பாண்டியப் பேரவையில் பரத்துவ நிர்ணயம் செய்த பெரியாழ்வார், ''எருத்துக்கொடி யுடையானும் பிரமனும் இந்திரனும் மற்றும் ஒருத்தரும் இப்பிறவி என்னும் நோய்க்கு மருந்து அறிவாருமில்லை''
105
என மற்றவர்களது நிலையைக் கூறி மாமணிவண்ணனின்
மேன்மையை நிலைநிறுத்தினார்.
துளபத் தொண்டாய தொல்சீர் தொண்டரடிப்பொடியும்,
பெண்ணுலாம் சடையினானும் பிரமனும்
உன்னைக் காண்பான்
எண்ணிலா ஊழிஊழி தவம் செய்தார் வெள்கிநிற்ப
என்றார்.
திருப்பாணரும்,
"துண்டவெண் பிறையன் துயர் தீர்த்தவன்"
என அரங்கனைக் காட்டினார்.
திருமங்கை மன்னனோ,
“எம்பெருமான் உண்டுமிழ்ந்த எச்சில் தேவர் அல்லாதார்
தாமுளரே?"
என்று வினவி,
''மற்றுமோர் தெய்வம் உளது என்று இருப்பாரோடு
உற்றிலேன்"
என்று அருளி,
“நின் திருவெட்டெழுத்தும் கற்று நான் உற்றது உன்
அடியார்க்கு அடிமை”
என்று அறுதியிட்ட பின் மறுத்துப் பேசுவார் உண்டோ?
மீமாம்ஸா நியாயம் கொண்டு உண்மை வைதிகராயும்,
ஆழ்வார்கள் அருளிச்செயல் பயின்று தெளிந்த ஸ்ரீவைஷ்ண
வராயும் வாழ்வதற்கு மேல் மானிடப் பிறவிக்குச் சிறப்பு
ஏதுமில்லை.
இனிப் பேசுமாறு என்? இவ்வுண்மைக்கு இசையகில்லா
மனக்குற்ற மாந்தர் பழிக்கில் புகழ் என்று கொண்டு,
"நாராயணனே பரம் பொருள்; நாம் அவனுக்கு நிலையடி
யோம்'' என்ற உறுதியில் நிலைத்து நிற்போமாக!
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: நாராயணனே முதற் பெருங் மோக்ஷ என்பது சமய கடவுள் ஸ்ரீமாந் வித்வான், ப்ரபந்த வித்வான் ரா. இராமஸ்வாமி இராமாநுஜஸ்வாமி “முமுக்ஷவான (மோக்ஷத்தை விரும்புபவனான) சேதன னுக்கு முண்டாம்போது தத்வத்ரய தத்வத்ரய ஜ்ஞான முண்டாக வேண்டும்" ஸ்ரீவைஷ்ணவ ஆசார்ய சிரேஷ்டரான பிள்ளைலோகாசார்யரின் ஸ்ரீசூக்தி. மோக்ஷ த்தில் இச்சை யுடையனான அறிவு படைத்த மனித னுக்கு மோக்ஷ முண்டாக வேண்டுமானால், தத்வத்ரய ஞானத்தைப் பெறவேண்டும் என்பது இதன் பொருள். தத்வத்ரயமாவது'- சித், அசித், ஈசுவரன் என்னும் மூன்று தத்துவங்கள். சித் என்கிறது அறிவுமயனாய் அறியும் பண்புடையனான ஆத்மாவை அறிவின் பயன் அறிய வேண்டியவற்றை யறிந்து விடவேண்டியவற்றை விட்டுப் பெற வேண்டியதைப் பெறுகை. ஆத்மாக்கள் பலர். இவ் வாத்மாக்கள் நித்யர், முக்தர் , பத்தர் என மூவகைப்படுவர். நித்யர்.- ஒரு நாளும் பிறவாதவர்களாய் தெளிவிசும்பு திருநாடு பரமபதத்தில் பரவாசுதேவனுக்கு ஒழிவில காலமெல்லாம் உடனாய்மன்னி வழுவிலா அடிமை செய்து அந்தமில் பேரின்பத்தடியராய்த் திகழும் அநந்தன், கருடன், விஷ்வக்சேனர் முதலியவர்கள். முக்தர்:- மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து உழன்று ஒரு காலத்தில் பகவானுடைய திருவருளால் உள்ளந்தேறி அடியை யடைந்து நீள்விசும்பை (பரமபதத்தை) யடைந்து நித்யரைப் போலவே ஈறில் இன்பத் திருவெள்ளத்தில் மூழ்கித் திளைப்பவர்கள், என்னும் 107 பத்தர்:- அநாதி கர்மவாசநா ருசிகளின் காரணமாகப் பகவானுடைய மாயையால் கட்டுப்பட்டுத் தங்களையும் ஈசுவரனையும் மறந்து, ஈசுவரன் கைங்கர்யத்தையும் இழந்து, இழந்தோம் என்கிற இழவுமின்றிக்கே பிறவிப் பெருங் கடலுள் விழுந்து நோவு படுகினறவர்களான சம்சாரிகள். இவர்களும் அந்த நித்ய முக்தர்களைப் போலவே பகவத் கைங்கர்யத்தைப் பெற்றுப் பேரின்பம் துய்க்க உரிமை யுடையவர்களே. ஆனால், அதனை இழந்து துன்புறுகின்றார் கள் மநுஷ்யர்களுடைய வியசனத்தைக் கண்டு பெரிதும் துக்கமடைகின்ற மஹாகுண முடையவனாகையாலே பகவான இவர்கள் நிலையைக் கண்டு பெரிதும் வருந்துகின் ன். ஆத்மாக்களிடத்திலே அளவு கடந்த அன்புடையவனா கையினாலே இவர்களைத் தான் அநுபவிக்க வேண்டுமென்ப திலும், இவர்கள் தன்னை அனுபவிக்க வேண்டுமென்பதிலும் கரை கடந்த ஆசையுடையவன. ஆகையாலே ஏதேனும் ஒரு பிறப்பிலாகிலும் ருசி பிறந்து நமமை விரும்பமாட்டார் களா? எனற நைப்பாசையாலே மீண்டும் மீண்டும் படைக் கின்றான். ஜீவனத்திற்குரிய நெல்லை விளைக்கும் உழவன் பல முறை விளையாமல் பதரானாலும் நெல்லின் மீதுள்ள ஆசையாலே மீண்டும் மீண்டும் உழுது பயிரிடுவா னல்லவா? அதுபோலவே பக்தி யுழவன் எனப்படுகின்ற இறைவனாகிற பேருழவனும் ஞான பக்தி வைராக்யங்களாகிய இன்சுவை பொருநதிய ஜீவனத்தை (முமுக்ஷவாகிற நெல்லை)ப் பெறு வதிலே உள்ள ஆசையாலே மீண்டும் மீண்டும் உலகப் படைப்பாகிற உழவுத்தொழிலைச் செய்கின்றான். உழவன் பலமுறை பயிரிட்டுப் பூசாரம் குன் றியபோது நிலம் சூரிய கிரணங்களால் உரம் பெறுதற்காகச் சிலகாலம் பயிரிடாமல் நிறுத்தி வைப்பன். அதுபோல உலகப் பேருழ வனாகிய இறைவனும் உலகமாகிற விளை நிலத்தில் சாரம் 108 குறைந்து முமுக்ஷக்களாகிற பயன் விளையாதபோது ஒரு ப்ரம்மகல்ப காலம் படைப்புத் தொழிலை நிறுத்தி வைப்பன், அக்காலத்தில் பத்தாத்ம வர்க்கம் முழுதும் மெழுகில் ஒட்டிய பொன் போல் மூலப்ரக்ருதியில் லயித்துக் கிடக்கும். அக்காலத்தில் பகவானுக்குப் பரமபதத்திலே நித்தர், முத்தர்களுடன் கூடிப் பரிபூரண அநுபவம் நடந்தபோதிலும் அவ்வ நுபவம் அவனுக்கு ஒரு அநுபவமாகத் தோன்றுவ தில்லை. அதனால் அவன் மகிழ்ச்சி அடைவதில்லை. தன்னைத் தனியனாகவே நினைத்தான் தேசாந்தரம் சென்ற புத்திரனையே நினைந்து உருகும் தந்தையைப் போல எவ்வுயிர்க்கும் தாயும் தந்தையுமான ஈசனும் தன்னை யடைவதற் குறுப்பான சரீரமும இந்திரியங் களும் இன்றி உருமாய்ந்து கிடக்கும் பத்தாத்மாக்களையே நினைந்து மருகினான். அதனால் அவன் திருவுள்ளத்தில் ஒப் பற்ற கருணை பிறந்தது. சிருஷ்டி காலமும் வந்தது தயமாந மநாவாய் (கருணை நிரம்பிய திருவுள்ள முடையவனாய்க் கொண்டு கரண களேபரங்களைக் கொடுக்கத் திருவுள்ளம் பற்றினான். பிரக்ருதியை விகரிப்பித்து (மாறுதல் அடையச் செய்து) தமஸ், அவ்யக்தம், மஹத் அகங்காரம், பஞ்சபூதங்கள் ஆகிய அண்டகாரணங்களையும தானே உண்டாக்கித் தன் திருநாபிக்கமலததில் நான்முகனைப் படைத்து நான்முகன் மூலமாக இவர்களுக்குப் பதினோரு இந்திரியங்களை (ஞானேந் திரியங்கள் ஐந்து, மெய், வாய், கண், மூக்கு, செவி). கர்மேந் திரியங்கள் ஐந்து; வாக்கு, பாதம், பாணி (கை), பாயு (மல விஸர்ஜன கருவ), உபஸ்தம் (பிறப்புறுப்பு); மற்றும் மனம் ஆகியவற்றை)க் கொடுத்தான். அறிவில்லாத மனிதர்கள் உணர்வென்னும் விளக்கினை ஏற்றி மேலிருந்த நந்தாவேத விளக்கினை (நாரா யணனை)க் காணகைக்காகவும், நல்லவை, தீயவைகளைப் பகுத் தறிவதற்காகவும், நான் மறைகளாகிற துளக்கமில் விளக் 109 கையும் அவ்விளக்கில் கொளுத்தின பல விளக்குகள் போன்ற அங்கங்கள், வித்யைகள், கலைகள், ஸ்ம்ருதிகள், இதிஹா சங்கள், புராணங்கள் முதலியவற்றையும் தானேயும், முநி வர்களைக் கொண்டும் வெளியிட்டு அருளினான். சாஸ்த்ர தாத்பர்யங்களாய் பரம ரஹஸ்யங்களான திருமந்த்ரம், த்வயம், சரம ச்லோகங்களையும் தானே வெளியிட்டருளி னான். அவன் தன் கிருபையினாலே இத்துணை உபகார பரம் பரைகளைச் செய்தபோதிலும் இவ்வாத்மாக்கள் திருந்தினார் கள் இல்லை. விசித்திரமான இந்த தேஹ சம்பத்து ஈசுவர னுக்கு நிவேதிப்பதற்காகவே கொடுக்கப்பட்டதென்பதை யறியவில்லை. மாயவன தனனை வணங்கவைத்த கரணங்கள் இவையென்று அறியாதவராயினர். அவன் தந்த ஆக்கை யின் வழியே உழலலாயினர். (புலன்களின் வழியே ஒழுக லாயினர்). தர்ம சாதனமாகக் கொடுக்கப்பட்ட சரீரத் தையே தாங்களாச (ஆத்மாவாகக் கருதினர். பகவானுக்கு உரிமையான ஆத்ம வஸ்துவைத் தங்களுக்கு உரிமையாக (ஸ்வதந்த்ரமாக) நினைத்தனர். தங்களைப் பிற தெய்வங் களுக்கு உரிமையாக்கினர். இப்படி அனைவருமே ஈசுவரனுடைய ஆஜ்ஞா ரூபங்க ளான சாஸ்த்ரங்களில் விதித்தவற்றைச் செய்யாமலும், விலக்கியவற்றைச் செய்தும் போந்தனர். இப்படி யாதா னும் பற்றி நீங்கும் விரதத்தை மேற்கொண்டு அலம் புரிந்த தடங்கைகட்கும் அகப்படாமல் அகன்று போய்க்கொண் டிருந்தனர். உடைமையாம் தன்மை ஆத்மாக்களிடத்தில் பாகவே உண்டாயிருக்குமே! உடையனான தன்மை ப்ரஹ்ம மான நாராயணனிடத்தில் நிலைத்திருப்பதாயிற்றே! உடை யவன் உடைமையை இழக்க இசைவனோ? இசையானல்லவா? அரசன் தன் ஆணைக்கு உட்படாத ராஜ்யத்தைப் யெடுத்துச் சென்று அடக்கி ஆள்வது போலத் தானே நேரே இயல் படை 110 வல்லவா வந்து அவதரித்துத் திருத்தி ஆட்கொள்ள நினைத்தான். ஆட் கொள்ளத் தோன்றிய ஆயர்தம் கோவாயிற்றே! உயிரளிப் பான் எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தான். ராமகிருஷ்ணாதி அவதாரங்களாக நாட்டில் பிறந்து படாதன பட்டுத் திருத் தப் பார்த்தான்; திருந்தினாரில்லை. அசுர ஸ்வபாவ முடையவர்களாய் அவனைத் தங்களைப் போல ஜீவாத்மாக்களில் ஒருவனாகவே நினைத்தார்கள். அவனுடைய பரத்வததை உணரவில்லை. அவனுடைய அதி மாதுஷ சேஷ்டிதங்களை யெல்லாம் இந்திர ஜாலங்கள் போல கருதினார்கள். எச்வரோஹம் (நானே ஈசுவரன்) என்று அஹங்கரித்தார்கள்; எதிரம்பு கோத்தார்கள்; பழித்தார்கள். இதைக்கண்ட இறைவன மிகவும் திருவுள்ளம் வருந்தினான். “இவர்கள் இவர்கள் ஜீவகோடியைச் சேர்ந்தவர்கள்; நாம் இவாகளில் வேறுபட்ட இனம; நம்மால் இவர்களைத் திருத்தப்போகாது. காடுகளில் யானை முதலிய விலங்குகளைப் பிடிப்பவர்கள் பார்வை மிருகம் (பழக்கப்படுத்திய விலங்கு ) வைத்துப் பிடிப்பது போல இவர்களில் சிலரைக் கொண்டே இவர்களை அகப்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று திருவுள் ளம் பற்றினான. நித்தியசூரிகளில் சிலரைக் கடாக்ஷித்துப் பூவுலகில் அவ தரித்து மக்களைத் திருத்துமாறு நியமித்தான். அவர்களும் அப்படியே தமிழ்நாட்டில் காவேரி, பாலாறு, தாமிரபரணி முதலிய நதிகள் பாயும் திவ்ய ஸ்தலங்களிலே அவதரித்தருளி னார்கள் உயர்வற உயர்நலமுடைய அயர்வரும் அமரர்கள் அதிபதியும் அவர்களுக்கு மயர்வற மதிநல மருளினான். அவர் களும் அவனருளிய ஞானத்தாலே அவனையும் அறியவேண் டிய அர்த்தங்கள் அனைத்தையும் அறிந்து அநுபவித்து அரு ளிச் செயல்களாக வெளியிட்டு உலகத்தை வாழ்வித்தருளி னார்கள். ஆழ்வார்கள் பதின்மர், அவர்களாவர்:-பொய்கையார், பூதத்தார், பேயார், புகழ்மழிசை ஐயன், அருள்மாறன், சேர 111 வர்கோன், துய்யப்பட்ட நாதன், அன்பர்தாள் தூளி, பாணன நன்கலியன் எனப்படுவர். சிலர் ஆண்டாளையும், மதுரகவி யாழ்வாரையும் சேர்த் துப் பனனிருவர் எனபர், ஆண்டாள் நாச்சிமார் கோஷ்டி யில் சேர்ந்து விட்டவள். அனறியும் பெரியாழ்வார் அபிமா னத்தில் ஒதுங்கியபடியால் அவரில் அடங்கியவளாவள். மதுரகவிகள் முதல் நிலையான பகவானை விட்டு முடிந்த நிலை யான நம்மாழ்வாரையே எலடாமாகப் பற்றி அயரையே பாடுகையால் நம்மாழ்வாரில் அடங்குவர் எனவே ஆழ்வார் கள் பதினமர் எனறே நிர்வஹிப்பர். ஆழ்வார்களின் அவதாரம், அம்சம், காலம், ப்ரபாவம் முதலியவற்றை பவிஷ்யத் புராணம் முதலியவையே பேசுகினறன. ஆழ்வார்களில் தலையாயவர் நம்மாழ்வார் என்று சிறப் பிக்கப்படும் சடகோபர். இவர் அவயவி (அங்கி). மற்றைய ஆழ்வார்கள் இவருக்கு அவயவபூதர். இவருடைய ப்ரபாவத்தை நோக்கும்போது இவரைப் பலருடைய அவ தாரமாகச் சங்கிக்கும்படி இருக்கும். ஆனால், நித்ய சம சாரியா யிருந்த இவரை சர்வேசுவரனுடைய கிருபாகடா க்ஷம் நித்ய சூரிகளிலும் சீரியராக்கிற்று எனபதே உண்மை. இவர் பகவதநுபவததுக்குப் போக்கு விட்டுப் பாடிய ப்ரபந்தங்கள் நானகு. அவை திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என்பன. இவை முறையே ருக், யஜுஸ், அதர்வணம், சாமம் என்னும் நான்கு வேதங்களின் சாராம்சம. வேதங்களால் அறியப்படுகின்றவன் பரமபுருஷனான நாராயணன். அவன் ராமனாக அவதரித்த போது அவ்வே தங் கள் ராமாயண ரூபமாக வாலமீகி வாக்கிலிருந்து தோன் றின. அதுபோல் நானகு வேதங்களும் நமமாழ்வார் வாக்கி லிருந்து நான்கு ப்ரபந்தங்களாக அவதரித்தன என்பர் பெரு மககள் ' ஓதுவார் ஓத்தெல்லாம் எவ்வுலகத் தெவ்வெவை யும் சாதுவாய் நினபுகழின் தனகயல்லால் பிறிதில்லை” என் 112 பது திருவாய்மொழி. வெவ்வேறு உலகங்களில் ஓதப்படு கினற வெவ்வேறு வேதங்களும் நாராயணனுடைய நல் புகழையே பேசுகினறன என்பது இதன் கருத்து. இதனால் வேதங்கள் பலவகை யென்பது பெறப்படும் அவ்வகைகளிலே திராவிடம், ஸம்ஸ்க்ருதம் என்னும் பிரிவு களும், ருக், யஜுஸ் முதலிய பேதம் போலே இயல்பாகவே ஏற்பட்டவை. வேதங்கள் என்றுமுள்ளவை வேதாந்த பாகங்களான சில உபநிஷத்துக்களைச சில ரிஷிகள் தங்கள் தபோ பல ததாலே கண்டறிந்து வெளியிட்டார்கள். அது போலவே நித்யமான திராவிட உபநிஷத்துக்களை சடகோப ரிஷி பகவத் க்ருபாபலத்தாலே கண்டறிந்து வெளிப்படுத் தினார். ஜகத் சரீரியான (உலகத்தைச் சரீரமாக உடைய) ஈசுவரன் வேதமயனாக உள்ளானென்று அருள நினைத்த திருமங்கை மன்னன் வேதங்களுக்குக் கருவிகளான பாஷை களைக் குறிப்பிடும்போது, “செந்திறத்த தமிழோசை வட சொல்லாகி” (உள்ளனன் இறைவன) என்கையாலே இரு மொழிகளும் இருமொழி வேதங்களும் அநாதி யென்பது விளங்கும். வேதங்களுக்கு சிக்ஷை, வியாகரணம், நிருக்தி, சந்தஸ், கல்பம், ஜோதிஷம் எனனும் ஆறு அங்கங்கள் உள்ளது போலத் தமிழ் வேதங்கள் நான்கிற்கும் இருந்தமிழ் நூல் புலவரான திருமங்கை மன்னனின பெரிய திருமொழி, திருக்குறுந் தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருஎழு கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல் எனனும் ஆறு ப்ரபந்தங்களும் அங்கங்களாக அமைந்துள்ளன. மற்றைய ஆழ்வார்கள் எணமருடைய ப்ரபந்தங்கள் உபாங் கங்களாகும். பரதத்வமான நாராயணனின் நிலைகள் ஐவகைப்படும். அவை: பரம், வ்யூஹம், விபவம், அந்தர்யாமித்வம், அர்ச்சா வதாரம் எனப்படும். பிரமேய வஸ்து ஐவகைப் பட்டிருப்பது 113 ஒவ் போலவே அப்பிரமேயத்தை யுணர்த்தும் ப்ரமாணங்களும் ஐவகைப்பட்டிருக்கும். அவை: சுருதிகள், ஸ்ம்ருதிகள், இதிகாஸங்கள், புராணங்கள், திவ்ய ப்ரபந்தங்கள் என்பன. இவை ஒவ்வொன்றுமே இறைவனின் ஐவகை நிலைகளையும் விளக்குபவையே. ஆயினும் ஒவ்வொன்றுக்கும் வொன்று ப்ரதானமாயிருக்கும். வேதங்களுக்குப் பரத்வத்தை பிரகாசிப்பிப்பதிலே நோக் காயிருக்கும். ஸ்ம்ருதிகளுக்கு அந்தர்யாமித்வத்திலே நோக்கு. புராணங்கள் வ்யூகப்ரதானம் இதிகாசங்கள் அவதார பரங்கள். திவ்ய ப்ரபந்தங்கள் அர்ச்சாவதார ப்ராதான்ய முடையவை. ப்ரமேயத்தின் எல்லை நிலம் அர்ச்சாவதாரம் (ப்ரமாணததால் அறியப்படுவது ப்ரமேயம).ப்ரமாணத்தின் முடிந்தநிலம் அருளிச் செயல்கள். பரன் நாராயணனே என்று கையிலங்கு நெல்லிக்கனி யென்னக் காட்டித் தந்து அப்பரனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை யெல்லாம் அவன் காட்டக்கண்டு தேனும் பாலும் கன்னலும் அமுதுமாக அனுபவித்து நாராயணனைப் பாடிய நம் ஆழ்வார்கள் அப்பாடல்களில் நாம் அறியவேண்டிய அர்த்தங்களை யெலலாம் பொதிந்து வைத்துத் தந்துள்ளார் கள். அறியவேண்டிய அர்த்தங்கள் ஐந்து. அவை: ஆசிர யிக்கப்படும் இறைவன, ஆசிரயிக்கும் உயிர், அச்ரயண பலமான புருஷார்த்தம, அதனைப் பெறும் உபாயம் புரு ஷார்த்தத்தைப் பெறுவதற்குள்ள தடை. சகல வேத சாஸ்த் ரங்களும இவ்வர் தத பஞ்சகத்தை விளக்கும். "மிகக இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும் தக்க நெறியும் தடையாகித் தொக்கியலும் ஊழவினையும் வாழ்வினையும ஓதும் குருகையர்கோன் யாழினிசை வேதததியல்” என்றபடியே திருவாய்மொழி அர்த்த பஞ்சகத்தையே ஓது கின்றது என்று அருளிச் செய்வர் பூருவாசார்யர்கள். நா-8.
114 திருவாய்மொழிக்குச் சொன்னது மற்ற ப்ரபந்தங்களுக்கும் பொருந்தும். திருவாய்மொழியில் முதல் பாசுரத்திலேயே அர்த்த பஞ்சகத்தைச் சுருங்க அருளிச்செய்து, பிறகு ஆயிரம் பாசுரங்களாலும் விரிவாக அருளிச் செய்துள்ளார். உயர்வற உயர்நல முடையவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி என்று பர ஸ்வரூபத்தை யருளிச் செய்தார். மயர்வற மதிநலம் அருளினன் என்பதில் அவாய் நிலையால் மறைந்துள்ள எனக்கு என்பதனாலும், என் மனனே என்பத னாலும் ஸ்வஸ்வரூபத்தை (ஆத்ம ஸவரூபத்தை) அருளினார் தொழுதெழு என்று பகவத் கைங்கர்யமாகிற புருஷார்த் தத்தை அருளிச் செய்தார். அருளினன் என்று அவனருளே உபாயமெனறு அருளிச் செய்தார். துயரறு சுடரடி என்ற தனால் துயர் எனறு விரோதியையும, அறு சுடரடி என்று விரோதியைப் போக்குவான் அவனே என்பதையும் அருளிச்செய்தார் பரத்வம், காரணத்வம், ரக்ஷகதவம், வியாபகத்வம், நியாமகத்வம் தொடக்கமான பரமாத்ம ஸ்வரூபத்தையும், சேஷத்வம், பரதந்தரத்வம், அணுத்வம், ஜ்ஞாத்ருத்வம், ப்ரகருதியைக் காட்டிலும் வேறுபட்ட தன்மை முதலிய ஜீவாத்ம ஸ்வரூபத்தையும், ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி செய்வதே புருஷார்த்தம் என்பதையும், நாகணைமிசை நம்பிரான் சரணே சரண் என்கிறபடியே அவனே உபாயமென்றும், அவனையே உபாயமாகப் பற்றும் போது கருணைவடிவினளான திருமாமகளை முன்னிட்டே பற்ற வேண்டுமென்றும், உபாய ஸ்வரூபத்தையும், பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்குடம்பும் எனகிற ப்ருக்ருதி சம்பந்தமும், அதைப் பற்றி வரும் அஞ்ஞானம், யான், எனது என்னும் செறுக்கு இருவினைகள், ருசி, வாசனை முதலியவைகளும் விரோதி எனபதனையும் நமமாழ்வாரும், மற்ற நம் ஆழ்வார் களும் தங்கள் ப்ரபந்தங்களிலே ஆங்காங்கு விளக்கிச் செல் கின்றார்கள் என்பதைக் கற்பவர்கள் நன்குணரலாம். வழுவிலா அடிமை 115 முமுக்ஷக்கள் அவசியம அறிய வேண்டிய ஞானம் மூன்று. அவை: ஸ்வரூபம், உபாயம், புருஷார்த்தம் என்பன. அர்த்த பஞ்சகமும் இவற்றில் அடங்கும். இவற்றை அநந்யார்ஹ சேஷத்வம், அநந்ய சரணத்வம், அநந்ய போக் யத்வம் எனபர். சகல வேதஙகளின சுருக்கமான திருமந்த்ரம் என்னும் எட்டெழுத்து மந்த்ரம் இம்மூனறையும மூனறு பதங்களாலே விளக்குகின்றது. இத்திருமந்த்ரத்தின் இவ் வர்த்தங்களைத் தான் நம்மாழ்வார் திருவாய்மொழி ஆயிரம் பாசுரங்களால் எளிமையாக விளக்கி யருளியுள்ளார். மற்ற ப்ரபந்தங்களும் இதனை யடியொற்றியவையே. ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு சர்வஸ்வமாய் (எல்லாச் செல்வ மாய்) பாலிலிருந்து திரட்டிய வெண்ணெய் போல உப நிஷத்திலிருந்து திரட்டி எடுக்கப்பட்டதான ஒரு மந்த்ர முண்டு அதற்கு மந்த்ர ரத்தம் என்றே பெயர். பெயர். இஃது இரண்டு வாக்கியங்களாய் இரண்டு அர்த்தங்களை அறிவிக் கின்றது. ஆதலால த்வயம் என்று பேர் பெற்றுள்ளது. முதல் வாக்கியம் திருமகள் கேள்வனே உபாயம் என்கிறது, இரண்டாம் வாக்யம் திருவோடு கூடிய அவன் திருவடிகளில் யான், எனது என்னும் செருககற்றுப் பண்ணும் தொண்டு களே பேறு என்கிறது. இவ்வர்த்தங்களைத்தான் ஆழ்வார் திருவாய்மொழியில் விரிவாக அருளிச்செய்துள்ளார். திருவாய்மொழி முதல் மூன்று பத்துகளாலே (பத்து எனபது பத்துப் பதிகங்கள் கொண்ட நூறு பாட்டுகள்) த்வயததின பின வாக்யத்தில் சொல்லப்பட்ட புருஷார்த் தத்தை விளக்கியருளினார். அடுத்த மூன்று பத்தால் முதல் வாக்கியத்தின பொருளான உபாயத்தை விளக்கியருளினார். மற்றைய நான்கு பத்துகளாலே மற்றும் அவசியமாகச் சொல்லவேண்டிய அர்த்தங்களை அருளிச் செய்துள்ளார். த்வயம் பத்தர்த்தங்களைத் தெரிவிக்கின்றது. இவரும் பத்துப் பத்து களாலே பத்தர்த்தங்களை அருளிச்செய் துள்ளார். த்வய மந்த்ரத்திற்கு சரணாகதி என்று ஒரு 116 பேருண்டு. அம்மந்த்ரம் சுருக்கமாய் இருக்கும். த்வயார்த் தமான திருவாய்மொழி ஆயிரம் பாசுரங்களாக நீண்டிருக்கும். அதனாலே நம்மாசார்யர்கள் தீர்க்க சரணாகதி என்றே திருவாய்மொழிக்குப் பெயர் சூட்டியுள்ளார்கள். ''வாசுதேவஸ் ஸர்வமிதி ஸமஹாத்மா ஸுதுர்லபா'' புலன்களால் துய்க்கும் இன்பங்கள் அனைத்தும் வாசுதேவனே என்று கருதும் மஹாத்மானவன் கிடைப்பது மிக அருமை என்றான் கண்ணன. அத்தகு மஹாத்மா ஆழ்வாராகை யாலே , உணணும் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்” எனகிறபடியே தாரக போஷக போக் யங்களெல்லாம் நாராயணனாகவே கொண்டிருந்தார். தாரகம்--உயிர் தரிக்கைக்கு வேண்டியது, போஷகம்- உடம்பை வளர்க்குமது. போக்யம் - அநுபவிக்கத்தக்க பொருள். நாராயணனுடைய மங்கள குணங்களை முதல் திரு வாய்மொழியில் சுருங்க அநுபவித்தார். அக்குணங்களையே விரிவாக ஆயிரம் பாட்டுகளில் அநுபவித்துப் பாடி நமக் களித்துள்ளார். ஆயிரம பாக்களும் ஆயிரம குணங்களைக் கூறும். பகவத் குணங்களே இவர்ககுத் தாரகம். குணா நுபவ மில்லாவிடில் உயிர் வாழ மாட்டாரே. முதல் ப்ரபந்தமான திருவிருத்தத்தில் ஸ்வரூப உபாய புருஷார்த்தங்களுக்கு விரோதியான பொய்ந் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுககுடம்புமாகிய சரீர சம்பந்தத்தை அறுத்துத் தந்தருள வேண்டுமென்று நாரா யணனாகிற இமையோர் தலைவனைப் பிரார்த்தித்தார். திருவாசிரியத்தில் உலக மக்கள் உலகம் படைத்திடந்து உண்டு உமிழ்ந்து அளிக்கும முதற் பெருங் கடவுளை விட்டுப் புல்லறிவான்மையினால தாமறிந்த புன் சிறு தெய்வங்களைப் பேணி மாயப் பிறவியுள் அழுந்துவதற்கு வருந்தி தாம் அவர் களைப் போலலலாது ஓராலிலை சேர்ந்த பெரு மாமாயனையே பற்றப் பெற்றதற்கு உவந்து அவனுடைய திவ்ய மங்கள விக்ரஹ சௌந்தர்யத்தைத் திருப் பரியட்ட திருவாபரண 117 சேர்த்து திவ்யாயுத சோபைகளோடு அநுபவித்துப் பாடினார். பெரிய திருவந்தாதியில் விக்ரஹ சௌந்தர்ய அநுபவத் தால் ஏற்பட்ட பிரீதிக்குப் போக்குவிட்டுக் கவிபாட நினைத் தார். தமது நெஞ்சு பகவத் விஷயத்தில் தம்மினும் முந்துற்றதா யிருந்தது. நெஞ்சைத் தம்மோடு இணைத்துக் கொண்டு கனமான காதணி யணியக் காது பெருகுவது போல பகவதநுபவத்துக்கு உறுப்பாகத் தமக்குப் பகவத் விஷயத்தில் பெருகிய காதலைப் பாசுரமிட்டுப் பாடினார். இம்மூன்று ப்ரபந்தங்களும் ஆழ்வாருடைய பரபக்தி தசையில் அவதரித்தன. பரபக்தியாவது: ஊனக் கண்களால் காண்பது போலவே ஞானக் கண்களால் காண்கை. திருவாய்மொழியில் தொண்ணூற்றென்பது பதிகங்கள் ஆழ்வாருடைய பரஜ்ஞான தசையில் அவதரித்தவை. பரஜ்ஞானமாவது: மாநஸ சாக்ஷாத்காரமாகக் கிடைத்த பகவத் விஷயத்தோடு கலந்து ப்ரத்யக்ஷம் போலே அநுபவித் தல். "முனியே! நான்முகனே!” என்னும் கடைசித் திருவாய் மொழி ஆழ்வாருடைய பரமாபக்தி தசை. தசை. பரமாபக்தி யாவது! கலந்த பிறகு பிரியமாட்டாத நிலை. திருவாய்மொழி சாந்தோக்ய உபநிஷத்துக்குச் சமம் என்று சொல்லப்படுகின்றது. சந்தோக சாமத்தில் சொல்லப் படுகின்ற சூர்ய மண்டல மத்யவர்த்தியான நாராயணனுக்கு 'உத்' என்று திருநாமம். “உயர்வற உயர்நல முடையவன்” என்று 'உ'கரத்தில் தொடங்கி “பிறந்தாருயர்ந்தே" என்று 'த'கரத்தில் முடித்து 'உத்' என்னும் திருநாமத்தையே ஆரயிம் பாக்களால் விரித்துப் பாடியருளினார் திருமந்திரத்தின் உள்ளபடியான முடிவான பொருள் ஆத்மஸ்வரூபம். ஆதிபகவனுடைய அடியார்க்கடிமை . உபாயத்தின் எல்லை நிலமானவர்களும் அடியார்களே. புருஷார்த்தத்தின் எல்லையும் அடியார்க்குத் தொண்டு செய்வதே என்பதைத் திருவாய்மொழியில் பயிலும் சுடரொளி'', "நெடுமாற் கடிமை'' என்னும் இரண்டு திருவாய்மொழிகளில் பொதிந்து நமக்களித்தார்.
118 6 இப்படிப்பட்ட பரமார்த்தங்களையெல்லாம் உலகத்தார் விரும்பாதிருக்கச் செய்தே பரமார்த்தங்களையெல்லாம் மேல் விழுந்து உபதேசிக்கைக கடி இவருடைய ஒப்பற்ற கிருபையே. ஈசுவரக் கிருபையைப் பகல்விளக்காக்கி விட்டது இவருடைய கிருபை, “அருள் கொண்டாயிரம் இன் தமிழ்ப் பாடினான; அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே" என்று மதுர கவிகள் இவருடைய கிருபையைக் கொண்டாடு கின்றார். முதல் திருவாயமொழியில் பெரிய திருநாள் போலே பகவதநுபவம் பணணினவர், அடுத்த திருவாய்மொழி யிலேயே அத்தை விட்டுப் பரோபதேசத்திலே இழிந்தார். இடையிடையே பல உபக்நங்கள் (அநுபவங்கள்) கடைசியில் திரு நாட்டுக்கு எழுந்தருளும் சமயத்திலும், கணணன் கழலிணை" எனனும திருவாய்மொழியில் அவசர அவசர மாகச் சிறு சிறு பாசுரங்களாலே உபதேசித்து விட்டு எழுந் தளினாரென்றால் இவருடைய கிருபையை என்னென்பது! மற்றைய ஆழ்வார்களும் இவரைப் போலவே பரம கிருபையினாலே தங்கள் அனுபவத்தை விட்டுப் பரமார்த்தங் களையெல்லாம் தங்கள் ப்ரபந்தங்களிலே உபதேசித்துள்ளார் கள். இவ்வாழ்வார்களுடைய சுகாநுபவமும் பரோப தேசத்தை உள்ளடக்கியதாகவே இருக்கும். கட்டுரை நீண்டு விட்டதால் மற்றைய ஆழ்வார்களுடைய ப்ரபந்தங்களையும் அவற்றின் சாரமான அர்த்தங்களையும் எழுத அவகாசமில்லை உதாரணத்திற்கு ஒன்றிரண்டினை ஆராய்வோம். பிரேமத்தின் மிகுதியினாலே எம்பெருமானுடைய ரக்ஷசு தவத்தை மறந்து, அவனுடைய சௌந்தர்ய சௌகுமார் யாதிகளைக் கண்டு அவனுக்கு என்ன வருகின்றதோவென்று பரிந்து மங்களாசாஸனம் செயய வேண்டும். அதுவே ஸ்வரூபமும், ஸ்வரூபாநுரூபமான பலமும் என்பது பெரியாழ்வாருடைய திருப்பல்லாண்டின் சாராம்சமாகும் பகவத் விஷயத்தில் இச்சையுடையவர்கள் அதிகாரிகள், அவர்கள் பாகவதர்களை முன்னிட்டுப் பிராட்டி புருஷகார 119 மாக நாராயணனைப் பற்றி அவன் அருள் பெற்று அவன் முகமலர்த்திக்காகவே அவனுக்குக் குற்றேவல் செய்வதே புருஷார்த்தமென்பது வேதமனைத்துக்கும் வித்தாகிய கோதை தமிழாகிய திருப்பாவையின் சாரம். திருநாமத்தின் ப்ரபாவம், திருநாமம் சொன்னார் பெறும் பேறு, அடியார்களின் ஏற்றம், சரணாகதரிடத்தில் அவனுக் குள்ள பக்ஷபாதம் முதலியன திருமாலையின் தாத்பர்யம். ஏனைய ப்ரபந்தங்களையும் இங்ஙனமே உய்த்துணர்க. சின்னஞ் சிறு வயதிலே திருமணம் செய்விக்கப்பட்டு விதவைகளான சிறுமிகள் தங்களுக்கு நேரிட்ட துர்கதியை யறியாமல் மற்றைய குழந்தைகளைப் போலவே விளையாடி ஓடித் திரிவர். ஆனால், அச்சிறுமிகளின் பெற்றோர்கள் அவர்களைக் காணுந்தோறும் அவர்களின் அநர்த்தத்தை நினைத்து ஆற்றமாட்டாமல் வருந்திக் கண்ணீர் வடிப்பர். அந்த பால்ய விதவைகள் நிலையிலே நாம் இருக்கின்றோம். நாம் பெறவேண்டிய பேற்றினையிழந்து, இழந்தோமென்கிற வருத்தமுமில்லாமல் நாம் அகப்பட்டுள்ள சம்சார சாகரத் தின் கொடுமையையும் அறியாதே ஐம்புலன் இன்பங் களையே பேரின்பமாக நினைத்து மகிழ்கின்றோம் இஃது நாய் பசையற்று உலர்ந்த எலும்பைக் கடித்து அவ்வெலும்பினாலே கிழிக்கப்பட்ட தன் வாயில் ஊறிய ரத்தத்தையே சுவைத்து, எலும்பில் சுவையுள்ளதாக நினைத்து மகிழ்வுறுவது போன்றுள்ளது. தங்கள் விதவைச் சிறுமியரின் அநர்த்தம் கண்டு ஆற்ற மாட்டாத தாய் தந்தையர் போன்று நம் ஆழ்வார்கள் நம் அநர்த்தங் கண்டு ஆற்றமாட்டாமல், நம் மாட்டுப் பேரருள் கொண்டு நாம் அறிய வேண்டிய-வேதங்களால் அறியவியலாத அரும் பொருள்களை யெல்லாம் இனிய செந்தமிழ்ப் பாக்களில் அமைத்து நாராயணனைப் பாடி நமக்கு அளித்தருளினார்கள். அறிவு காரணமாக விலங்குகளின் வேறுபட்ட மக்கள் பிறவியில் பிறந்த நாம் ஆழ்வார்கள் செய்த பேருப
120
அதுவே
மன
காரத்தை நினைத்து நினைத்து நைந்து உள் கரைந்து உருகக்
கடமைப்பட்டுள்ளோம்.
அறிவின் பயன்
ஆழ்வார்களையும் அவர்கள் அருள் மொழிகளையும் என்றும்
மறவாமல் போற்றுவோமாக ! இன்றேல் பிறவிப் பயனை
இழந்தோமாவோம். ''மானிடவ ரல்லரென்று என்
த்தே வைத்தேனே" என்கிறபடியே மானிடராக மதிக்கப்
படமாட்டோம். அந்நிலை நமக்கு வாரா தொழிவதாக!
ஆழ்வார்களைப் பின் சென்று வாழ்வாங்கு வாழ்ந்து உய்தி
பெறுவோமாக!
ஆழ்வார்கள வாழி ! அருளிச்செயல் வாழி!
தாழ்வாதுமில் குரவர் தாம வாழி ! ஏழ்பாரும்
உய்ய அவர்களுரைத்தனவகள் தாம் வாழி !
செய்ய மறை தன்னுடனே சேர்ந்து.
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
மூவருள் முதல்வன் மூரிநீர்வண்ணன்
ஸ்ரீவில்லிபுத்தூர் A. ஸ்ரீராமுலு தேசிகன்.
மானிட சரீரத்தின் பாவங்களைக் கழுவிப் பவித்திரமாக்
கும் புண்ணிய நதிகள் பல. அவற்றுள் சிறந்ததும் முதன்
மையாயும் விளங்குவது கங்கை நதியே.
"இன்னறு நீர்க் கங்கையா றெங்கள் ஆறே
இங்கிதன் மாண்பிற் கெதிரெது வேறே”
என்று போற்றுகிறார் பாரதியார்.
இத்தகைய பெருமைமிகு புண்ணியந்தி ஸ்ரீ மகாவிஷ்ணு
வின் ஸ்ரீபாத தீர்த்தமென்பது பிரசித்தமாகும். இவ்விஷ
யத்தை ஆழ்வார்களின் அருளிச் செயல்கள் மட்டும் அறி
வுறுத்தவில்லை; தமிழர் சமயத்தையும் கொள்கைகளையும்
வாழ்க்கை நெறிமுறைகளையும் தெளிவாக உணர்த்தும் சங்க
கால இலக்கியங்களும் அறிவுறுத்தும். ஓங்கு பரிபாடல்
என்று சிறப்பித்துக் கூறப்படும் எட்டுத் தொகை நூல்
களுள் ஒன்றான பரிபாடல்கள் பறைசாற்றும்.
மாவலியினிடம் தானத்தைப் பெறும்போது திருமால்
த்ரிவிக்ரமனாய் வளர்ந்தான் மண்ணுலகை ஓரடியால்
அளந்தான. விண்ணுலகில் மற்றோர் அடியைப் பரப்பினான்.
பரப்பிய அவனடி மலரைப் பிரமன் தன் கைக்கமண்டல நீரி
னால் கழுவினான். அந்நீரானது ஆகாய கங்கையாகி விண்ணு
லகில் பெருக்கெடுத்து ஓடிற்று.
ஓடிய கங்கை
மண்ணுலகிற்கு வர ஆசைப்பட்டாள்.
ஏன்? தன் பக்தனின் முயற்சியைத் திருவினையாக்கவே. கபில
முனிவரின் சாபத்தால் வெந்து சாம்பலான அவனது மூதா
122 பாவனமடையச் தையர்களின பாபங்களைப் போக்கிப் செய்யவே. அவள் விண்ணுலகிலிருந்து வரும் வேகத்தை பகீரதனது சவத்திற் கிசைந்து சிவன தாங்கினான்; தன் சடாமுடியில் ஏந்தினான்; அவள் வேகததைத் தணித்தான்; சிறிது சிறி தாகப் பூமியில் விட்டான். "எரிமலர்த் தாமரை இறை வீழ்த்த பெருவாரி விரிசடைப் பொறை யூழ்த்து விழுநகர் மலர் ஏய்ப்ப தணிவுறத தாங்கிய தனிநிலைச் சல தாரி.” - பரிபாடல் 9. மனிதன் உலகில் நின்று உலகிலே தோன்றிய முக்குணங் களின் வயப்பட்டு இயங்குகின்றான். தமோ குணத்திற்குச் சிவனும், ராஜோ குணத்திற்கு பிரமாவும், சத்வ குணத் திறகு மகாவிஷ்ணுவும் அதிபதிகளாவர். தமோ குணம் உடற்பற்றினையும், ரஜோ குணம் அறிவுப் பற்றினையும் உண்டாக்கும் சத்வகுணம் ஆன்மப் பற்றினை உண்டாக்கி வீடு பேறடையசசெய்யும். புலனுணர்வுகளை அறிவாகிய நீரில் கழுவினால் உடற் பற்றுச் சிறிது சிறிதாக நீங்கி ஆன்மப் பற்று ஏற்படும். இக் கருத்தினை பிரமா மகா விஷ்ணுவின பாதங்களைக் கழுவியும், சிவன் ஸ்ரீபாத தீர்த்தத்தைச் சிரசில் தாங்கிச் சிறிது சிறி தாகப் பூமியில் விட்டும் குறிப்புணர்த்துகிறார்கள். இப் பாவனையுடன் கங்கையில் நீராடினால் அழுக்குப் போகும். இல்லாவிடில் உடல் அழுக்குத் தான் போகும். "உறுதியான அறிவினாலும், ஆத்மாவின் கண் நிலை நாட்டப்பெற்ற மனதாலும் சிறிது சிறிதாக அமைதி பெறுக. வேறு ஒன்றையும் நினையா திருந்திடுக.” (கீதை 6-25) பூஜைக்குப் பூப்பறிக்க வந்த கஜேந்திரனது காலை முதலை பற்றிக் கொண்டு தண்ணீருக்குள் இழுக்க, இழுக்க, கஜேந்திரன் கரைக்கு இழுக்கப் பல ஆண்டுகள் இருவருக்கும் கடும்போர் நிகழ்ந்தது. கஜேந்திரன தன் வலிமையை இழந்து நின்ற மன 123 போது, ''ஆதிமூலமே!” என்று அழைத்தது. அந்த நாமத் திற்குச் செவி சாய்த்து அரை குலையத் தலை குலைய அம்மடுக் கரைக்கு வந்தவர் யார்? பிரமா வந்தாரா? சிவன் வந்தாரா? இல்லையே திருமால் தான் வந்தார். அவர்கள் இருவரும் ஏன் வரவில்லை? தாங்கள் மூலம் அல்ல வென்றும், தங்களுக் கும் மூலமாக, முதல வனாகத் திருமால் இருக்கிறார் என்பதை யும் உணர்ந்தார்கள். அதனால் அவர்கள் வரவில்லை. திருமால் சக்ராயுதத்தால் முதலையைச் சங்கரித்து கஜேந்திரனை விடு வித்து மோக்ஷமும் தந்தருளினார். " . ... பெருந் தனிமூலத் தரும் பொருளே பரமாவென் றெடுத்தொரு வாரணமழைப்ப நீயோ வன்றே னென்றாய்' (கம்பராமாயணம்-விராதன் வதைப்படலம் 49) மேருமலையை வில்லாகவும் ஆதிசேஷனை நாணாகவும் கொண்டு அக்னி வடிவமான ஒரே அம்பினால் திரிபுரத்தை எரித்தார் சிவன் என்று கீழே குறிப்பிட்ட புறநானூறு 55:1-4 கூறுகின்றது ஓங்குமலைப் பெருவிற் பாம்புஞாண் கொளீஇ ஒருகணை கொண்டு மூவெயி லுடற்றிப் பெருவிற லமரர்க்கு வென்றி தந்த கரைமிடற் றண்ணல் .........'' முன்பு பல கணைகளினாலே அழிக்க முடியாத எயில் களைத் திருமாலாகிய ஒரே அம்பினால் அழித்தானென்பதை, * ஒரு கணை கொண்டு மூவெயிலுடற்றி' என்ற சொற்றொடர் குறிப்புணர்த்தும். திரிபுர தகனம் என்றால் என்ன? நரகத்தின் வாயில் களான காமம், குரோதம், லோபம் ஆகியவற்றை ஞானத் தீயினால் பொசுக்குவதாகும். ஆதிசேஷன் நாணாகியதனால் தான் சிவன் திரிபுரமெரித்த புகழை அடைந்தார். 'செல் விடைப் பாகன் திரிபுரம் செற்றுழி கல் உயர் சென்னி இமயவில் நாண் ஆகி தொல்புகழ் தந்தாரும் தாம்'' 124 .. ..... என்று பரிபாடல் திரட்டு ஒன்று கூறும் இதன் கருத்தாவது. ஸ்ரீமந் நாராயணனைத் தியானம் செய்வதின் மூலமே உடற் பற்றினை நீக்கி ஆன்மப் பற்றினை அடைய முடியுமென்பது தெள்ளிதின் விளங்கும். பிரமன திருமாலின் உந்திக் கமலத்திலிருந்தே தோன் றின னென்பதைக் கீழ்காணும் பரிபாடல் விளக்கும். “தாமரைப் பூவினுள் பிறந்தோனும் தாதையும் நீயென மொழியுமால் அந்தணர் அருமறை'' பிரமனிடம் சிவன் தோன்றினானென்பதை ஆழ்வார், ஒருதா னாகித் தெய்வ நான் முகக் சொழுமுளை யீன்று, மூக்கணீசனொடு தேவு பல நுதலி மூவுலகம் விளைத்தவுந்தி மாயக் கடவுள் மாமுதலடி யே” என்று அருளிச் செய்கின்றார். ஸ்ரீ மகாவிஷ்ணுவிடம் பிரமா தோன்ற அவரிடம் சிவன் தோன்றினான். அப்படியானால் மூவரில் முதல்வன் யார்? எவனொருவன புத்தியை சாரதியாகவும் மனத்தைக் கடிவாளமாகவும் கொண்டு புலன்களாகிற குதிரைகள் பூட்டிய சரீரமாகிற இரதத்தைச் செலுத்துகின்றானோ அவன் சம்சாரத்திற்கு அக்கரையிலிருக்கும் விஷ்ணுவின் பரமபதம் அடைகிறான" என்று கடோபநிஷதம் பேசு கின்றது. இதன்மூலம் வீடுபேறளிப்பதற்கு உரியவன் மஹா விஷ்ணு என்ற கருத்தும் உறுதியாகின்றது. இக்கருத் தினையே ''நாறு இணர்த்துழாயோன் நல்கின் அல்லதை ஏறுதல் எளிதோ வீடுபெறு துறக்கம்'' என்று பரிபாடலும் கூறுகின்றது. மானிடப் பிறவியின் குறிக்கோள் வீடுபேறு அடைவதே. ஆழ்வார்களின் அருளிச் செயல்களாகிய கடலை, ஆன்மீக I 125 உணர்வோடு அறிவாகிய மத்தால் கடைந்து அதன் சார மாகிய “மூவரில் முதல்வன் மூரிநீர்வண்ணன்” என்று அறிகையாகிற அமுதத்தைப் பெற்றுப் பருகுவதே அறிவுடைமையாகும். அரனுக்கு அளித்த அரி அயனுடைய தலையைக் கிள்ளினான் அரன். அத் தீவினையை நீக்க (மாபாவம் விடப் பிச்சை எடுத்தான். பிச்சையிட்டுக் காப்பாற்றினான் அரி. கோகுலத்திற்கு வலிய ஆண் சிங்கத்தினை ஒத்தவன் கிருஷ்ணன் உலகங்கள் ஏழிலுமுள்ள அவ்வுயிர்கள் செய்த தீவினைகளைப் (ஈ பாவம்) போக்கி அவற்றை அருளோடு காப் பாற்றுகின்றவர் அவனைத் தவிர வேறு யாவர் உளர்? (காக்கின்றவன் தானே பரம்பொருளாவான்). ஐயோ பாவம்! இவ்வுண்மையினைக் கூறுவது (மக்கள் சிற்றறிவினர்களா யிருப்பதாலே தான் “நாராயணனே பரம் பொருள்'' என்ற உபதேசம் தேவைப்படுகிறது) நமது கடமையாகிவிட்டதே என்கிறார் ஆழ்வார். "ஏ பாவம்! பரமே! ஏழ் உலகும் ஈபாவம் செய்து அருளால் அளிப்பார் ஆர்? மாபாவம்விட அரற்குப் பிச்சைபெய் கோபால கோளரி ஏறு அன் றியே.' பொருள்களின் உண்மை நிலையினை விபரீதமாய் உணரும் அறியாமை' என்ற பயிரைச் சாகுபடி செய்யும் நிலம தமோ குணம். பயிரின வளர்ச்சியினைத் தடுக்கும் களை யினைப் போல் கடமையல்லாத காரியங்களில் மனத்தினைக் கட்டுப்படுத்துவது அக்குணத்தின் இயல்பாகும். அக்குணத் திற்கு அதிபதி அரன். குணத்தைப் பொறுத்துத் தான் அறிவு செயல்படும். கொடுத்த வரத்தினாலேயே கொடுமைகளுக்குட்படும் கொன்றை மாலையோன குணபூர்ண னாகான், அதனால் பரம் பொருள் ஆகான.
126 செயலில் பற்றுண்டாக்கி அதன் மூலம் பிறவியை ஏற் படுத்தி, சம்சார பந்தத்தைக் கூட்டி அநுபவிக்கும் உறவினை உயிர்க்கும் குணம் ரஜோகுணம் அது பாச மயக்கத்தைத் தவிர்க்க முடியாத குணம். அக்குணத்திற்கு அதிபதி அயன். கன்று மேய்த்து இனிது உகந்த காளை கண்ணனிடம் அவனது கன்றுகளை ஆணவத்தால் ஒளித்து வைத்து அதன் மூலம் பரிபவப்பட்ட அயன் குணபூர்ணன் ஆகான். அதனால் பரம்பொருள் ஆகான். ஞான ஆனந்தங்களை இயக்கமாகக் கொண்டு இயங்குவது ஆத்மா. அந்த ஆத்மாவின் கண் ஆழ்ந்த பற்றுதல் உண் டாக்கிப் பொருள்களின் உண்மை நிலையினை உணரச் செய்யும் குணம் சத்துவ குணம். அக் குணத்திற்கு அதிபதி அரி அவன தாமரைக் கண்ணன். ஆகையால் அவனே இறைவன் என்கிறார் ஆழ்வார். தாமரையில் நீர் ஓட்டாது. அதுபோல் அடியார் களுடைய குற்றங்கள் அவன் கண்களில் படா. காட்சிக்கு இனியவன் ; என்னை அடிமை கொண்டவன் ; பேரொளி உருவமானவன் ; அவனுக்கு மேலான தெய்வம் உள்ளது என்று அறிகின்றவர் யாவர் ? (ஒருவரும் இலர்) மேலும் கூறுவார் ஆழ்வார். "தகும் கோலத் தாமரைக்கண்ணன் எம்மான் மிகும் சோதி மேல் அறிவார் எவரே?" (2-2-5) “பரம் பொருளான விஷ்ணுவினிடத்தில் பக்தி இல்லா தான் ஒருவன் எல்லாச் சாத்திரங்களின் பொருள்களை அறிந் தவனாய் இருந்தாலும் அவனிடத்தில் பிராம்மணத் தன்மை அவன் பிறவியின் பயனை ஆராய்தல் வேண்டும்'' என்று கூறுகிறது பாத்ம புராணம். 'குடிச் சிறப்போடு வருகின்றவனிடத்தே அருளில்லாத தன்மை தோன்றிற்றானால், அவனை அக் குடிப்பிறப்பு உடை யவன் தானோ என்று கருதி உலகம் ஐயப்படும்" என்கிறார் வள்ளுவர். என்று இலவை , 127 ''நலத்தின் கண் நாரின்மை தோன்றின் அவனைக் குலத்தின்கண் ஐயப்படும்.'' நாராயணனே பரம் பொருள் என்ற தெளிவான ஞான மும், அதைக் கடைப்பிடித்து வாழும் அநுஷ்டானமும் இல்லாதவர்களுடைய குடிப்பிறப்பு சிறப்போடு வாழும் குடிப்பிறப்பு ஆகாதென்பதாம் எத்துணை உயர நின்றாலும் அயனும் அரனும் தங்க ளுக்குத் தாங்களே கேட்டினை உண்டாக்கிக் கொள்வார்கள். அவர்களைக் காப்பாற்ற அரி தன் உடமபிலே திருமகளோடு அவர்களையும் கூடவே வைத்துக் கொண்டுள்ளார் என்கிறார் ஆழ்வார். ஏறாளும் இறையோனும் திசைமுகனும் திருமகளும் கூறாளும் தனி உடம்பன........." (4-8-1) எளிமைக் குணமுடையவனே அருளோடு உயிரினங்களைக் சுாப்பாற்றுவான் என்பது ஏற்புடைய வாக்கு அல்லவா? நித்திய சூரிகளை (மயர்வற மதி நலம் பெற்று பகவானுக்குச் சதா அடிமை செய்பவர்களை) ஏவுகின்றவன் நாராயணன். அவன் ஆயர்களால் ஏவப்படுகின்றவனாக இருக்கிறானென்றால் அவனை ஆட்டுவிக்கும் குணம் எது? எளிமை தானே! 4. கோபாலக் கோள் அரியேறு அன்றி அருளால் அளிப்பார் ஆர்?" என்று வினவுகிறார் ஆழ்வார் காப்பாற்றும் நாராயணன் பரம்பொருளா? அவனால் காப்பாற்றப்படும் அயன், அரன் ஆகியோர் பரம்பொருளா? கர்மவினையால் கட்டுண்ட ஞான வைராக்கிய மற்றவர் களுக்காக அவர்களிடம் இரக்கங் கொண்டு பரம் பொருள் குறித்து உபதேசம் செய்யும் கடமை ஏற்பட்டுவிட்டதே என்று ஆழ்வார், ''ஏஏ பாவம் பரமே!" என்று ஆழ்துயரில் அருளிச் செயலை அருளிச் செய்கிறார்.
ஸ்ரீமதே ராமாநுஜயாநம : பகவத் பாகவத கைங்கர்யபரர்கட்கு வேண்டுகோள் நூல்களை யாக நாடெங்கும் கலி இருள் சூழ்ந்து ஆன்மீக உணர்வுகள் குறைந்து, ஆஸ்திகர் நலிந்து நாஸ்திகர்கள் மலிந்து வரும் இச்சமயத்தில், மக்களிடையே பகவத பாகவத பக்தி குன்றி, வறுமையும் அறியாமையும் தோன்றியுள்ள இன்றைய சூழ்நிலையில், ஆன்மீக ஒளியும் பக்தி உணர்வும் பரப்பும் அரிய ஸ்ரீவைஷ்ணவ வெளியிடும் பணியை மேற்கொண்டுள்ளோம, பகவத் பாகவதர்களின் பேராதரவையே கொண்டு வெளியிடும் இந்நூல்களை அபிமானங் கொண்டு முன் வந்து ஆதரவளிக்கும் பக்தகோடிகள் நன்கொடை ரூபாய் 100 அனுப்புபவர்களுக்கு 2 புத்தகங்கள் வீதமும், ரூபாய் 50 அனுப்புபவர்களுக்கு 1 புத்தகம் வீதமும் அடி யோம் அவ்வப்போது வெளியீடும் நூல்கள் யாவற்றை யும் அனுப்பிவைக்க உத்தேசித்துள்ளோம். ரூபாய் 20க்கு மேற்பட்ட புத்தகங்களுக்கு நன்கொடை அளிப்பவர்கட்குப் புத்தகங்கள அனுப்பிவைப்பதுடன் அவர்கள் திருநாமங்களையும் அடுத்த புத்தகங்களில் வெளி யிடப்படும். அன்புள்ளங் கொண்ட பகவத் பாகவத புண்ணிய சீலர்கள் அடியோம் மேற்கொண்டுள்ள இச்சீரிய பணியில் பங்கு கொண்டு பேராதரவு புரியப் பிரார்த்திக்கிறோம் . நமஸ்காரம். அடியேன - தாஸா நுதாஸன் ஸ்ரீலக்ஷ்மீநாராயண ராமாநுஜதாஸன்